Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 7 பிப்ரவரி, 2019

இண்டர்வியூயெனும் கொடுமை.





நான் சிவில் இன்ஞினியரிங் படித்து முடித்து 7 வருடங்கள் ஆகின்றன
, இன்னும் முதல் கம்பெனியில் இண்டர்வியூவிற்காக சென்றது மறக்கமுடியாதது. அந்த இண்டர்வியூவிற்காக, எடுத்த டிக்கெட் கூட கன்பார்ம் ஆகலன்னு தெரிந்தவுடனேயே பின் வாங்கியிருக்கனும். ஆனாலும் என்னமோ நல்லா படிச்சவன் மாதிரி அன்-ரிசர்வேசன் கம்பார்ட்மெண்ட்ல ஏறி சென்னை வந்தேன். என் வாழ்க்கயிலயே மோசமான ஒரு பயணம்னா அது அந்த இரயில் பயணம் தான்.

உட்கார இடம் கிடைக்கலானும் பரவாயில்ல ஆனா நிக்கிறதுக்குக் கூட எனக்கும், என் நண்பனுக்கும் இடம் கிடைக்காமல் திருச்சியில்  இருந்து சென்னைக்கு நின்னுக்கிட்டே வந்தோம். சென்னை எனக்கு அதிகம் பழக்கமில்லாத்தால், ஒரு ஸ்டேசனில் உட்கார இடம் கிடைத்ததேன்னு எண்ணி உட்காரும் போது தான் சொன்னான் என் நண்பன்,
மச்சி இது தாம்பரம், அடுத்த ஸ்டாப்பில் நாம இரங்கனும்

அப்போ அடுத்த ஸ்டாப் தான் சென்னையா?

டேய், இதுவே சென்னைதான்டா, திருச்சில  எப்படி ஜங்சன், ஸ்ரீரங்கம் , பொன்மலையோ  அது மாதிரி இங்கே, தாம்பரம், குரோம்பேட்டை, எழும்பூர். அப்படின்னு சொல்லிமுடிக்குறதுக்குள்ளே நாங்க இறங்கும் இடம் வந்தது.

அடிச்சி புடிச்சி, இண்டர்வியூக்கு போனா, நாம என்ன கண்டிசனில் இண்டர்வியூக்கு வந்திருக்கமுன்னே தெரியாம, கேள்வியா கேட்டு பார்த்தார்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம். வாயே தொரக்கலியே. பிறகு என்ன கொஞ்ச நேரம் கழித்து திறந்தேன், வாய இல்ல கதவ, தொரந்து வெளியே வந்தேன்.

அப்ப முடிவானது தான். இனி ஒருத்தன் கேள்வி கேட்டு அதில் பாஸாகித்தான் வேலைக்குப் போகனும்னா அது இந்த காலத்துல நடக்காதுநன்னு தெரிஞ்சி போச்சி.

ஆக, கேள்வியே கேட்காம எந்த கம்பெனியில் சேரலாம்னு, அந்த மாதிரியான ஒரு கம்பெனியை தேட ஆரம்பித்தேன். அப்படி தேடுனதுல ஒரு வருசம் போயிடுச்சு.

அப்படி கண்டுபிடிச்ச கம்பெனிதான், என் முதல் கம்பெனி. இருந்தாலும் அப்பாயின்மண்ட் ஆர்டர் வாங்கப்போகின்ற சமயம் பார்த்து.

ஜஸ்ட் பார்மாலிடிக்காக எங்க முதலாலி ஒன்னு, ரெண்டு கேள்வி கேட்ட்துக்கப்புறம், ஆர்டர வந்து வாங்கிக்கங்கன்னு ஒரு அம்மா சொல்லிட்டு போக, போச்சுடா சென்னைக்கு வந்த காசு நாசமா போச்சுன்னு மனசுக்குள்ள நினச்சிகிட்டு, எப்படின்னாலும் அந்த ஆளு கேக்குற கேள்விக்கு பதில் சொல்லமாட்டோம், மாத சம்பளம் வாங்குனவனே போன தடவ அப்படி கேட்டான், இவன் கம்பெனியோட ஓனர்வேர, செத்தடா யாஸிருன்னு, மனசாட்சி வெளியில வந்து எனக்கு மட்டும் காது கேட்கின்ற மாதிரி சொல்லிகிட்டு இருக்கும் போதே,

தம்பி, ஸார் கூப்பிடுறாருன்னு, ஆபிஸ் பாய் சொல்ல,

வந்தது வரட்டும்னு தையிரியத்த வரவழைத்துக் கொண்டு, நேர வேகமா போய் கேட்டேன் ஆபிஸ் பாய்கிட்ட பாத்ரூம் எங்க இருக்கு?

அது இருக்குற இடத்துலயே தான் இருக்கு ன்னு சொல்லுற மாதிரி ஒரு முரப்பு முரச்சிட்டு, முதல்ல அவர போய் பார்த்துட்டு அப்புரமா பாத்ரூம் போகலாம், வெயிட் பன்னுராருன்னு சொல்லி, கழுத்த பிடிச்சு வெளியில தான் தள்ளிவிடுவாங்க, ஆனா உலக வரலாற்றிலேயே கழுத்த பிடிச்சு உள்ள தள்ளிவிட்டான் அந்த ஆளு.

போனா, காதல் பட சந்தியா அப்பன் மாதிரி ஒரு ஆளு.

இரு,

எந்த ஊரு?

தஞ்சாவூர் பக்கம் 
  
நானும் ஆமா சார் னு ஆரம்பிச்சு எங்க தெரு சந்துலேந்து தஞ்சாவூர் திவ்யா ஸ்வீட்ஸ் வரை  போதும், போதுன்னு சொல்லுர அளவுக்கு சொல்லிக்கொண்டே இருந்தேன்.

பிறகு என்ன அப்பாய்ண்டட்.


இப்போ நான் இருக்கின்றது எனது கேரியரில் இரண்டாவது கம்பேனி. இதுவும் எந்த வித இண்டர்வியூ இல்லாமல் என் நண்பன் பிரவினின் முயற்சியால் வாங்கிக் கொடுக்கப்பட்டது. 

என்னுடையா I.T நண்பர்கள் அவர்களுடைய இண்டர்வியூ அனுபவத்தை கேட்கும் போது, அப்பாட கம்யூட்டர் டிபார்ட்மெண்ட் எடுக்கலன்னு தோனும். தோனாதவனுக்கும் தோன வச்சுருவானுங்க.

பொதுவா அங்க மூணு வகையான இண்டர்வியூ இருக்கும் (கேள்வி ஞானம் தான்)

1.       டெக்னிகல் அறிவு,
2.       அறிவு / பொது அறிவு.
3.        பொறுமையின் அளவு.




முதல்ல உள்ள டெக்னிகல் அறிவு விசயத்த நாம் “Pass” ந்னு சொல்லி விட்டுடலாம். அதுக்கும் நமக்கு ஏற்கனவே வாய்க்கா தகறாரு.

இரண்டாம்மமாவது,

எப்படிபட்ட அறிவாளின்னு சோத்திக்கிற சோதிப்புக்கு ஒரு உதாரணம்,

ஒரு இண்டர்வியூ ரூம்மில்,

இண்டர்வியூ எடுப்பவர் : சரி இது தான் என்னுடைய கடைசி கேள்வி, இதற்கு நான் கேள்வி கேட்ட உடனே பதில் சொல்ல வேண்டு, கொஞ்சம் தாமதித்தாலும் உனக்கு வேலை இல்லை.

நான் உனக்கு ஒரு ஒரு பேனாவ தாரேன், அதை நீ சரியாக இந்த டேபிலின் துல்லியமாக மைய புள்ளியில் வைக்கவேண்டும் என்றால், அந்த மைய பகுதி எது

துலியும் யோசிக்காமல் இது தான் சார்ன்னு நம்ம ஆளு டேபிலில் ஒரு இடத்தில் கைவைத்து காண்பித்தான்.

அவன் தப்பாக இருந்தும்

அப்பாயிண்டட்.

எப்படிடா? ன்னு இந்த கதைய சொன்ன நண்பனிடம் கேட்டேன்.

இது தான் என்னுடய கடைசி கேள்வின்னு அவன் சொன்னதுக்கப்புறம், நாம தப்பாக எது சொன்னாலும், செஞ்சாலும் எப்படின்னு அவன் கேட்க மாட்டான். அது தான் மேட்டர்ன்னு அவன் சொல்லும் போதே கோட்டர் போட்ட கிரக்கம் நமக்கு.

இதுக்கே இப்படின்னா எப்படி பொறுமைக்கு வைக்குற டெஸ்ட் இருக்கே, அதுக்கு போகுறதுக்கு ஒரு மாதம் முன்னாடியே, சோத்துல உப்பு போட்டு சாப்பிடுவதை நிறுத்திடனும்.

அப்படி நம்ம என்னடா பொறுமையை சுரண்டி பாக்குர மாதிரி அவன் கேள்வி கேட்பான்?

உன் தங்கச்சிய நான் இழுத்துக்கிட்டு ஓடுன்னா நீ என்ன பன்னுவே? ன்னு இண்டர்வியு எடுக்குறவன் உன்கிட்ட கேக்குறான்னு வச்சிக்கோ நீ என்ன பதில் சொல்லுவன்னு என் நண்பன் என்ன பார்த்து கேட்டான்.

இது என்னடா சிம்பில், எனக்கு தங்கச்சியே இல்லயேன்னு உண்மையை சொல்லுவேன்.

ச்சீ து, பரதேசி,

இருக்குன்னு வச்சிக்கோ என்ன செய்யுவ?

சட்டையோட அவன் கழுத்தை சேர்த்து புடிச்சி, காதோட ஒன்னு விடுவேன்.

இப்படி மட்டும் இல்ல, “ச்சீ என்ன மானங்கெட்ட கேள்வி, “போலிஸில் கம்லெண்ட் கொடுப்பேன்”. கொஞ்ச நாள் குடும்பத்தோட அழுவோம்”....... இப்படி சொல்லுறவங்கலுக்கு எல்லாம் வேல கிடைகாது. அப்படி என் நண்பன் சொல்ல

இந்த கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆகனும்னா எவனுக்கும் வேலை கிடச்சிருக்காதே!!!!!
நான் சொன்னத கேட்டுவிட்டு என் நண்பன் சொன்னான்

அது தான் இல்ல, அப்படியும் ஒருத்தன் அந்த வேலையை வாங்கினான்.

எப்படிடா, என்னடா சொன்னான்???????

இததான் நானும் அவங்கிட்ட கேட்டேன், அவன் சொன்னான்

என் தங்கச்சிக்கு உங்கள விட ஒரு சிறந்த மாப்பிள்ளை, இந்த உலகத்தில் இல்ல,எந்த உலகத்துல தேடுனாலும் கிடைக்கமாட்டான்.................... மாமா, என் தங்கை ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும் ..........மாமா 

இத கேட்டுவிட்டு வாய பொழந்துகிட்டு நின்னவனிடம்,

யாரு சீனியர் உங்க பிரண்டா?,

ஹலோ பாஸ் நான் பால சுப்பிரமணியன்னு சொல்லிகிட்டே எங்கிட்ட அறிமுகப்படுத்திக் கொண்டான், என் நண்பனுடன் பணிபுரிபவன். பார்க கண்ணாடி போட்ட அந்நியன் அம்பி மாதிரி இருந்தான்.

சீனியர் என்ன காபி ஆர்டர் பன்னட்டா? ன்னு சொல்லிக் கொண்டே எங்களுக்கு பின்னால் இருக்கும் டீ கடைக்கு போனான்.

அந்த பதிலின் அதிர்ச்சியில் இருந்து மீளாமல், அலுப்பாய் சொன்னேன் என் நண்பனிடம் கொஞ்சம் ஸ்ட்ராங்க போட்டு வாங்க சொல்லுடா

பொறம்போக்கு இத அவ போகும் போதே சொல்ல வேண்டியதுதானடா

தூரமா போனவனிடம் கத்தி சொன்னான்

ஒரு டீ ஸ்டாங்கா போட்டு வாங்குடா, டேய் மாமா , டேய் மாமா ............
......
......
......

படார்ன்னு திரும்பி என் நண்பனிடம்

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் இவனாடா அவன்..............................
......
......
......

அவனே தான் இவன் என்பது போல தலையாட்டினான் நண்பன்.


இண்டர்வியூக்கு வர்ற தனிஒருத்தன
நாலு பேரு கேள்வி கேட்டே கொல்லுறதுக்கு பேரு
வீரமில்ல,
துரோகம்...



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக