Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 31 ஜனவரி, 2019

ஏன் மாத்திரை சாப்பிடுறோம்!....

பக்கத்துக்கு வீடு குழந்தையுடன் பேசி கொண்டு இருந்த பொழுது அந்த குழந்தை கேட்ட ஒரு கேள்வி தான் இது ஆனால் அப்பொழுது எனக்கு என்ன பதில் கூறுவது என தெரியவில்லை ஒரு சில நண்பர்களிடம் இக்கேள்வியை கேட்ட பின்பு பெறப்பட்ட பதில் தான் இது.. 

கேள்வி:
முழுங்கற மாத்திரைக்கு எப்படி தெரியும் அத நான் பல் வலிக்குதான் சாப்பிட்டேன்னு 🤔??

பதில்:
வலி என்பது குறிப்பிட்ட பகுதியில் இருந்து மூளைக்கு அனுப்பப்படும் செய்தி. அந்த பகுதியில் நரம்பு மண்டலத்தின் நியூரான் படு வேகத்தில் இருக்கும், ஏனெனில் வலி என்பதே என்னை கவனி என்னை கவனி என நம்மை உசுப்பேத்துவது தான். நாம் சாப்பிடும் மாத்திரை வயிற்றில் கரைந்து குடல் உறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்படும் பொழுது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் வந்துடுச்சுன்னா நமக்கான ஆயுதம் அதை தூக்கிக்கொண்டு வலி உள்ள பகுதிக்கு ஒடி மூளைக்கு செய்திகளை எடுத்துசெல்லும் நியூரான்களின் செயல்பாட்டை மட்டு படுத்தும்

ஒன்னு தெரியுமா? வலி நிவாரணி எடுத்துக்கொள்வதால் மட்டுமே பல் வலியோ அல்லது உடல் வலியோ, காயங்களோ ஆறுவதில்லை, நம் உடலெ ஒரு ஆச்சர்யமான பயோ மெக்கானிசம், நம் மூளை பல ஆயிரம் மடங்கு கம்பியூட்டர் அதாவது பயோ கம்பியூட்டர். கரையான் புற்றில் ஒரு ஓட்டை போட்டால் உடனே போராளி கரையான்கள் வேறு இடத்தில் இருந்து மண்ணை தின்று வந்து ஓட்டை விழந்த இடத்தை அடைக்கும்



நம்மை கேட்டா இதயம் துடிக்குது, நம்மை கேட்டா நுரையீரல் சுவாசிக்குது, நம்மை கேட்டா செரிமாண மண்டலம் வேலை செய்யுது. அது மாதிரி தான் நம் உடலின் வெள்ளை அணுக்களும். தட்ப வெப்ப சூழலில் ஏற்படும் உடல் மாற்றம், உணவால் உடலில் ஏற்படும் அலர்ஜி போன்றவற்றை சரி செய்யும், ஆனால் மருத்துவத்தின் துணையோட தான் சரி செய்ய முடியும் என் நிலையும் உடலுக்கு ஏற்படும்

நோய் தொற்று அதிகமாக இருத்தல். நம் உடலை நாமே சில பழக்கங்களால் கெடுத்துக்கொள்ளுதல். இந்த உடல் உபாத்தைக்கு இதை செய்யக்கூடாது என அறிவுறுத்தியும் அதை செய்தல் போன்றவை நோயை அதிகப்படுத்தும், உங்களுக்கே தெரியும், நமக்கு அறிகுறிகள் அதிகமானால் தான் டாக்டரிடம் போறோம், அதை அதிக படுத்துவதே நாம் தான்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக