Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

தனியார் பள்ளிகளில் இலவச, 'அட்மிஷன்' விண்ணப்ப பதிவு துவக்கம்.

தனியார் பள்ளிகளில் இலவச, 'அட்மிஷன்' விண்ணப்ப பதிவு துவக்கம் க்கான பட முடிவு


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணமின்றி படிப்பதற்கான, 25 சதவீத மாணவர் சேர்க்கை பதிவு, நேற்று துவங்கியது. விண்ணப்பங்களை, மே, 18க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மத்திய - மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், 25 சதவீத இடத்தில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும்.இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில், நுழைவு வகுப்பாக, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு இருந்தால், அந்த வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும். 

இதன்படி மாணவர்களை சேர்ப்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. விண்ணப்ப பதிவை, மே, 18க்குள் மேற்கொள்ள அவகாசம் தரப்பட்டுஉள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையின்,http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற, இணையதள இணைப்பில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.இதில், பெற்றோர், அவரவர் இடங்களில் இருந்தும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதேபோல, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலகங்களில், இணையதளத்தில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அலுவலகங்களின் முகவரிகளை அறிய, அருகில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை தொடர்பு கொள்ளலாம்.மாவட்ட கலெக்டர் அலுவலகம், துணை கலெக்டர் அலுவலகம் போன்றவற்றில், மக்கள் தொடர்பு அலுவலர்களிடமும் தெரிந்து கொள்ளலாம்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக