Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ஆவிகள் - பாகம் 2 சாத்தானின் நேரம் (Devils hour)

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


Devils hour) க்கான பட முடிவு


   அதிகாலை மூன்று மணி.சென்ற பதிவில் நான் இதை குறிப்பிட்டதின் முக்கிய  காரணம்  நான் அனுபவித்த அமானுஷ்ய அனுபவங்களை வேறு யாரேனும் அனுபவித்து இருக்கிறார்களா என்று காண தான் சென்ற பதிவின் இறுதியில் பட்டும் படாமல்   குறிப்பிட்டேன்.

 
ஆம் நான் எதிர்பார்த்ததை போன்று என்னை போன்ற பலரும் அதை அனுபவித்து உள்ளார்கள் .சொல்ல போனால் நான் நினைத்ததை விட அதிகமாகவே உள்ளனர்..அப்படி என்ன அதிகாலை மூன்று மனியில் உள்ளது?

அதற்குமுன்
.
          
                 "நீங்கள் விழிப்போடு தனியாக இருக்கும் பொழுது என்றைக்காவது அல்லது எங்கேயாவது யாரோ அல்லது ஏதோ உங்களை தொடுவது போலவோ, அருகில் நடமாடுவது போலவோ அல்லது உங்களிடம் மட்டும் யாரோ பேசுவது  போலவோ உணர்ந்து இருக்கிறீர்களா??
 வேறு காரணங்கள்  (external causes) ஏதும் இல்லாமல் தானாகவே நிகழ்ந்தது போல அந்த "அனுபவம் " இருக்கவேண்டும் !!! 

   இதில் ஏதேனும் ஒரு கேள்விக்கு ஆம் என்று பதில் கூறுவீர்களானால் நீங்கள் மட்டும் மேலும் தொடந்து படியுங்கள்...
 நீங்களும் "என்னை போல் ஒருவரின் " கூட்டணியில் உள்ளவர் தான்"...
          

 
சென்ற பதிவில் கூறிய லண்டனில் உள்ள அமானுஷ்ய மனோதத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்    NESPR (New england society for psychic reasearch) 1882-ல் நான் மேலே உங்களிடம் கேட்ட அந்த கேள்வியை சுமார் 17000 பேருக்கு அனுப்பி வைத்தது. அதில் 15316 பேரிடமிருந்து  பதில் வந்தது. அதில் பத்து சதவிகிதம் பேர்!! அதாவது  1532 நபர்கள்  ஆம் !! என்ற பதிலை தந்தனர் .. இங்கு பத்து சதவிகிதம் என்பது குறைந்தது அல்ல.. ஏனெனில் இது ஒரு வித்தியாசமான அனுபவம்... அனைவர்க்கும்  சாதரணமாக ஏற்படாத அரிதான அனுபவம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் ... அதில் பெண்கள் அதிகம் .. ஆண்களை விட என் மீடியம்கள் அதிகம் என்பதை நினைவில் கொள்க..

 
வரலாற்றில் சாத்தானுக்கு காணிக்கைகள் கொடுக்கவும் பலிகள் கொடுக்கவும் சூனியகாரிகளும் மந்திரவாதிகளும் தேர்வு செய்த நேரம் இந்த அதிகாலை நேரம் தான்.
அப்படி  என்ன தான் இருக்கிறது அதிகாலை 3 மணியில் .

   
வரலாற்றை மாற்றி எழுதிய ஒரு சம்பவம் .கடவுளின் மகன் என்று அறியப்பட்டு உலக மக்களின் பாவங்களுக்காக உயிரை துறந்த தேவரின் மகன் இயேசு. மரண தண்டனை விதிக்கப்பட்டு காலை 9 மணி அளவில் சிலுவையில் அறையப்பட்டு  சித்ரவதை செய்யபடுகிறார் .6 மணி நேரத்திற்கு  பின்பு  மாலை 3 மணி அளவில் தேவனை நோக்கி உலகமக்களின் பாவங்களை மன்னிக்கவும் என  கதறிகொண்டே தன்னுடைய உயிரை விடுகிறார் . அந்த தேவர் உயிர் நீத்த அந்த புனிதமான மாலை 3 மணிக்கு நேர் எதிரான நேரமாக இருக்கும் அதிகாலை 3 மணி.



 
சாத்தானின் நேரமாக உலகம் முழுவதும் அறியபடுகிறது..
கிறித்துவத்தின் அடிப்படையான திரித்துவமாக கூறப்படும்  பிதா ,சுதன்,பரிசுத்த ஆவியை  பாவம் செய்த ஆவிகளும் ,சாத்தானும்  பரிகசிக்கும் நேரமாக அறியபடுகிறது இந்த அதிகாலை 3 மணி..


இதையே ஆங்கிலத்தில் the devils hour அழைப்பார்கள்... இப்பொழுது புரிகிறதா ஏன் பல சூனியகாரிகளும் தீயசக்திகளுக்கு துணை செல்வோரும் இந்த நேரத்தை தேர்வு செய்தார்கள் என்று!!!
   
என்னதான் மத நூல்களில் சில விஷயங்கள் கூறபட்டாலும்  அவை அனைத்தையும் நாம் நம்முடைய வாழ்வில் பெரிய மேற்கோள்களாக கூற முடியாது !! காரணம் நாம் அறிவியலை பின்பற்றுபவர்கள் .. எதற்கும் அறிவியல் பூர்வமாக விளக்கம் தேடுபவர்கள் .



இந்த அதிகாலை மூன்று மணியின் விபரீதத்தை பலர் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து NESPR தனது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டது..அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு,

 
நம் அனைவரிடமும் மூன்று விதமான மனநிலைகள் உண்டு ... வெளிமனம் ,ஆழ்மனம் , இவை இரண்டிற்கும் ஒத்துவராத வேறுபட்ட நாம் மூன்றாவது கண் என்று  அறியும்  இன்னொரு ஆழ்மனம் ...ஆம் நம் அனைவருக்கும் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் அமானுஷ்ய அறிவு உள்ளது. நாம் சாதாரணமாக இருக்கும் போது நம்முடைய வெளிமனம் செயல்படும். அது குப்பை தொட்டி போன்றது அனைத்தையும் உள்ளே போட்டுக்கொள்ளும்.பயனற்றது. மற்றொன்று ஆழ்மனம்.. அதாவது நாம் ஒரு தெளிவான மன நிலையில் எதை பற்றியும் யோசிக்காமல் ஒரு குறிப்பிட்ட நிலையின் மேல் கவனம் செலுத்துவது .... உதாரணத்திற்கு தூக்கத்தின் முதல் நிலையில் வெளிப்புற மனதின் ஈடுபாடு குறைந்து ஆழ்மனம் செயல்பட துவங்கும் . ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் அந்த ஆழ்மனம் செயல்படுவது நின்று நம்முடைய அந்த மூன்றாவது கண் செயல்பட துவங்கும் . அந்த நிலையில் தாம் நாம் இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட பல விஷயங்களை   உணரும் நம்மை மறந்த நிலைக்கு வருகிறோம்.அந்த தம்மை மறந்த  மிக ஆழமான உறக்கத்தில் சராசரியான மனிதர்கள் சங்கமிக்கும்    நேரம் தான் இந்த அதிகாலை 3 மணி. எனவே அந்த நேரத்தில் உங்களுக்கு கனவாக வரும் ,அல்லது வெளிப்புற தூண்டுதல் இன்றி உங்கள் மனதில் நீங்கள் காணும்  அனைத்தும் உங்கள் வாழ்வில் கட்டாயம் நடக்கும். அல்லது உங்கள் வாழ்வில் அந்த சூழ்நிலைகளை ஒரு முறையேனும் சந்திப்பீர்கள் என்று அடித்து கூறுவேன்.


 
எனவே இனிமேல் எப்பொழுதாவது நீங்களும் எந்தவித வெளிப்புற தூண்டுதலுமின்றி தானாக அதிகாலை 3 மணிக்கு எழுந்து மீண்டும் உறங்க செல்லாத நிலை ஏற்படுமானால் நினைவில் கொள்ளுங்கள் உங்கள் வீட்டிலும் ஏதோ பிரச்சனை உள்ளது ...உங்களிடமும் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் சக்தி ஒளிந்து உள்ளது என கூறிக்கொண்டு  உங்களை அடுத்த அமானுஷ்ய அனுபவத்தை  நோக்கி அழைத்து செல்கிறேன்.


           
சரி மீண்டும் பேய்களை பற்றிய பகுதிக்கு வருவோம் .. ஒரு வழியாக கட்டுரயின் கதாநாயகர்களான ஆவிகளை உங்களுக்கு அறிமுகபடுத்தும் பகுதிக்கு வந்துவிட்டோம் என நினைக்கிறன் ..                  உங்கள் அனைவருக்கும் anabelle பொம்மை தெரியும் என்று நினைக்கிறன் !! mandy the doll பற்றி  தெரியுமா??  தெரியவில்லையா??

     1910-1920 -
ன் இடைவெளியில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட அந்த பொம்மையை முதலில் கண்டு எடுத்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் . காரணம்  அந்த  பொம்மை ஏற்படுத்திய திகில் .. அப்படி என்ன செய்தது அந்த பொம்மை .பார்க்கலாம் வாருங்கள்


 
பழமையான அந்த வீட்டை விலைக்கு வாங்கிய உரிமையாளர் இரவு நேரம் மட்டும்   என்று இல்லாமல் அமைதியான சூழ்நிலை நிலவும் நேரங்களில் எல்லாம் வீட்டில் யாரோ ஒரு குழந்தை அழும் சத்தத்தை கேட்டார்.எங்கிருந்து வருகிறது  என்று சற்று பயத்துடன் சென்றவருக்கு அப்பொழுது தான் புரிந்தது . அது வீட்டின் அடித்தளத்தில் இருந்து வருகிறது ... கீழே சென்றவரின் கண்ணில் யாரும் அகப்படவில்லை .பின் எங்கே இருந்து சத்தம் வருகிறது என்று தலையை திருப்பியவருக்கு அறையின் சுவற்றில் சாய்ந்து கொண்டு இருந்த பொம்மை கண்ணில்பட்டது.

 
ஆம் அந்த உயிரற்ற பொம்மையிலிருந்து தான் சத்தம் வந்தது.. மிகவும் பயந்து போன அவர் அந்த பொம்மையை அருங்காட்சியகத்திற்கு அந்த பொம்மையை கொடுத்துவிட்டார்.. அதன் பின்பு அவர் வீட்டில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை.ஆனால் அந்த அருங்காட்சியத்தில் தான் அடுத்த அத்தியாயத்தை தொடங்கியது அந்த பொம்மை ... ஆம் அந்த பொம்மை அங்கு வந்த நாளிலிருந்து இரவு நேரங்களில் அடிக்கடி காலடி சத்தங்கள் கேட்க தொடங்கியது .. பொருத்தி வைக்கப்பட்ட இடத்தில இருந்து தானாக நகர்ந்து வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து இருபது போன்ற பாவனையில் இருந்தது .. ஆம் சில நேரத்தில் அதன் முகத்தில் உணர்சிகள் வெளிப்பட தோன்றின ... ஒரு படி மேலே போய் அந்த பொம்மை இருந்த அறையின் உள்ள பேப்பர்களெல்லாம்  கிழிந்து இருந்தது ...  மேலும் அங்கு இருந்த பல பொருள்கள் காணமல் போனது .. சில பொருள்கள் அந்த பொம்மை இருந்த அறையினில் கண்டு எடுக்கப்பட்டது .. பல பொருள்கள் கண்டுபிடிக்கவே இல்லை
 




காணமல் போன பொம்மையுடன் mandy

...
அதன் பிறகு அந்த பொம்மை தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டது .
 
அதோடு முடிந்ததா என்றல் அதுவும் இல்லை . தினமும் அமைதியான சூழலில் அந்த பொம்மையில் அறையில் கதவை தட்டும் சத்தம் கேட்க தொடங்கியது.வேறு வழி இல்லாமல் பின்பு அந்த பொம்மையை  main exhibition பகுதியில் அனைவர் பார்வையில் படும்படி வைத்தார்கள்.ஆம் மிகவும் பிரபலமடைந்த அந்த பொம்மையை பார்க்க பலர் வந்தார்கள் . பலர் அந்த பொம்மையை பார்த்ததும் ஒரு இனம் புரியாத சோகமயமான நிலைக்கு சென்றனர்.. சிலர் அழவே தொடங்கிவிட்டனர் . அப்படி என்ன தான் அந்த பொம்மையில் உள்ளது என அதன் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தனர் .


     
   
பல காலங்களுக்கு முன்பு ஒரு சிறுமி அந்த வீட்டின் அடித்தளத்தில் விபத்தாக அடைபட்டு அங்கேயே இறந்து இருக்கிறாள் . அவள் இறக்கும் பொழுது கூட இருந்த அந்த சிறுமிக்கு மிகவும் விருப்பமான அந்த பொம்மை தான் இந்த mandy என்ற பெயர் கொண்ட பொம்மை . ஆம் அந்த சிறுமியின் ஆவி அந்த பொம்மையினில் அடைபட்டுவிட்டது.. சற்று உன்னிப்பாக பார்த்தால் அந்த mandy யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை.. ஒரு குழந்தையின் செயலை ஒட்டியே அதன் செயல்பாடுகள் இருந்துள்ளன. அதற்கு வேண்டியது அனைவரும் அந்த பொம்மையை அதனுள் இருக்கும் அந்த குழந்தையை சுற்றியே இருக்கவேண்டும் .. ஆம் ஒரு குழந்தையை போல தான் அது நடந்து கொண்டது .அதற்கு வேண்டியது மற்றவர்களின் attention..  அவ்வளவு தான் !! ஆக இது யாருக்கும் தீங்கு செய்யாத அமைதியான அழகான ஆவி!!!!!!!
       
ஆனால் இது ஒரு குழந்தைத்தனமான ஆத்மா... மற்றவரை பழிவாங்கவேண்டும் ... குடும்பத்தை சிதைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு உள்ள ஆவிகள் பற்றிய கதைகள் ஆயிரகனகில் உள்ளன  ... அப்படி என்ன செய்தன அந்த ஆவிகள் பார்ப்போம் அடுத்த பதிவில் !!!

      -----
தொடரும்





என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக