Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 18 பிப்ரவரி, 2019

குழந்தையை தூக்க தெரியாதா!! அப்ப இதை படிங்க!!

பச்சிளங் குழந்தைகளைத் தூக்குவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளது. முக்கியமாக, பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
ஏனென்றால் பச்சிளம் குழந்தைகளின் கழுத்து எலும்பு, முதுகு தண்டுவடம், கை, கால் மூட்டு இணைப்புகள் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. அது மிகவும் மென்மையாக இருக்கும்.
பச்சிளம் குழந்தைகளின் தலை நேராக நிற்பதற்கு நான்கிலிருந்து ஆறு மாதம் வரை ஆகும். அதனால், அந்தச் சமயத்தில் இன்னும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 
குழந்தைகளின் கழுத்துக்குக் கீழே கையை சப்போர்ட்டாக வைத்தவாறுதான் தூக்க வேண்டும். அப்படி தூக்காதபட்சத்தில் கழுத்தில் சுளுக்கு, வலி ஏற்படும்.
மேலும் தண்டுவட எலும்புகள் அதனுடைய இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகர்ந்துவிடவும் கூடும். சுவாசக்கோளாறு ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்படுவதும் நடக்கலாம். 
இத்தகைய சிரமங்களை அனுபவிக்கும் குழந்தை அழகுவதில்லை அப்போதே உணர்ந்து கொள்ளலாம். குழந்தைகளை உயரே தூக்கும்போதும் , பூக்களை நுகர்வதைப்போல் நம் மூக்குக்கு நேராகக் கொண்டு போகும் போதும் கவனமாக தூக்குவதே பாதுகாப்பானது.
அப்படி செய்தால்தான் குழந்தையின் மூச்சுக்குழாய் பாதைக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்கும். குழந்தைகளின் மூச்சுக்குழாய் முன்புறமோ, பின்புறமோ வேகமாக அசையக் கூடாது.
குழந்தைகளைத் தூக்கும்போது, இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்வது நல்லது. அதாவது, வீணையின் மேல்பகுதி பெரிதாக இருக்கும், அதேபோல் கீழ்பகுதி சிறிதாக இருக்கும் வகையில் தூக்குவோம்.
அதேபோன்று தான் குழந்தையின் தலை மேல்நோக்கி இருக்குமாறும், கால்கள் இரண்டும் கீழே இருக்குமாறும் தூக்க வேண்டும். 
மேலும், பெரும்பாலானோர் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு, ஏப்பம் வர வேண்டும் என்பதற்காக தோளில் தூக்கி வைத்துக்கொண்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.அவ்வாறு செய்யக் கூடாது. 
அவ்வாறு தோளில் வைத்திருக்கும்போது, குழந்தையின் வயிற்றுப்பகுதி அழுந்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைத் தூக்கும்போது, தலை அசையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம். 
6-ல் இருந்து 8 மாதங்கள் ஆன பிறகுதான் குழந்தை தானாக உட்கார ஆரம்பிக்கும். அந்தச்சமயங்களில் குழந்தைகளைத் தூக்கும்போது இரண்டு கைகளால் அக்குள் பகுதியை பிடித்தவாறு தூக்க வேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு கையால் குழந்தையைத் தூக்கக் கூடாது. அதேபோல் குழந்தையை ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கவும் கூடாது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் 
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!