இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
காலை டிபனுடன் குடிக்க ஏற்றது ஜூஸா, பாலா?
என்ற பட்டிமன்ற ஆராய்ச்சி ஆஸ்திரேலியாவில் நடந்தது.
குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக
இருப்பவர்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். மொத்த கூட்டமும் 2 பிரிவாக
பிரிக்கப்பட்டது. ஒரு குரூப்புக்கு தினமும் காலை டிபனுடன் கொழுப்பு சத்து நீக்கப்பட்ட
சுமார் 50 கலோரி அளவுள்ள பால் கொடுக்கப்பட்டது.
இன்னொரு குரூப்புக்கு அதே கலோரி அளவுக்கு
ஜூஸ். ஜூஸ் குடித்தவர்கள் மதிய உணவை வரிந்து கட்டி சாப்பிட்டனர். பால் குடித்தவர்களால்
அந்தளவு மல்லுக்கட்ட முடியவில்லை. கொஞ்சம் சாப்பிட்டதுமே ‘ஏவ்’ வந்துவிட்டது. இந்த
ஆய்வு பற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்
சத்தான பானம் பால். கொழுப்பு நீக்கிய பாலை குண்டாக இருப்பவர்கூட அருந்தலாம். குறைவான
கலோரிகள் மட்டுமே உடலில் சேரும். பாலில் புரதம், லாக்டோஸ் அதிகம். எனவே, காலை டிபன்
முடித்ததும் ஒரு டம்ளர் பால் குடித்தால் மதிய உணவின் அளவு குறையும். நாளாவட்டத்தில்
உடல் தானாக இளைக்கும்.
பழச்சாறு எளிதில் செரிக்கும். செரிமானத்தை அதிகப்படுத்தும் என்பதால்
சிறிது நேரத்திலேயே பசிக்கும். சீக்கிரம் சாப்பிடுவோம். அதிகம் சாப்பிடுவோம். உடம்பு
வெயிட் போடும். காலை டிபனுடன் அருந்துவதற்கு ஜூசை விட பால்தான் பெஸ்ட் என்கின்றனர்
ஆராய்ச்சியாளர்கள். ‘லார்ஜ் பெக்’ என்பது 60 மி.லி. 3 பெக் என்பது ஏறக்குறைய ஒரு டம்ளர்
என்பது குடிநிபுணர்களின் விளக்கம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக