Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

பிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்!

பிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்! க்கான பட முடிவு


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
“ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஆடு – புலி அரசியல் சுறுசுறுவென அரங்கேற ஆரம்பித்துவிட்டது. மே 23-ம் தேதி மத்தியில் மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கப் போவது யார் என்பதற்கான விடை தெரிந்துவிடும். தமிழக முதல்வர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி நீடிக்கவேண்டும் என்றால், 10 எம்.எல்.ஏ-க்கள் கண்டிப்பாகத் தேவை. இதை எளிதில் எட்டிவிடலாம் என்று அ.தி.மு.க தரப்பு உறுதியாக நம்பிக் கொண்டிருக்க, ‘ஆட்சிக்குச் சிக்கல்’ என்று மத்திய உளவுத்துறை ‘நோட்’ போட்டிருப்பது, எடப்பாடி தரப்பை அப்செட் ஆக்கிவிட்டதாம்.’’
“அதென்ன நோட்?’’
“தேர்தல் முடிந்த கையோடு மத்திய உளவுத்துறையான ஐ.பி தமிழகம் முழுக்க ஒரு சர்வே எடுத்துள்ளது. ‘28 நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க உறுதியாக வெல்லும். இரண்டு இடங்களில் இழுபறியாக இருக்கிறது. இதிலும்கூட கடைசியில் தி.மு.க வென்றுவிடும். சட்டமன்றத்தைப் பொறுத்தவரை தேர்தல் நடந்த 18 தொகுதிகளில் 11 தி.மு.க-வுக்கும், ஏழு அ.தி.மு.க-வுக்கும் கிடைக்கும். இந்த ஏழு இடங்களிலும்கூட கடும் நெருக்கடிக்கு இடையேதான் வெற்றி கிடைக்கும். இதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது’ என்கிறது அந்த ரிப்போர்ட். இது தெரிந்ததுமே, போர்டில் விதம்விதமாக நம்பர்களை எழுதி, அழித்து கணக்குகளைப் போட்டுப்பார்க்க ஆரம்பித்துவிட்டதாம் எடப்பாடி தரப்பு.’’
“அதென்ன கணக்கு?’’
“ஏழு தொகுதிகளில்தான் வெற்றி என்கிற நிலையில், மே 19-ம் தேதி நடக்கவிருக்கும் மீதமுள்ள நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற்றே ஆகவேண்டும். இந்த நான்குமே அ.தி.மு.க கோட்டையாக உள்ள தொகுதிகள். என்றாலும், பணவிளையாட்டுக்கு மக்கள் பழகிவிட்டதால், இங்கெல்லாம் கூடுதலாக இரண்டாயிரம் ரூபாயைச் சேர்த்து கவனித்தால், கணிசமான வாக்குகள் நம் பக்கம் வந்துவிடும் என்று கணக்குப் போடுகிறார்களாம். இதற்காகவே அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றியச் செயலாளர்கள் அத்தனை பேரையும் படைபடையாக நான்கு தொகுதிகளுக்கும் அனுப்பும் வேலை நடக்கிறது. அப்படியும்கூட வெற்றி கிடைக்காமல் போனால், ‘ப்ளான் பி’ தயாராக இருக்கிறது.’’

“அதென்ன ‘ப்ளான் பி’?’’
“அதாவது, தற்போது இடைத்தேர்தல் நடைபெற்ற 18 தொகுதிகள் மற்றும் தேர்தல் நடக்கவுள்ள நான்கு தொகுதிகளையும் சேர்த்து 22 தொகுதிகளில் ஏழு தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கும்பட்சத்தில், ஏற்கெனவே உள்ள 114 எம்.எல்.ஏ-க்களுடன் சேர்த்தால், 121 ஆகிவிடும். ஆனால், அ.தி.மு.க-வின் இரட்டைஇலை சின்னத்தில் வெற்றி பெற்ற ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்களும் தினகரன் பக்கமே நிற்கிறார்கள். கருணாஸ் மற்றும் தமீமுன் அன்சாரி ஆகிய இரு எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க வுக்கு எதிராக இருக்கிறார்கள். இந்த ஐந்து பேரையும் கழித்தால், 116 ஆகிவிடும்.’’
“பெரும்பான்மைக்கு ஆபத்துதான்.’’
“அதேதான்… அதனால் இந்த ஐந்து பேரையும் முன்கூட்டியே தகுதிநீக்கம் செய்தால், மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 229 ஆகிவிடும். 115 இருந்தாலே பெரும்பான்மை கிடைத்துவிடும். இதுதான் ப்ளான் பி. முன்னெச்சரிக்கையாக எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-க்கள்மீது கைவைக்கும் வேலைகளும் நடக்கின்றன.’’
“எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் திட்டமா?’’
“இழுப்பது எடப்பாடி வேலையல்ல. பதவியிலிருந்தே தூக்குவதுதான் அவர் ஸ்டைல். சட்டசபைக்குள் குட்காவை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கொண்டுவந்தது தொடர்பான சர்ச்சை சபாநாயகர் வசம் உள்ளது. இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் மூலம் தி.மு.க தரப்பு தடை வாங்கியுள்ளது. இந்த வழக்குக்கு உயிர்கொடுத்து, தடை ஆணையை உடைத்துவிட்டால், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலரைப் பதவியில் இருந்து தூக்கலாம். இதை ‘பிரம்மாஸ்திரம்’ என்கிற வகையில்தான் வைத்துள்ளாராம் எடப்பாடி. எப்பாடுபட்டாலும், இன்னும் இரண்டாண்டுகளுக்கு ஆட்சியை ஓட்டிவிடவேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.’’
“கூட்டிக்கழித்துப் பார்த்தால் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மீண்டும் மலரவேண்டுமே!’’
“இதையும் யோசிக்காமலா இருப்பார்கள். முன்கூட்டியே காங்கிரஸ் பக்கமும் ‘பிட்’டைப் போட்டுவைத்துள்ளார்களாம். காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் தேர்தலுக்கு முன்பாகவே எடப்பாடி தரப்பிலிருந்து பேசியவர்கள், ‘ஆட்சிக்கு வந்தால்… அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாது. பி.ஜே.பி-க்கு செய்த அத்தனை மரியாதைகளையும் செய்துவிடுகிறோம். நாடாளுமன்றத் தொகுதிகள் எங்களுக்கு முக்கியம் இல்லை. சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில்தான் எங்கள் கவனத்தைக் குவித்துள்ளோம். இப்போது காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் எங்களால் எந்தவித நெருக்கடியும் இருக்காது’ என்று ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டு வைத்திருக்கிறார்களாம்.’’
“அடேங்கப்பா… அசத்துகிறார்களே!’’
“இதற்கு, ‘தி.மு.க-வுடன் பேசிவிட்டுத்தான் இதை முடிவு செய்யவேண்டும்’ என்று காங்கிரஸ் தரப்பில் சொல்ல, ‘அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று எடப்பாடி தரப்பில் கொடுத்த பதிலைப் பார்த்து ஆடிப்போய்விட்டாராம், அந்த காங்கிரஸ் தலைவர். தேர்தலுக்குப் பிந்தைய நிலவரப்படி புதுச்சேரி உட்பட காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் எட்டு தொகுதிகள் அந்தக் கட்சிக்குக் கிடைத்துவிடும்’ என்று வந்துள்ளது. இதற்கும் எடப்பாடி தரப்பு போட்டிருக்கும் டீலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை நீரே விசாரித்துக்கொள்ளும்.’’

“சரி, தி.மு.க தரப்பில் என்ன நினைக்கிறார்கள்?’’
“தி.மு.க-வுக்கு 30 நாடாளுமன்றத் தொகுதிகள், 12 சட்டமன்றத் தொகுதிகள் கிடைக்கும் என்று உள்கட்சி உளவுத்துறை கணக்குச் சொல்லியுள்ளது. ஆனால், ‘30 ஓ.கே. 12 சந்தேகம்தான்’ என்று மு.க.ஸ்டாலினே சொல்கிறாராம். காரணம், இடைத்தேர்தல் தொகுதிகளில் அ.தி.மு.க தரப்பு கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் நன்றாக வேலை செய்துள்ளது. இதெல்லாம் தன் கவனத்துக்கு வந்ததை வைத்துத்தான் ஸ்டாலின் சந்தேகப்படுகிறாராம்.’’
“ஓகோ!’’
“ஒருவேளை, எடப்பாடி போட்ட கணக்கையும் மீறி தி.மு.க ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டால், முதல்வர் பதவியை ஏற்கமாட்டார் ஸ்டாலின். ஆட்சியைக் கலைத்துவிட்டு பொதுத்தேர்தலைச் சந்தித்து முழுபலத்தோடு வரவேண்டும் என்பதே அவரின் திட்டம். குறிப்பாக, மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தி.மு.க விரும்பும். இல்லை என்றால், எடப்பாடி ஆட்சியே மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குத் தொடரட்டும் என்று தி.மு.க தரப்பில் நினைக்கிறார்களாம்.’’
“இதற்கும் எடப்பாடி தரப்பு டீலுக்கும் தொடர்பு உண்டா என்பதை நாமே விசாரித்துக்கொள்கிறோம்’’ என்று சொல்ல, ‘க்ளுக்’கென்று சிரித்த கழுகார், “தேர்தலுக்கு முன்பாக நிதி நெருக்கடியில் தி.மு.க சிக்கி மீண்டிருக்கிறது. தேர்தலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக தி.மு.க தலைமையிடமிருந்து பணம் வரும் என்று வேட்பாளர்கள் பலரும் காத்திருந்தார்கள். வாக்காளர்களுக்குப் பணம், பூத் கமிட்டி பணம் போன்றவற்றை வைத்து ஈடுகட்ட நினைத்திருந்தனர். ஆனால், தலைமைக்கு உரிய இடத்திலிருந்து பணம் வந்து சேரவில்லையாம். எதிர்க் கட்சிகளைக் கண்கொத்தி பாம்பாக மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து வருவதால், பலரும் பணத்தை வெளியில் எடுக்காமல் பதுங்கிவிட்டார்களாம்.’’
“பிறகு!’’
“தி.மு.க-வின் வாரிசு பிரமுகர், முக்கியத் தொழில் அதிபர்கள் சிலரை அவசரமாகத் தொடர்புகொண்டு நிலைமையைச் சொல்லி உதவி கேட்டுள்ளார். வருமானவரித் துறை கெடுபிடிக்கு பயந்த பலரும், இருப்பு இல்லை என்று கைவிரித்துள்ளனர். கடைசியாக, பெங்களூரு தொழில் அதிபர் ஒருவர் மூலமாகத்தான் பணம் கிடைத்ததாம். பொன்முடி, ஜெகத்ரட்சகன் போன்றவர்களைப் பக்கத்துத் தொகுதிகளுக்கும் சேர்த்துக் கவனிக்கச் சொல்லி சமாளித்துள்ளார்கள்’’ என்று சொல்லி கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார், “தமிழ்ப்புத்தாண்டுக்குப் பிறகு தனக்கு நெருக்கமான சிலரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் ரஜினிகாந்த். ‘மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சி தொடங்குவது பற்றிய முறையான அறிவிப்பை வெளியிடலாமா?’ என்று அவர்களிடம் ஆலோசனைக் கேட்டுள்ளார். ‘அதுதான் நல்ல நேரம். அதைச் செய்து முடியுங்கள்’ என்று அனைவருமே ஆதரவாக கை தூக்கியுள்ளனர். அநேகமாக க்ளைமாக்ஸ்தான் என்றபடி மேகங்களுக்கு இடையே கலந்தார் கழுகார்.

தேர்தல் பரபர
தேர்தலுக்கு மறுநாள் 19-ம் தேதி் ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, ‘23 நாடாளுமன்றத் தொகுதிகள், 13 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிபெறும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் அளித்துள்ளது. நாம் கடுமையாக உழைத்தது ஒரு பக்கம் இருந்தாலும் பல தொகுதிகளில் தி.மு.க-வின் உட்கட்சி மோதல் நமக்குக் கைகொடுக்கும். ஆட்சிக்கு ஆபத்து இல்லை. மீதமிருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தெம்பாக வேலை செய்யுங்கள்’ என்று சொன்னாராம் முதல்வர்.
Description: https://i2.wp.com/img.vikatan.com/jv/2019/04/mzniod/images/dot_1556029248.jpgதி.மு.க கூட்டணிக் கட்சியான கொங்கு மக்கள் தேசியக் கட்சி, பொள்ளாச்சி தொகுதியைத்தான் முதலில் கேட்டது. அந்தக் கட்சியின் தலைவர் ஈஸ்வரனைச் சந்தித்த தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் இருவர், அவர் மனதை மாற்றி, நாமக்கல் தொகுதிக்குத் தள்ளிவிட்டனர். இதன் பின்னணியில் ‘மணி’யான அமைச்சர் ஒருவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. நாமக்கல்லில் தி.மு.க நேரடியாக வேட்பாளரை இறக்கினால், அ.தி.மு.க-வுக்கு வெற்றி கிடைக்காது என்று அந்த அமைச்சரும், அதிகாரம் பறிபோய்விடும் என்று மாவட்டச் செயலாளர்களும் கூட்டுச்சேர்ந்து இந்த வேலையைச் செய்ததாக நாமக்கல் தி.மு.க-வினர் கிசுகிசுக்கிறார்கள்.
Description: https://i2.wp.com/img.vikatan.com/jv/2019/04/mzniod/images/dot_1556029248.jpgஅ.ம.மு.க-வை அரசியல் கட்சியாக அதிகார பூர்வமாகப் பதிவுசெய்ததை அக்கட்சியிலிருக்கும் சில மூத்த நிர்வாகிகளே ரசிக்கவில்லையாம். இது சசிகலாவை ஒரேயடியாக ஓரங்கட்டும் நடவடிக்கையாகவே பார்க்கிறார்களாம். தென்மண்டல தளபதி ஒருவர், அண்டை மாநில பொறுப்பாளர் ஒருவர் ஆகியோரோடு மற்றும் சிலரும் விரைவிலேயே அதிரடி முடிவெடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
Description: https://i2.wp.com/img.vikatan.com/jv/2019/04/mzniod/images/dot_1556029248.jpgஅ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர்களாகப் போட்டியிட்ட வாரிசுகள் மூன்று பேர், இப்போதே மத்திய அமைச்சர் கனவில் இருக்கிறார்களாம். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன், மத்திய நெடுஞ்சாலைத் துறைக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸின் மகன் ரவீந்திரநாத் குமார், மத்திய சுகாதாரத் துறைக்கு, அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் என இலாகாக்களைப் பிரித்துள்ளனராம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக