இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
கண்களில் அந்நியப் பொருள்கள் நுழைந்து
விட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் : தூசு, பூச்சி, உலோகத் துகள்கள் போன்றவை
கண்ணில் விழுந்துவிடும். இதனால் கண் வலிக்கும். கண் கூசும். எரியும். கண்ணைத்
திறக்க முடியாத நிலைமையும் ஏற்படுவதுண்டு. இந்நிலையில் நாம் செய்ய வேண்டிய சில
முதலுதவிகள் வருமாறு
பாதிக்கப்பட்ட நபரை நல்ல வெளிச்சம் உள்ள
இடத்தில் உட்காரச் சொல்லுங்கள். கண்ணில் புகுந்த பொருள் தென்படுகிறதா என்று
பார்க்கவும். கீழ் இமையைக் கீழே நோக்கி இழுங்கள். அவரை மேலே பார்க்கச்
சொல்லுங்கள். அடுத்து, மேல் இமையை மேல் நோக்கி இழுங்கள். அவரைக் கீழே பார்க்கச்
சொல்லுங்கள். கண்ணுக்குள் பொருள் இருப்பது தெரிந்தால், அந்த நபரை அகலமான
பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் கண்களை முக்கி, கண்களைத் திறந்து மூடச்
சொல்லுங்கள். பாத்திரம் இல்லையென்றால், இப்படியும் செய்யலாம். இமைகளை
விலக்கிக்கொண்டு, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம். இதன் மூலம் மேலோட்டமாக உள்ள
வெளிப்பொருள்கள் எளிதில் வெளிவந்துவிடும். அதே சமயத்தில் விழியில் புகுந்துவிட்ட
பொருள்கள் வெளியில் வராது. அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது. இதே போல்,
கருவிழியில் உள்ள பொருள்களைத் துவாலையால் துடைத்து எடுக்க முயற்சி செய்யக்கூடாது.
அதிலும் குறிப்பாக, கண்களை கசக்கவே கூடாது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக