இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
மத்திய
அரசு ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகளை தடை செய்து விட்டது தான். இதனால்
பெரும்பாலும் கருப்புப் பணத்தை மட்டும் அல்ல கள்ள நோட்டுகளையும் ஒழித்து விட்டது
என கூறிக்கொண்டாலும் கள்ள நோட்டனது இப்பொழுதும் புழக்கத்தில் தான் உள்ளது
எனினும்
எதிர்காலத்தில், இனிமேல் கள்ள நோட்டுகளே வராது என்று சொல்ல இயலாது (காரணம் ஐம்பது,
நூறு ரூபாயில் கூட கள்ள நோட்டுக்களை பார்க்க முடிகிறது). தவிர ரூபாய் நோட்டுக்களை
பொறுத்தவரையில் தொழில்நுட்பம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் அதனை மீறி ஒரு புதிய
யுத்தியை கண்டறிந்து அதன் மூலம் மோசடி செய்யும் சில கும்பல்கள் இருக்கத் தான்
செய்கின்றன.
திருடனாய்
பார்த்து திருந்தினால் தானே திருட்டை ஒழிக்க முடியும்?. நடக்கின்ற காரியமா இது.
எல்லாம் பூனைக்கு மணி கட்டும் கதை தான். எனினும் ஒருவேளை எதிர்காலத்தில் கள்ள
நோட்டுக்கள் ஏடிஎம்ல் பணம் எடுக்கும்போது தப்பித் தவறி வந்து விட்டால் ஒரு தனி
மனிதர் உடனுக்குடன் என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை சொல்லும்
பதிவு தான் இது.
ஏடிஎம்ல்
பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது
என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள்
இதனால் நஷ்டம் நமக்குத் தான் அப்படி இல்லாமல் ஏடிஎம்ல் கள்ள நோட்டு வந்தால் நாம்
என்ன செய்யவேண்டும்? யாரை அணுக வேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி
பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன?
ஏடிஎம் ஃபிட் கரன்சி!
ஏடிஏம்
வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறை வு ஏடிஎம்ல் ரூபாய்த் தாள்களை
லோடுசெய்வதற்கு முன் அவை ஏடிஎம் ஃபிட் கரன்சிகளா க (ATM fit currency) மாற்றப்
படுகின்றன இந்த செயல்பாட்டின் போதே கள்ளநோட்டுகள் பெரும் பாலும் தவிர்க்கப்
பட்டுவிடும் ஆர்பிஐ சொல்லும் இந்த விதி முறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்
என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறை யைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்
அனைத்து
வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து
வைத் திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒரு முறையாவது
வங்கிகளுக்குள் வராமல் இருக்காது கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்
திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.
எப்படி வருகிறது?
எந்த
வங்கியின் ஏடிஎம் மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில்
இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது Cash In Transit போன்ற பெரும்
பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின்றன இவர்களின் பணி
வங்கியிலிருந்து மொத்த மாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின்
ஏடிஎம் மெஷின்களுக்குள் லோடு செய்வது தான் இவர்களின் உண்மைத் தன்மையையும்,
தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.
யாரை அணுகுவது?
வாடிக்கையாளர்கள்
ஏடிஎம்ல் பணம் எடுக்கும் போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால்,
வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏடிஎம் சென்டருக்குள் இருக்கும் சிவி
வி கேமரா வில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது
அவசியம் ஏனெ னில், ஏடிஎம் மெஷினுக்கு ள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும்
எண்கள் ஸ்டோர் ஆகாது அதனால் சந்தேகத்திற் குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன்
மூலம், வங்கியா னது உங்களைப் பற்றி விசாரி க்கும்போது உங்களின் மீதான நம்ப
கத்தன்மையை அதிகரிக்கும்
பின்னர்
ஏடிஎம் லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏடிஎம் எந்த வங்கியுடன்
தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும் ஏடிஎம் சென்
டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏடி எம் தொடர்பான
பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படு த்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு
எண்களைத் தந்திருப் பார்கள் அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படு
த்திவிட்டு, நேரில் சென்று உறுதி ப்படுத்திக் கொள்ளலாம்
வங்கி நடைமுறைகள்!
ஏடிஎம்ல்
இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடை முறை
என்ன என்று பார்ப்போம் ஏடிஎம்ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும்
முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த் தாளுட ன் வங்கியை அணுகியதும், அவர் கள்
அந்த ரூபாய் கள்ள நோட்டு தானா என்று பரிசோதிப்பார்கள் அது கள்ள நோட்டு இல்லை
எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள் கள்ள நோட்டுதான் என்று
தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இரு ந்த எண்ணைக்
குறிப்பிட்டு ரசீது ஒன் றை தருவார்கள் உங்களிடம் பெறப் பட்ட ரூபாய்த் தாள் அந்த
வங்கியின் ஏடிஎம்ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு
(நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏடி எம்ல்
இருந்து சிவிவி கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப் பதன் மூலமும், உங்களின்
பின்புலன்க ளை விசா ரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்
படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை
தருவார்கள் இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தே கம் வந்தால்
அவர் மீது வங்கி யானது சட்ட ரீதியான நடவடிக் கை எடுக்கத் தயங்காது
எஃப்ஐஆர் ஃபைல்!
பொதுவாக
வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக் கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி
ஏடிஎம்ல் இருந்து பண த்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்
போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும்
பட்ச த்தில் மட்டுமே அவர்களின்மீது வங்கி உடனடியாக காவல் நிலையத் தில் எஃப்ஐஆர்
ஃபைல் செய்யும் அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டு
களாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக் கொண்டு விசாரிக்கும்
தனது ஏடிஎம் ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக் கிறது என்று
நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும் வாடிக்கையாளர் களி டம்
இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதி யில் காவல் நிலையத்தில்
தெரிவிக்க வேண்டும்
ஆர்பிஐன் உதவி!
வங்கி
ஏடிஎம்ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள
நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும் போது, அதில் இரண்டு
உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்க ளுக்கு
சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு(Currency chest
branches) சென்று உங்களின் சந்தேகத் தை நிவர்த்தி செய்து கொள்ள லாம் அதற்கு
அடுத்தும் உங்க ளின் சந் தேகம் நீடித்தால்ஆர் பிஐயை அணுகி ரூபாய்த் தாள் உண்
மையானது தானா என்பதை பரிசோதித்து தெரி ந்து கொள்ளலாம் இதுதொடர் பாக மேலும்
விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisaboltahai.rbi.org.in என்கிற ஆர்பிஐ இணையதளங்க
ளை நாடலாம்’
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக