Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

மூக்கிலிருந்து ரத்தம் வடிவது ஏன்?

மூக்கிலிருந்து ரத்தம் வடிவது ஏன்? க்கான பட முடிவு







இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்

கோடையில் வெப்பக்காற்றை சுவாசிக்கும்போது, மூக்கின் உள்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, தூசு மற்றும் அழுக்குகள் அதிகளவில் சேர்ந்துவிடும். சிலர், அதை விரல்களால் வெளியே எடுக்க முயல்வார்கள். அப்படிச் செய்யும்போது மூக்கின் உள்பகுதியில் விரல் நகம் கீற வாய்ப்பிருக்கிறது. அதிக அழுத்தம் கொடுத்து, அழுக்கை வெளியே எடுக்கும்போது ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டும் ரத்தக்கசிவு ஏற்படலாம். உடலில் சூடு அதிகரிப்பதாலும், மூக்கிலிருந்து ரத்தம் வரலாம்
.
சிலருக்கு மூக்கின் அமைப்பில் தண்டுவடம் மட்டும் வளைந்து காணப்படும். அவர்களால் மூக்கின் ஒரு பக்கம் மட்டுமே முழுமையாக சுவாசிக்க முடியும். இன்னொரு பக்கம் அடைப்பு ஏற்பட்டு சுவாசம் தடைப்படும். அந்தப் பக்கத்தில் செல்லும் குறைந்த அளவு சுவாசமும் வெப்பக்காற்றாக இருந்தால், ரத்தக்குழாய்கள் சேதமடைந்து ரத்தம் வரத் தொடங்கும். மூக்கில் ரத்தம் வரும் பிரச்னையுள்ளவர்கள், நேரடியாக வெயிலில் நடப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வெப்பக்காற்று நிரம்பியிருக்கும் அறைகளில் நீண்ட நேரம் இருக்கக் கூடாது. நீர்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
முதலுதவி
மூக்கில் எந்தப் பக்கம் ரத்தம் வருகிறதோ, அந்தப் பகுதியின் வெளிப்புறத்தை இரண்டு நிமிடங்களுக்கு விரல்களால் அழுத்திப் பிடிக்க வேண்டும். சில நிமிடங்களில் ரத்தக்கசிவு நின்றுவிடும்.
ஐஸ் கட்டிகளை, சுத்தமான துணியில்வைத்துக் கட்டி, ரத்தம் வரும் இடத்துக்கு வெளியில் மெதுவாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்கும். ரத்த ஓட்டம் தடைப்பட்டு, ரத்தக்கசிவு நின்றுவிடும்.
பத்து நிமிடங்களுக்கும் மேல் ரத்தம் தொடர்ந்து கசிந்துகொண்டிருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.  
ரத்தக்கசிவு, எல்லா நேரங்களிலும் வெப்பம் காரணமாகவே ஏற்படும் என உறுதியாகச் சொல்ல முடியாது. ஓரிரு தினங்கள் தொடர்ந்து ரத்தக்கசிவு இருந்தால், மருத்துவரை அணுகி ‘எண்டோஸ்கோபி’ (Endoscopy) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.’’
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.


2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.


3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.


4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக