Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 27 ஏப்ரல், 2019

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் குளறுபடி 6,000 மாணவர்களின் உயர்கல்வி பாதிப்பு



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


பிளஸ் 2 மாணவர்களின் தற்காலிக சான்றிதழில், செய்முறை மதிப்பெண் பதிவாகாததால், 6,000 மாணவர்களின் உயர்கல்வி கனவு கேள்விக்குறியாகி உள்ளது.பிளஸ் 2 அறிவியல் பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு, 30 மதிப்பெண்கள், செய்முறைக்காக வழங்கப்படுகிறது. 20 புற மதிப்பெண்ணாகவும், 10 அக மதிப்பெண்ணாகவும் வழங்கப்படுகிறது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 20ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, வழங்கப்படுகிறது.இந்த மதிப்பெண் சான்றிதழ் மூலம், மாணவர்கள், கல்லுாரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். 

விண்ணப்பிப்பதற்கு, மே, 6 கடைசி நாள். இந்நிலையில், தற்காலிக சான்றிதழ்களில், செய்முறை மதிப்பெண் பதிவாகாமல், 'தியரி'க்குரிய மதிப்பெண் மட்டுமே இடம் பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும், இதுபோல், 6,000 பேருக்கு மேல் பதிவாகவில்லை. இதனால், மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க முடியாமலும், 'கட் ஆப்' மதிப்பெண்ணில் பின்தங்கிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.நிரந்தர மதிப்பெண் சான்றிதழில், விடுபட்டு போன செய்முறை மதிப்பெண்களை சேர்த்து வழங்கினாலும், ஒரு மாதத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டும். 

அதற்குள், கலை கல்லுாரிகளில், 'கட் ஆப்' வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் தொடங்கி விடும்.'எனவே, செய்முறை மதிப்பெண் இடம் பெறாத சான்றிதழ்களில், தலைமை ஆசிரியர்களே பதிவிட்டு கையொப்பம் இட்டு வழங்க வேண்டும்' என்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!