
மஞ்சள்
பூசணிக்காய் எனப்படும் பரங்கிக்காயில் அதிகளவு நார்சத்து இருக்கு. அதனால் உடல் எடையை
குறைக்க நினைக்குறவங்க தாராளமாய் சாப்பிடலாம். இதில்
அதிகளவில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் இருக்குறதால, உடலுக்கு தேவையான ஆற்றலை
தரும். பூசணிக்காயின் ஆரஞ்சு
கலர், அதில் இருக்கும் அதிகளவிலான பீட்டா கரோட்டின் அடக்கப் பொருளை
வெளிக்காட்டும்.
பீட்டா
கரோட்டின் என்பது வைட்டமின் ஏ-யின் முன்னோடி. ஆரோக்கியமான நோய்
எதிர்ப்பு சக்திக்கும், கண் பார்வைக்கும் இது அவசியமாகும். சரும
புண்களை ஆற்ற, சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்க, தழும்புகளை மறைய செய்ய இந்த
பூசணிக்காய் உதவுது. உடற்பயிற்சியில் ஈடுபட்ட பிறகு எலெக்ட்ரோலைட்
சமநிலையை மேம்படுத்தவும் உதவுது.
வாழைப்பழத்தில் இருப்பதைவிட இதில் அதிகளவிலான பொட்டாசியம்
இருக்கு. (பூசணிக்காயில் 564 மி.கி. vs வாழைப்பழத்தில் 422 மி.கி) ஒரு கப்
பூசணிக்காயில் 11 மி.கி. வைட்டமின் சி இருக்கு. மேலும் வைட்டமின்
சி-யில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் இருக்கு பூசணிக்காயில்
உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு நடத்தப்பட்ட
ஒரு ஆய்வின் படி, பீட்டா கரோட்டின் உட்கொள்பவர்களுக்கு தொற்றின் இடர்பாடு
குறைந்துள்ளது கண்டுபிடிச்சிருக்காங்க.
இத்தனை
மகிமை வாய்ந்த பூசணிக்காயில் ஒரு கூட்டு செய்முறையை இன்னிக்கு பார்க்கலாமா?!
தேவையான
பொருட்கள்..
- மஞ்சள் பூசணிக்காய்
- வெங்காயம்,
- தக்காளி,
- பூண்டு,
- காய்ந்த மிளகாய்
- குழம்பு மிளகாய் தூள்
- உப்பு,
- எண்ணெய்’
- கடுகு
- கடலை பருப்பு அல்லது துவரம்பருப்பு
· மஞ்சள்
பூசணிக்காயை தோல் சீவி, கழுவி சின்னசின்னதா
வெட்டிக்கனும். வெங்காயத்தை கழுவி வெட்டிக்கனும். பருப்பினை வேக வச்சுக்கனும்.
· அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு பொரிய விடனும்.
· பூண்டை தோல் உரிச்சு நசுக்கி சேர்த்துக்கனும். காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டுக்கனும்..
· வெங்காயம் சேர்த்து வதக்கனும்..
· தக்காளி கொஞ்சம் சேர்த்து வதக்கனும். தக்காளி சேர்க்கலைன்னாலும் பரவாயில்லை.
· மஞ்சள் பூசணிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கனும்.
· கொஞ்சூண்டு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கி...கொஞ்சூண்டு தண்ணி ஊத்தி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடனும்.
· வேக வைத்திருக்கும் கடலைப்பருப்பு சேர்த்துக்கனும். துவரம்பருப்பையும் சேர்த்துக்கலாம். அவரவர் விருப்பம்.
· கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கிடனும்..
· கொஞ்சம் இனிப்பு சுவையோடு சாப்பிட இந்த கூட்டு நல்லா இருக்கும். கொஞ்சம் அதிகமா தண்ணி சேர்த்து, அதில் அப்பளத்தினை பொரிச்சு உடைச்சு போட்டா பூசணிக்காய்+ அப்பளக்கூட்டு ரெடி. சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைஞ்சு சாப்பிடவும் நல்லா இருக்கும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக