ஷெபீல்ட் பல்கலைக்கழகம் உட்பட விஞ்ஞானிகளின் சர்வதேச குழுவினர்
நடத்திய ஆராய்ச்சியில், டஜன் கணக்கான மூட்டைப்பூச்சி மாதிரிகளின் டி.என்.ஏவை
ஒப்பிட்டு, அதன்குழுவில் உள்ள பரிணாம உறவுகளை புரிந்து கொள்ளவும், மனிதர்களுடனான
அவர்களின் உறவுகளை புரிந்து கொள்ளவும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மூட்டைப்பூச்சிகள்
50
முதல் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே உயிர்வாழ்ந்த பாலூட்டிகள் வவ்வால்கள் என
முன்னதாக மனிதர்கள் நம்பியிருந்த நிலையில், மூட்டைப்பூச்சிகள் அவற்றைவிட பழமையானவை
என இக்குழு கண்டுபிடித்துள்ளது. உண்மையில் கிட்டத்தட்ட 50 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்னரே மூட்டைப்பூச்சிகள் உருவாகியுள்ளன.
பரிணாம வரலாறு
மனிதர்கள்
தங்களது படுக்கையில் மிகமிக தேவைப்படாதவை என்ற பட்டியலில் இதுவரை முதலிடத்தில்
இருந்துவரும் மூட்டைப்பூச்சிகள் எப்போது தோன்றின என்ற தகவல் சிறிது
அறியப்பட்டிருந்தது.
மூட்டைப்பூச்சிகளான்
பரிணாம வரலாறு முன்னர் நினைத்ததைவிட சிக்கலானதாக இருப்பதாக இப்போது
கண்டுபிடித்துள்ள வல்லுனர்கள் , மேலும் டைனோசர்கள் காலத்திலேயே இவை இருந்தன
என்கின்றனர். தற்போதைய ஆராய்ச்சிக் குறிப்புகள் மற்றும் புரிதலின் படி
டைனோசர்களின் இரத்தத்தை வைத்து அவை உயிர் வாழ்ந்திருக்கலாம் என ஊகித்தாலும்,
அந்தசமயத்தில் அவை உயிர் வாழ்வதற்கான ஆதாரம் என்ன என்பதை அறிய இன்னும்
ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. ஏனென்றால் மூட்டைப்பூச்சிகள் மற்றும் அவற்றின்
அனைத்து உறவின விலங்குகளும் "பறவையின் கூடு, ஒரு ஆந்தையின் வளை, வவ்வால் கூடு
அல்லது மனிதனின் படுக்கை போன்ற வாழ்விடத்தை கொண்டிருப்பதாலும், டைனோசர்கள் ஏற்றுக்
கொள்ளாத ஒரு வாழ்க்கை முறை இது என்பதாலும் மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்காவின்
குகைகளில் எபோலா பாதிக்கப்பட்ட எருமைகள், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள பறவைகளின்
கூடுகள், தொங்கும் வவ்வால்கள் என உலகம் முழுவதும் உள்ள காட்டு தளங்கள் மற்றும்
அருங்காட்சியகங்கள் இருந்து மாதிரிகள் சேகரிக்க இக்குழு 15 ஆண்டுகளை கழித்தது.
ஷெஃபீல்ட்
ஷெஃபீல்ட்
பல்கலைகழகத்தின் விலங்கு மற்றும் தாவர விஞ்ஞான துறையின் பேராசிரியரும், இந்த
ஆராய்ச்சி குழுவில் பங்கேற்றவருமான மைக் சிவா-ஜோதி கூறுகையில் "இன்று நமது
படுக்கையில் வாழும் பூச்சியினமான இந்த மூட்டைப்பூச்சிகள் 100 மில்லியனுக்கும்
அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி, பூமியில் டைனோசர்களுடன் உலவி வந்துள்ளன
என்பதை ஒரு வெளிப்பாடே இது. இந்த மூட்டைப்பூச்சிகளின் பரிணாம வரலாறை முன்னர் நாம்
நினைத்ததை விட மிகவும் சிக்கலானது என்பைதையே இது காட்டுகிறது. " என்கிறார்.
பழமையானது
நோர்வேயில்
உள்ள யுனிவர்சிடி மியூசியம் பெர்கனை சேர்ந்தவரும், இந்த ஆய்வை வழிநடத்தியவருமான
டாக்டர் ஸ்டெஃபென் ரோத் கூறுகையில், "நாங்கள் கண்டுபிடித்த முதல் பெரிய
ஆச்சரியம் என்னவென்றால், உலகின் முதல் உயிரனம் என நாம் அனைவரும் கருதிய வவ்வால்களை
காட்டிலும் மூட்டைப்பூச்சிகள் பழமையானது என்பது தான். பழைய மூட்டைப்பூச்சிகளின்
பரிமாணம் என்பது நாம் எதிர்பார்த்திராத வகையில், ஒரே உயிரி வகையின் கீழ் ஏற்கனவே
வகைபடுத்தப்பட்டுள்ளன. ஆனால் டைனோசர்கள் பூமியில் வாழ்ந்தபோது மூட்டைப்பூச்சிகள்
எவ்வாறு வகைப்படுத்தப்பட்டு உயிர்வாழ்ந்தன என நமக்கு தெரியவில்லை" என்கிறார்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக