Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

இலிமினாட்டி


கேள்வி:
அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்ளன என்ற அடிப்படையில் எதையும் ஏற்றுக்கொள்ளும் நீங்கள், இலிமினாட்டிகளுக்கு சாத்தியகூறுகள் இருந்தும் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?

பதில்:
முதல்ல ஒரு விசயத்தை சொல்லிர்றேன், நீங்கள் மகாபாரத்தையும், பைபிளையும், குரானையும் ஏற்றுக்கொள்ளும் நபராக இருந்தால் நான் சொல்லும் இலிமினாட்டிகள் பற்றிய கூற்று உங்கள் மண்டையில் ஏறாது.

18 ஆம் நூற்றாண்டில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக உருவான அமைப்பு தான் இலிமினாட்டி, சில பகுத்தறிவு இயக்குனர்கள் பட பூஜையின் போது பூனையை குறுக்கால விடுவது, விதவையை கொண்டு விளக்கு ஏற்றுவது, அமங்களமாக பொது புத்தியை ஏற்றுபட்டவைகளை செய்வதுன்னு இருப்பாங்களே, அதே போல் கடவுளுக்கு எதிராக ஆண்டி கிறிஸ்ட் என்ற அழைக்கப்பட்டார்கள். கடவுளுக்கு எதிரான சாத்தானை வேண்டுமென்றே வணக்கி மக்களை வெறுப்பேத்தினார்கள். இலிமினாட்டி என்றால் ஒளியை பாய்ச்சுவது என்று அர்த்தம். அவர்கள் அமைப்பு வெறும் 18 ஆண்டுகள் மட்டுமே இயக்கியது.

எல்லாமே கடவுள் செயல்னு சொல்ற மாதிரி உலகில் எது நடந்தாலும் அதற்கு இலிமினாட்டிகள் தான் காரணம்னு அவர்கள் மேல் தூக்கி போடுவது எப்படி சாத்தியகூறாகும்னு எனக்கு புரியல. மணல் திட்டுகளை ராமர் பாலம்னு சொல்றது. பாறையான மரத்தை நோவா செய்த கப்பல்னு சொல்றது. நிலா ரெண்டா பொழந்து திரும்ப ஒட்டுச்சுனு நம்புறது எல்லாமும் கட்டுகதைகள் தான்.




பைபிள் பழைய ஏற்பாட்டின் வயசு இரண்டாயிரத்துக்கும் மேல், ராமாயணம் சொல்லவே வேண்டாம். அந்த காலத்துலயே அருமையாக கதை புனைய தெரிந்தவர்கள் நம் மக்கள். அவர்களுக்கு இலிமினாட்டி கதை கட்டவா தெரியாது. அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களையும், முதலாளிதுவத்தும் அராஜகத்தையும் மறைக்க அவர்களே பழி போட வைத்திருக்கும் அமைப்பு தான் இலிமினாட்டி

ஜான் பெர்கின்ஸ், ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தில் இலிமினாட்டிகள் பற்றி சொல்லியிருக்கார்னு ஒரு ஆதாரத்தை முன் வைக்கிறாங்க. உலகம் இயங்குவது பணம் படைத்தவனால் அவன் இலிமினாட்டி இல்லாதபோதும் அதை தான் செய்துக்கொண்டிருந்தான்.

அமெரிக்க ட்ரம்ப் ஆகட்டும், இந்திய மோடி ஆகட்டும், நாட்டுக்கு நல்லது பண்றதாக நினைத்து அவர்கள் செய்யும் கேனதனங்கள் எல்லாமே அவர்களின் சொந்த, சுய சூனியமே. அவற்றிற்கும் இலிமினாட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மார்கெட்டிங், ப்ராண்டிங் எல்லாமே விளம்பர உலகின் ஒரு அங்கம், அது இரட்டை இலையாக இருந்தாலும், தாமரையாக இருந்தாலும். மொத்த உலகமும் விளம்பர மோகத்தில் தான் இருக்கு. விதிவிலக்கு இல்லாமல் இதுக்கு நாம தான் வெட்கபடுனுமே தவிர இலிமினாட்டிகள் மேல் பழியை போட்டு தப்பித்துக்கொள்ளக்கூடாது
"என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களுக்கு தோன்றிய கருத்துக்களை நீங்கள் தாராளமாக பதிவிடலாம்"


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக