இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
டிராகன் பழம், நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில்
இதுவும் ஒன்று. இப்பொழுது பரவலாக பழ சந்தைகளில் கிடைக்கும் ஒரு பழம். பார்ப்பதற்கு
இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும்.
மெக்ஸிகோ, தென் அமெரிக்கா மற்றும் மத்திய
அமெரிக்கா தான் இதன் தாயகம். உலகம் முழுவதும் மக்களின் இடப்பெயற்சியால் இது தெற்கு
ஆசிய நாடுகளுக்கும் குடி புகுந்தது. அங்கு அவர்களின் உணவு பொருட்களில் முக்கிய
இடத்தை பிடித்தது.
டிராகன்
பழம் பல வித நன்மைகளை கொண்ட ஒரு பழம். உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு,
கொலெஸ்ட்ரோல் குறைப்பு , நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது , ஆற்றலை
அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும்.மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும்
ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும் பழம் இந்த டிராகன் பழம்.
டிராகன் பழம் பல வித வளங்களை உடலுக்கு கொடுப்பதால் இதனை
“சூப்பர் புட் “(Superfood ) என்று அழைக்கலாம். ஊட்டச்சத்துகள் அதிகம்
இருக்கும்போதிலும் மற்ற புகழ் பெற்ற பழங்களுக்கு மத்தியில் அதிக வரவேற்பை பெறாமல்
இருக்கிறது இந்த ட்ராகன் பழம்.
வகைகள் :
டிராகன் பழத்தில் 3 வகைகள் உள்ளன.
சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம்.
சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.
மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.
தோற்றம் :
இனம் , அளவு மற்றும் உருவத்தை கொண்டு இதன்
சுவைகளில் வேறுபாடு இருக்கும். பொதுவாக இனிப்பு மற்றும் புளிப்பு சுவையில்
இருக்கும். இதனை வெட்டி உட்புறத்தை பார்க்கும்போது கிவி பழத்தை போல் இருக்கும்.
சதையில் கறுப்பு புள்ளிகளாக விதைகள் இருக்கும்.
இந்த விதைகள் செரிமானத்திற்கு நல்லது. ஒயின்
மற்றும் சில பானங்கள் தயாரிப்பதில் இந்த பழத்தை பயன்படுத்துவர். இதன் இலைகளை
கொண்டு ஆரோக்கியமான டீயை தயாரிக்கலாம். இதன் தோலில் ஊட்டச்சத்துகள் குறைந்து
காணப்படுகிறது. பொதுவாக இதனை யாரும் பயன்படுத்துவது இல்லை.
ஆக்சிஜெனேற்றத்தை தடுப்பது, தீங்கு
விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை போன்றவை இதன் ஆரோக்கிய பலன்களாகும்.
இதன் மற்ற நன்மைகளை பற்றி விரிவாக காண்போம்.
நன்மைகள் :
நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு சிறந்த ஆற்றலை
கொடுப்பது இதன் முக்கியமான பலனாகும். வைட்டமின் சி யின் அளவு மிகவும் அதிகமாக
இருப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படும். உடலின்
மிக பெரிய சொத்து இந்த வைட்டமின் சி.
செல்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் ப்ரீ
ராடிக்கல் எனும் அடிப்படை கூறுகளை அழிக்க இந்த பழத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்
தன்மை உதவுகிறது. இதனால் இதய நோய், புற்று நோய் போன்றவை தடுக்க படுகின்றன.
வைட்டமின் சியை தவிர வைட்டமின் பி யின்
குழுவும் அதிகமாக காணப்படுகிறது. பி 1, பி 2,பி 3 ஆகியவை, இரத்த அழுத்தத்தை
கட்டுப்படுத்துகின்றன,சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன , கொலஸ்ட்ரால் அளவை
குறைக்கின்றன.
நார்ச்சத்து மிகவும் அதிகமாக டிராகன் பழத்தில்
இருக்கின்றன. ஆகையால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமான பகுதி
சிறந்த செயலாற்றலுடன் இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது.
ஆக்சிஜெனேற்றத்தை தடுக்கும் தன்மையை வைட்டமின்
சியுடன் சேர்த்து மற்ற ஆதரங்களிலும் மூலமாகவும் இயற்கையாக கொண்டுள்ளது இந்த
டிராகன் பழம். இந்த பழத்தில் காணப்படும் கரோட்டின், புற்று நோய்க்கு எதிரான
குணங்களை வெளிப்படுத்துகிறது.
கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது. நீங்கள்
சோர்வாக இருக்கும் போது, அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும் போது, பருவ நிலை மாற்றத்தால்
உடலில்மாற்றங்கள் ஏற்படும்போதும் , புற்று நோய்க்கான அறிகுறிகள் தோன்றும்போதும்
இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக