.
ரவைப் பொங்கல் - குறைந்த கலோரியில் நிறைந்த சக்தி பெற ஒரு மாற்று வழி
தேவையான பொருள்கள்:
செய்முறை:
சமையல் குறிப்புகள்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
ரவைப் பொங்கல் - குறைந்த கலோரியில் நிறைந்த சக்தி பெற ஒரு மாற்று வழி
தேவையான பொருள்கள்:
- ரவை 1 ஆழாக்கு
- கடுகு அரை ஸ்பூன்
- எண்ணெய் தேவையான அளவு
- பயற்றம் பருப்பு கால் ஆழாக்கு
- இஞ்சி 1 சிறிய துண்டு
- முந்திரிப் பருப்பு 6 உடைத்தது
- மிளகு அரை ஸ்பூன்
- சீரகம் அரை ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- பச்சை மிளகாய் 1
- காய்ந்த மிளகாய் 1
- நெய் ஒன்றரைக் கரண்டி
செய்முறை:
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கிள்ளிய பச்சை மிளகாய் உடன் கிள்ளிய காய்ந்த மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை போட்டு வெடித்தவுடன் பயற்றம் பருப்பு போட்டு சிவக்க வறுத்து (அதாவது அதிகம் சிவந்து விடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்)
- பின்னர் இஞ்சி, முந்திரிப் பருப்பு, மிளகு, சீரகம் என எல்லாவற்றையும் வறுத்து (ஞாபகம் இருக்கட்டும், வறுக்கும் சமயத்தில் அடுப்பில் பிளேம் குறைவாக இருப்பது அவசியம்) இரண்டரை ஆழாக்கு நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- நன்றாக கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து வறுத்த ரவையை ஒரு கையால் சிறிது, சிறிதாக போட்டுக் கொண்டே மறுகையால் விடாது கிண்டிக் கொண்டே இருக்கவும். (அதாவது ரவை இறுகும் வரையில் கிண்ட வேண்டும்)
- பின்னர் நெய் சேர்த்து கரண்டிக் காம்பால் கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைத்துப் பரிமாறவும்.
- இதோ
இப்போது சூடான ரவைப் பொங்கல் தயார். இதனை காரச் சட்டினியுடன் பரிமாற சூப்பரோ
சூப்பர். என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக