Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 31 ஜனவரி, 2019

சித்தர்கள்-2

சித்தர்கள் எவ்வாறு சித்திகளை பெற்றனர் 


சித்தர்கள் தங்களது சித்திகள் (சக்திகளை ) பிறப்பிலேயே பெற்று விடுகின்றனர்
அல்லது சில ஆன்மிக வழியில் சென்று தவம் இருந்து பெறுகின்றனர் . 
அந்த ஆன்மிக வழியானது நாம் இப்பொழுது தெரிந்து கொண்டுள்ள பிராணாயாமம் ,
ஆசனம் முதலிய பயிற்சிகளை உள்ள அடக்கிய  ராஜ யோகம் கூறும் 
எட்டு  கடினமான யோகத்தையும் முறையே பயின்று அதன் உண்மைகளை கடைபிடித்து 
சித்தர்கள் சித்திகளை பெற்றிருக்கின்றனர்



சித்தர்கள் பெற்றிருக்கும் 8 சித்திகள் 


அணிமா - அணுவின் அளவிற்கு தன் உடலை சிறிதாக்கி கொள்வது
மகிமா - மலையையின் அளவிற்கு உடலை பெரிதாக்கி கொள்வது .
இலகிமா  - காற்றைப் போல் உடலை லேசாக்கி கொள்வது
கரிமா  - எவற்றாலும் உடலை அசைக்க முடியாதளவிற்கு உடலை கனமாக்கி கொள்வது .
பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன் வசப்படுத்திக்கொள்வது .
பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலிற்குள் செல்லுதல் .
ஈசத்துவம் -தேவர்களை போல் எதற்கும் உயிரை அளிக்கவும் ,
காக்கவும் ,அளிக்கவும் முடியும்
வசித்துவம் - அனைத்தையும் (பஞ்ச பூதங்களையும் ) வசப்படுத்திக்கொள்வது .


தமிழ் சித்தர்கள் 


  1. கருவூரார் 
  2. நந்தீஸ்வரர் 
  3. திருமூலர் 
  4. அகத்தியர் 
  5. காலங்கி நாதர் 
  6. பதஞ்சலி 
  7. கோரக்கர் 
  8. புலிப்பாணி 
  9. கொங்கணர் 
  10. சட்டைமுனி 
  11. தேரையர் 
  12. ராமதேவர் 
  13. சிவ  வாக்கியர் 
  14. இடைக்காடர் 
  15. மச்சமுனி 
  16. போகர் 
  17. பாம்பாட்டி   சித்தர்     
  18. குதம்பை



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் 
மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் 
பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  
பதிவு  செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக