இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
சென்ற பதிவின் இறுதியில் கூறியதை முன்னிறுத்தி
பலர் என்னிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்கள். எவ்வாறு ஒருவர் உயிருடன் இருக்கும்
போது ஆன்மாவாக அல்லது ஆவியாக காட்சி கொடுப்பது?
அதற்கு விடை கூறுவதற்கு முன்னர் அதனோடு தொடர்புடைய
ஒரு உண்மையான சம்பவத்தை பார்த்து விட்டுவருவோம். என்னடா இவன் ஆஊன்னா சம்பவம் சம்பவம்
னு சொல்றான் னு நீங்க எல்லாரும் கடுப்பாவுறது தெரியுது !!! இருந்தாலும் வேற வழி
இல்ல ! இது போன்ற அமானுஷ்ய விஷயங்களை பற்றி ஆராயும் போது உண்மை சம்பவங்களே உண்மைகளை
எளிமையாக புரிந்துகொள்ள வழி வகுக்கும் . எனவே தான் பல உண்மை சம்பவங்களை முன்னிறுத்தி
உங்களை இந்த கட்டுரையின் வழியே அமானுஷ்ய உலகிற்கு அழைத்து செல்ல முயற்சி செய்கிறேன்
.சரி சம்பவத்தை பார்ப்போம் !!
1993 los angels நகரம் . ஒரு பழைய
பங்களா உள்ள இடம் . இடமும் பார்பதற்கு கைவிடப்பட்ட நிலையில் ஒதுக்குபுறமான பகுதியில்
தான் இருந்தது . அங்கே அவ்வபோது ஒரு பெண்மணியின் ஆவி உலவுவதாக தகவல் .ஒன்றுக்கு
மேற்பட்டவர்கள் அந்த ஆவியை பார்த்ததாக கூறினார். கிட்ட தட்ட அனைவர் கூறிய அடையாளங்களும்
ஒரே மாதிரியாக தான் இருந்தன . இதை அறிந்த ஆவிகளை ஆராயும் குழுவினர் அங்கே சென்று முகாமிட்டனர்
.
அங்கு தான் நடந்தது அமானுஷ்யம் ! ஆம்!!! ஆராய்ச்சியாளர்
குழுவிலும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த ஆவியை தெள்ள தெளிவாக பார்த்தனர் . அந்த பங்களாவின்
படிக்கட்டுகளில் அந்த பெண்ணின் ஆவி மிக சாதரணமாக ஏறி இறங்கி உலா வந்து கொண்டு இருந்தது.
பின்பு அங்கு அருகே இருந்த ஏரியில் மிதந்து சென்று மறைந்து போனது. ஒரு நாள்! இரண்டு
நாள்! அல்ல . பல நாட்கள் அந்த ஆவியை ஆராய்ச்சி குழுவினர் கண்டனர் . பின்பு அதை பற்றிய
புலன் விசாரணையில் இறங்கினர் .
அந்த பங்களாவின் அருகில் வசித்த பலர் அவர்களுக்கு
தேவையான தகவல்களை வழங்கினார்கள். அங்கு சுற்றி இருந்த முதியவர்களிடமிருந்து ஆராய்ச்சியாளர்கள்
எதிர்பார்த்த பதில் வந்தது . ஆம் அங்கு வாழும் முதியவர்கள் அந்த ஆவியின் முகமானது முன்னமே
எங்களுக்கு நல்ல பரிச்சயமான முகத்தை ஒத்து உள்ளது என்று கூறினார்கள். அங்க பலகாலங்களுக்கு
முன்பு வாழ்ந்த பலரும் அதையே கூறினார்கள் . ஆனால் அதற்கு பின்பு நடந்தது ஆராய்ச்சியாளர்கள்
எதிர்பாராதது .
ஆம் அவர்கள் விசாரணையில்
அந்த பங்களாவில் இருந்தவர்கள் பல வருடங்களுக்கு முன்பே அங்கிருத்து
500 மைல் தொலைவில் உள்ள வீட்டில் வசிக்க போய் விட்டதாக ஒரு செய்தி கிடைத்தது.
அங்கு சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி !!
அவர்கள் ஆவியாக பார்த்த
அந்த பெண்மணி அங்கு கட்டிலில் படுத்துகொண்டிருந்தாள். ஆனால் உயிருடன் !!!!!!!!
என்ன நம்ப முடியவில்லையா? நம்ப முடியாவிட்டாலும் இதான் உண்மை . அவர் உயிருடன்
தான் இருந்தார். ஆனால் நோய்வாய்ப்பட்டு கோமா நிலையில் சுய நினைவின்றி
கிடந்தார். பின்பு முழுவதும் விசாரித்ததில் தான் உண்மை தெரிந்தது. நன்றாக வாழ்ந்து
கெட்ட குடும்பம் அது. அந்த பங்களா அவர்களுடையது தான். அங்கேயே பிறந்து வளர்ந்த
அந்த பெண்மணி அந்த பங்களாவிலிருந்து குடும்பத்தோடு வெளியேற வேண்டிய சூழல் . பின்பு
அவள் நோய்வாய்ப்பட்டு கோமாவில் இருந்த போது அந்த பெண்ணின் ஆழ்மனதின் இருந்து
கிளம்பிய அவளது எண்ண அலைகள் அந்த பழைய வீட்டுக்கு சென்று இருக்கிறது . என்ன
நம்ப முடியவில்லையா ? என்னடா இவன் காதில் பூ சுற்றுகிறான் என்று நினைக்காதிர்கள் .
இதுவும் உண்மை தான் . ஏன் இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களும் ஏன் நீங்களும் கூட
உணர்ந்து இருக்கலாம் !!
ஆவிகளை பற்றி
ஆராயும் ஆராய்ச்சியாளர்களில் புகழ் பெற்றவர் வீட்லி காரிங்டன் (weedly carington).
இவர் பல ஆராய்சிகள் நடத்தி ஆவிகளை பற்றி பலகோட்பாடுகளை வழிமொழிந்துள்ளார் .
அவற்றில் ஒன்று தான் psychons. அது என்ன psychons? விரிவாக காண்போம்
அவற்றில் ஒன்று தான் psychons. அது என்ன psychons? விரிவாக காண்போம்
உடம்புக்குள் கோடிகணக்கான செல்கள்
இருப்பது போன்று நம்முடைய மனதுக்கும் (mind) செல்கள் உண்டு .மூளைக்குள் தகவல்
பரிமாற்றம் செய்கின்ற, அத்தியாவசியமான கோடான கோடி செல்களை போல (neutrons), நமது
எண்ணங்களை இயக்குகிற கண்ணனுக்கு தெரியாத psychons உண்டு!!!
ஒரு
மனிதன் அவனுடைய வாழ்க்கையில் மிகவும் நெருக்கமான பாச பினைப்புடைய ஆழ்மனதுக்கு
சம்பதமுடைய அனுபவங்கள் ,இடங்கள்,மனிதர்கள் இருப்பார்கள்!! சிலநேரங்களில் அரைதூக்க
நிலையில் திடீரென்று நாம் படித்த பள்ளிகூட வராண்டாவில் நடப்பது போன்ற உணர்வு
ஏற்படுவது உண்டு .
ஆனால் இவை அனைத்துக்கும் அடுத்தகட்டமாக ஒன்று உள்ளது . நம்முடைய எண்ணங்களின் psychons அந்த பள்ளிகூட வராண்டாவிர்கே சென்று அங்கு நம்முடைய ஆவியாக தோன்றுவது!
ஆனால் இவை அனைத்துக்கும் அடுத்தகட்டமாக ஒன்று உள்ளது . நம்முடைய எண்ணங்களின் psychons அந்த பள்ளிகூட வராண்டாவிர்கே சென்று அங்கு நம்முடைய ஆவியாக தோன்றுவது!
இதை
தான் psychons theory என்கிறார்கள் .
அதன்படி இறந்தபிறகும் உடலில் இருந்து வெளிபடுகிற நமது எண்ண அலைகள், அதாவது psychons !! நமது மனதின் வீரியதிருக்கு ஏற்ப கொஞ்ச காலத்திற்கு அந்த வீரியம் போகும் வரை பூமியில் தங்குகின்றன. போக போக அந்த psychons வலுவிழந்து, அதாவது அதன் வீரியம் குறையும் போது அவை முற்றிலும் செயல் இழந்து போகின்றன. இது ஒரு ஆபத்தில்லாத, அப்பாவியான என்ன அலைகளின் உருவகம் . இது தான் கேரிங்டனின் theory.
அதற்கேற்ப
அந்த பங்களாவில் சுற்றி திரிந்த பெண்ணின் ஆவியானது, அந்தப்பெண் கோமாவிலிருந்து
விழித்ததும் ,சிலகாலங்களில் அந்த பங்களாவில் சுற்றி திரிந்த ஆவியின் நடமாட்டமும்
இல்லாமல் போனது. இப்போது உங்களுக்கு பல விஷயங்கள் புரிந்து இருக்கும்.
கொலை,விபத்து போன்ற அகால மரணமடைந்தவர்களின் ஆவிகள் பழி தீர்க்கும் வரையிலோ, அல்லது
ஆசைகள் நிறைவேறும் வரையிலோ பூமியில் உலவும் என்று கேள்வி பட்டு இருப்பீர்கள்.
இப்பொழுது அந்த சம்பவங்களையும் , மேலே சொன்ன psychons theory யையும் ஒன்றாக
பிணைத்து கூட்டி கழித்து பாருங்கள்.கணக்கு சரியாக வரும். உங்கள்
வாழ்வில் நடந்த பல இனம்புரியாத சம்பவங்களுக்கும், உங்களுக்கு அடிக்கடி வரும்
கனவுகளுக்கும் கூட இது ஒரு திறவு கோலாக இருக்கும்.மேலும் நமது முன்னோர்கள்
கூறிய படி சித்தர்களின் கூடுவிட்டு கூடு பாய்தல், ஒரு இடத்தில இருந்துகொண்டு
வேறொரு இடத்தில இருப்பது போன்ற மாயை தோற்றுவித்தல் போன்ற பல அதிசய
சம்பவங்களுக்கும் இதுவே அடிப்படை கோட்பாடு. ஆனால் இப்போது நான் அதை பற்றி பேசினால்
உங்களை ஆன்மிகத்தின் வழியே கொண்டு செல்வது போல் ஆகிவிடும். எனவே அதை வேறொரு
தொடரில் விரிவாக எழுதுகிறேன்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக