Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 ஜனவரி, 2019

சர்வதேச ஒருநாள் கிரிகெட் போட்டியில் அறிமுகமாகி ஒரு ரன் கூட எடுக்காத ஒரே ஆட்டக்காரர்.

Image result for அபிஷேக் நாயர்

கிரிகெட் ஆடும் ஒவ்வொரு வீரரின் பிரதான கனவும் தேசிய அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தர வேண்டும் என்பது தான். ஆனால் அப்படி தேசிய அணியில் இடம் பிடிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு கடின உழைப்பும் அர்ப்பனிப்பு உணர்வும் அவசியம். சில வீரர்கள் கடினமாக உழைத்து அணியில் இடம்பிடித்து சிறப்பான சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் முன்னனி வீரர்கள் ஆவார்கள். மேலும் சில வீரர்கள் அணியில் இடம் கிடைத்தும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறி அணியில் இருந்து கலட்டி விடப்படுவார்கள். ஆனால் கடினமான உழைப்பால் அணியில் இடம் பிடித்து துரதிஷ்டவசமாக தொடர்ந்து ஆட வாய்ப்பில்லாமலும், சீனியர் வீரர்களின் வருகையால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களும் உள்ளனர். இந்த கட்டுரையில் இந்திய ஒருநாள் கிரிகெட் அணியில் இடம்பிடித்து ஒரு ரன் கூட எடுக்காத ஒரு வீரரை பற்றி பார்ப்போம்.


அபிஷேக் நாயர், வயது 35, ஆந்திராவை சேர்ந்த கிரிகெட் வீரர். 2009ஆம் ஆண்டு இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் நிறைந்திருந்த காலகட்டத்தில் அணியில் இடம் பிடித்த வீரர். வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பிர், ராஹுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், யுவ்ராஜ் சிங், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, யூசுஃப் பதான் என சீனியர் வீரர்கள் நிறைந்த இந்திய அணியில் இடம் பிடித்தார் அபிஷேக் நாயர். 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம்பிடித்த அபிஷேக் நாயர் அந்த அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார்.




மழையால் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில் அபிஷேக் நாயர் களம் இறங்குவதற்கு முன்பே இந்திய அணி டக்ஒர்த் லீவிஸ் முறைப்படி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு அடுத்த போட்டியான 4வது ஒரு நாள் போட்டி தொடங்கி சில நிமிடங்களில் மழை குறிக்கிட போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் கடின உழைப்பால் இடம்பிடித்து பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமலே நாடு திரும்பினார் அபிஷேக் நாயர். இந்த தொடரில் இந்திய சீனியர் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராஹுல் டிராவி மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதன் பின்பு 2 மாதங்கள் கழித்து தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார் அபிஷேக் நாயர்.


இந்த போட்டியில் 130 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. அணியின் ஸ்கோர் 104 ரன்களாக இருந்த போது தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க 4வது விக்கெட்டிற்கு விராட் கோஹ்லியுடன் இணைந்தார் அபிஷேக் நாயர். ஆனால் அபிஷேக் நாயரின் துரதிர்ஷ்டம், அவர் தன் சர்வதேச கிரிகெட் வாழ்க்கையில் முதல் ரன்னை எடுப்பதற்க்குள் அதிரடியாய் ஆடிய விராட் கோஹ்லி அணியை வெற்றி பெற வைத்தார். இறுதி வரை 7 பந்துகளை சந்தித்த அபிஷேக் நாயர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

இதன்பின்பு இந்திய அணிக்கு சீனியர் வீரர்கள் திரும்ப, நாயருக்கு மேலும் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. 3 சர்வதேச போட்டிகளில் விளையாடி, அதில் ஒரு போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்று 1 ரன் கூட எடுக்காத ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் அபிஷேக் நாயர். முதல்தர போட்டிகளில் 102 ஆட்டங்களில் ஆடியுள்ள அபிஷேக் நாயர் 5719 ரன்கள் (சராசரி 45.38) குவித்துள்ளார். இதில் 13 சதங்களும் 32 அரை சதங்களும் அடங்கும். சிறந்த ஆல்ரவுன்டரான அபிஷேக் நாயர் 167 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அபிஷேக் நாயருக்கு மேலும் சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக சிறந்த ஆட்டக்காரராக உருவெடுத்திருப்பார்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்எங்களின்
 கருத்துகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!