
சாகுபடி செய்யும் முறை:
எள், மணல் கலந்த நிலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும். நவம்பர், டிசம்பர், மார்ச், ஜூன் ஆகிய மாதங்களில் விதைக்கலாம்.
· தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2
டன் மாட்டு எருவைத் தூவ வேண்டும். பிறகு,
15 நாட்களுக்குள் இரண்டு உழவு ஓட்ட வேண்டும்.
· நிலம் புழுதியான பிறகு,
10 அடிக்கு 8 அடி அளவில் பாத்தி எடுத்து, பாத்திகளில் எள்ளைத் தூவ வேண்டும்.
·
ஏக்கருக்கு அரைகிலோ விதை எள் தேவைப்படும்.அரை கிலோ விதை
எள்ளுடன், ஒன்றரை கிலோ மிருதுவான மணலை கலந்து தூவலாம்
தூவிய உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதற்கு பிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
· செடி இரண்டு அங்குலம் வளர்ந்த பிறகு
100 லிட்டர் ஜீவாமிர்தத்தை வாய்க்கால் பாசனத்துடன் கலந்து பயிருக்குக் கொடுக்க வேண்டும்.
15-ம் நாள் களை எடுக்க வேண்டும். களை எடுத்த 5
நாள் கழித்து ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும்.
·
அதேபோல
30 முதல் 35-ம் நாளுக்குள் இரண்டாம் களையெடுக்க வேண்டும். களையெடுத்த பிறகு பாசனம் செய்யும்போது, அதில்
100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து கொடுக்க வேண்டும்.
·
40-ம் நாள்,
10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டிதெளிக்க வேண்டும்.40-ம் நாளுக்கு மேல் இலைசுருட்டுப் புழுத் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம். மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம்.
· அதற்கு பிறகு அதிக பராமரிப்பு தேவையில்லை.
70-ம் நாள் பயிர், பழுப்பு நிறத்தை அடையும்.
90-ம் நாள் அறுவடைக்குத் தயாராகிவிடும். அறுவடை செய்த பயிர்களை வயலிலே 2
நாட்கள் பரப்பி வைக்கவேண்டும்.
·
பிறகு, தனித்தனியே பிரித்து வெயிலில் காய வைத்தால், எள் மட்டும் தனியே கொட்டிவிடும். இதுபோன்று மூன்று நான்கு முறை செய்தால், அனைத்து எள்ளும் செடியை விட்டு தனியாக வந்துவிடும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள். எங்களின்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக