Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 ஜனவரி, 2019

வழக்கத்தைவிட அதீத சோர்வாக உள்ளதா? லிவர் பிரச்சனைக்கான அறிகுறிகள் இவை!


மனிதனின் உள் உறுப்புக்களில், பெரிய உறுப்பாக அமைந்திருப்பது, கல்லீரல்தான் (லிவர்). மிகப் பெரிய நீர்மம் சுரக்கும் சுரப்பியாக செயல்படும், இந்த உறுப்பின் பங்களிப்பு அளவிடமுடியாதது. அப்படி என்ன தான் அதீதமான வேலைகளைச் செய்கிறது இந்தக் கல்லீரல் என நினைக்கத் தோன்றுகிறதல்லவா?

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு பித்த நீர் சுரக்க வேண்டும். அந்த பித்த நீரை தயாரிப்பது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள 80 சதவிகித கொழுப்பை, பித்த நீராக மாற்றி, பித்தப்பையில் சேமித்து வைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து சத்துக்களை, நம் உடலுக்கு ஏற்ற முறையில் மாற்றித் தருகிறது. உணவிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கல்லீரல் வழியாகத்தான் உடலின் பல பாகங்களையும் சென்றடைகிறது.



பிளாஸ்மாவை ரத்தமாக மாற்றும் வேலையைச் செய்கிறது. ஆற்றலை சேமித்து வைக்கும் கிளைக்கோஜன் என்னும் வேதிப்பொருளை இந்த உறுப்புதான் சேமித்து வைக்கிறது. வேண்டாத நுண்ணுயிர்களை அழித்து, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைச் சீர் செய்து, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. கார்போஹைடிரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், மினரல்களை சேமித்து வைக்கிறது.

ஒரு மனிதனின் கல்லீரல், சராசரி 1.3 கிலோ கிராம் முதல் 1.6 கிலோ கிராம் எடை இருக்கும். இது அதிக எடை கொண்ட உள்ளுறுப்பு என்றே சொல்லலாம். இந்த உறுப்பு சரியாகத் தன் வேலைகளைச் செய்து வந்தால், உடலில் நமக்கும் எந்த உபாதையும் ஏற்படாது. ஆனால் சற்றே தவறிவிட்டால் போதும். தொடர்கதையாக உறுப்புக்களில் பாதகங்கள் ஒவ்வொன்றாகத் தலை தூக்கத் தொடங்கும்.

இத்தனையொரு உன்னதமான உறுப்பினை நாம் எவ்வளவு ஜாக்கிரதையாகப் பராமரிக்க வேண்டும்? கல்லீரல் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தால், கல்லீரல் நோய்கள் அறிகுறிகள் என்னென்ன?



1. தோலில் மஞ்சள் நிறம்.

2. மஞ்சள் காமாலை.

3. பசியின்மை.

4. வழக்கத்தைவிட அதிகமான சோர்வு.

5. உடல் எடை கூடுதல் .

6. வாயில், நாக்கில் வரட்சித்தன்மை.

7. அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது.

8. வயிற்றுப்போக்கு.

9. மூட்டுகளில் வலி.

10. அடி வயிற்றுப் பகுதிகளில் ஒரு இம்சை.

11. ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி.

12. ரத்தம் உறைவதில் பிரச்சனை.

13. காலில் நீர் தேங்குதல்.

14. நிறம் மாறி மலம் கழித்தல்.



இவைகளைப் போன்ற அறிகுறிகள் தோன்றினால், நீங்கள் உடல் நலத்தில், அதுவும் முக்கியமாக கல்லீரலைப் பேணுவதில், அக்கறை காட்டவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். நம்மால் என்ன செய்ய முடியும் என்பதுதானே உங்கள் எண்ணம்? கவலை வேண்டாம். நாம் உண்ணும் உணவின் மூலம் அவ்வுறுப்பிற்கு பராமரிப்பைத் தர முடியும்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். எங்களின்
 கருத்துகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!