இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..இப்பொழுதே இணைந்துகொள்
லட்சம் லட்சமாகச் சம்பாதித்தாலும், ஒருவருடைய
கிரெடிட் ஸ்கோர்தான் அவருக்குக் கடன் வாங்கும் தகுதியைத் தீர்மானிக்கிறது. கடன்
கேட்டு வங்கியை யார் அணுகினாலும், வங்கிகள் முதலில் பார்ப்பது கடன் கேட்டு
வருகிறவருக்கு கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்கிறது என்பதைத்தான். அதன்பிறகுதான்,
அவர் சம்பளதாரரா, தொழில்முனைவோரா, மாத வருமானம் எவ்வளவு, கடனைத் திருப்பிச்
செலுத்துவதற்குத் தகுதியானவரா என்பதையெல்லாம் பார்ப்பார்கள்.
பொதுவாக, வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச்
செலுத்துவதில் பலர் தவறான அணுகுமுறையைக் கையாள்கிறார் கள். இதனால் அவர்களின்
கிரெடிட் ஸ்கோர் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் 300-900 என்கிற
அளவில் இருக்கும். ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் 750-க்குமேல் இருந்தால்,
அவருக்கு சுலபமாகக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால்,
750-க்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில்தான், கடன் தருவதற்கான கிரெடிட்
ரிப்போர்ட் பரிசோதிக்கப்படும். ஒருவருடைய கிரெடிட் ஸ்கோரில் கடனைத்
திருப்பிச் செலுத்திய விவரங்கள் தொடர்பாக 35%, தற்போது இருக்கும்
கடன்களுக்கு 30%, தற்போது இருக்கும் கடன் வகைகள் தொடர்பாக 10%, முந்தைய கடன்
விவரங்கள் தொடர்பாக 15%, புதிதாக விண்ணப்பித்திருக்கும் கடன்களுக்கு 10% என்கிற
அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
உரிய காலத்தில் இ.எம்.ஐ செலுத்தாமல் இருப்பது
வீட்டுக் கடன், வாகனக் கடன், கிரெடிட்
கார்டு கடன் என எதுவாக இருந்தாலும், அதற்கான தவணைத் தொகையை மாதந்தோறும்
திருப்பிச் செலுத்துவது மிக முக்கியம். பெரும்பாலானவர்கள், கடன் வாங்கிய புதிதில்
சரியாகச் செலுத்திவிட்டு, நாளாக நாளாக மாதத் தவணைத்தொகை செலுத்துவதைத் தள்ளிப்
போட்டுக்கொண்டே இருப்பார்கள். சில மாதங்கள் கழித்து, கடனுக்கான தவணைத் தொகையைக்
கட்டாமலேயே தவிர்த்து விடுவார்கள். இதனால் ஒருவரது கிரெடிட் ஸ்கோர் பெரிதும்
பாதிப்படையும்.
வங்கியில் அல்லது வங்கிசாரா நிதி
நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான, ஒரு தவணைத்தொகையைத் தள்ளிப்போட்டாலோ அல்லது
கட்டாமல்விட்டாலோ, அது கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி
இருக்கும்போது, கடனுக்கான இ.எம்.ஐ தொகையை மாதக்கணக்கில் கட்டாமல்விடுவது
பிரச்னைக்குத்தான் வழிவகுக்கும்.
இ.எம்.ஐ கட்டாமல்விடும் பழக்கத்தை
நீங்கள் ஒருமுறை கடைப்பிடித்தாலும், உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை மீண்டும் பழைய
நிலைக்குக் கொண்டுவர குறைந்தபட்சம்
6 முதல் 8 மாதம் வரை ஆகும்.
கிரெடிட் லிமிட்டை அதிகபட்சம் பயன்படுத்துவது
கிரெடிட் கார்டுமூலம் எடுக்கப்படும்
கடன் வாங்குவதற்கான வரம்பினை மீறி, கடன் வாங்கினாலும் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.
ஒருவருடைய கிரெடிட் கார்டு கடன் வரம்பு ஒரு லட்சம் ரூபாய்
எனக்கொண்டால், அதிலிருந்து 40,000 ரூபாயைத்தான் அதிகபட்சமாகக் கடனாக எடுத்து
பயன்படுத்த வேண்டும். இதை கிரெடிட் கார்டு கொடுக்கும்போதே தெளிவாகச் சொல்வார்கள்.
இதையெல்லாம் பொருட் படுத்தாமல், கிரெடிட் லிமிட்டைத் தாண்டி பயன்படுத்தும்
பழக்கம்தான் அதிகமாக இருக்கிறது. இதனால் கிரெடிட் ஸ்கோர் நிச்சயமாகப்
பாதிக்கப்படும்.
கிரெடிட் லிமிட் உங்களுக்கு அதிகமாக
இருக்க வேண்டுமென்றால், கிரெடிட் கார்டு பில் தொகையை மாதந்தோறும் சரியாகச்
செலுத்தும் போது ஆட்டோமேட்டிக்காக கிரெடிட் லிமிட் உயரும். அதேசமயம், கிரெடிட்
கார்டு லிமிட்டை அடிக்கடி உயர்த்துவதினாலும் கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கு
வாய்ப்புகள் அதிகம்.
கடன் கட்டாமலே இருந்துவிடுவது
வாங்கிய கடனைத் திரும்பக் கட்டாமல்
இருந்துவிடுவதினால் (Default), நம்முடைய கிரெடிட் ஸ்கோர் நிச்சயம்
பாதிப்படையும். ஒரு கடனுக்கான இ.எம்.ஐ தொகையைக் குறைந்தபட்சம் மூன்று மாதம்
கட்டாமல் விடும் போது, அந்தக் கடன் தானாகவே டிஃபால்ட் என்கிற நிலைக்குச்
சென்றுவிடும். அதை மீண்டும் மறுசீரமைப்பு செய்தால்தான், நடைமுறைக்கு வரும்.
ஒருவர் வாங்கிய கடனைத் திரும்பக்
கட்டாமல் விட்டால், அவருடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் பதிவாகும். அப்படிப்
பதிவானால், அடுத்தடுத்தக் கடன்களை வாங்குவதில் சிக்கல் உருவாகும். வங்கிக் கடனானது
திரும்பக் கட்டப்படாமல் இருந்தால், உடனடியாக முழுப் பணத்தையும் கட்டி
அடைத்துவிடுவதுதான் நல்லது. கடனை அடைத்த பிறகு `நோ டியூ சான்றிதழை’ அவசியம் கேட்டு
வாங்கவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பெயரில் வாங்கப்பட்ட கடன், திரும்பக்
கட்டப்படாமல் இருப்பதுபோல காட்டிக் கொண்டே இருக்கும்.
கிரெடிட் ஹிஸ்டரி இல்லாமல் இருப்பது
ஒருவர் கடன் வாங்கி, அதை முறையாகச்
செலுத்தும்போதுதான் அவரது கிரெடிட் ஸ்கோர் உயரும். அந்த கிரெடிட் ஹிஸ்டரியைப்
பார்த்துத் தான் அவருக்குக் கடன் தரலாமா, அப்படித் தந்தால் முறையாகத் திருப்பிச்
செலுத்துவாரா என்று பரிசீலிக்க முடியும்.
ஒருவர் இதுவரை எந்தக் கடனையும்
வாங்கவில்லை; அதனால் அவருக்கு கிரெடிட் ஸ்கோரே இல்லை என்றாலும், வங்கிகள் கடன் தர
வாய்ப்புக் குறைவு. எனவே, கிரெடிட் ஸ்கோர் பெறுவதற்காகவாவது, குறைந்த
வட்டியில் கிடைக்கும் கடன்களை வாங்கி, அதனைச் சரியாகத் திரும்பச் செலுத்துவதன்மூலம் கிரெடிட்
ஸ்கோரை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
அளவுக்கதிகமான கடன்
ஒருவர் அதிக அளவில் கடன் வைத்திருப்பதும் கிரெடிட் ஸ்கோரைப்
பாதிக்கும். ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்தைவிட, அவருக்கிருக்கும் கடன் அளவு
அதிகமாக இருக்கிறதெனில், அவரால் கடனுக்கான இ.எம்.ஐ தொகையை முறையாகச் செலுத்த
முடியாது. இதனால் தரப்பட்டிருக்கும் கடன் மீதான ரிஸ்க் அதிகமாகும். அப்போது
கிரெடிட் ஸ்கோர் குறையும். அதனால், கடன் அளவை எப்போதும் கட்டுக்குள்
வைத்திருப்பது நல்லது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக