
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
உலக
அளவில் ஆயிரக்கணக்கானோர் தன்னம்பிக்கையின் உதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள்,
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முக்கியமான ஒரு பத்து பேர் இந்த வாரம்.
- நிக் வாயிச்சஸ்
கொஞ்சம்
கலர் கம்மியா இருந்தாலே குறைபாடு என நினைக்கும் இந்தக் காலத்தில், இரண்டு கைகளும்,
இரண்டு கால்களும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ முடியுமா ? வாழ்ந்தாலும் சாதிக்க
முடியுமா ? அப்படியே சாதித்தாலும் சர்வதேச அளவில் பிரமிப்பை ஏற்படுத்த முடியுமா ?
கோடிக்கணக்கான மக்களுக்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்ட முடியுமா ?
இந்த அத்தனை கேள்விகளுக்குமான “ஆம்” எனும் பதில் தான் நிக் வாய்ச்சஸின் வாழ்க்கை.
பிறக்கும்
போதே இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லை. தற்கொலை எண்ணங்கள் பல முறை தலை
தூக்கியிருக்கின்றன. அவை அனைத்தையும் தாண்டி வாழ்க்கையில் உயரவேண்டும் என
தன்னம்பிக்கையைக் கையில் எடுத்தவர். இன்று உலகில் எல்லா நாடுகளிலும் பயணித்து தன்னம்பிக்கை
தளர்ந்த மனிதர்களுக்கு ஊக்கம் கொடுத்துக் கொன்ண்டிருக்கிறார். சமீபத்தில் திருமணம்
செய்து கொண்டு, குழந்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
சம
கால தன்னம்பிக்கை மனிதர்களில் தவிர்க்க முடியாதவர். இவருடைய வாழ்க்கை தன்னம்பிக்கை
தேடுவோருக்கான உற்சாக டானிக்.
- நந்தோ பர்ராடோ
இவரைப்பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? தென் அமெரிக்காவின் ஏன்ஸ் மலைப்பகுதியில் ஒரு விமான
விபத்து. தப்பிப் பிழைத்தவர்கள் விழுந்தது -37 டிகிரி குளிரில். பாதி பேருக்குப்
படுகாயம். சாப்பாடு இல்லை. பிணங்களைத் தான் சாப்பிடவேண்டும் எனும் துரதிர்ஷ்ட
சூழல். இந்தச் சூழலில் அகப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? நான்டோ
நம்பிக்கையைத் தளர விடவில்லை. 72 நாட்கள் போராடி, கடும் சவால்களைத் தாண்டி பலரை
தப்பிக்க வைத்திருக்கிறார்.
வாழவே
முடியாது எனும் சூழலிலும், வாழ்ந்தே தீருவேன் என தீர்மானமாய் போராடி ஜெயித்த
வாழ்க்கை தான் இவரது. பத்து மதிப்பெண் குறைந்து போனாலே தற்கொலை செய்து கொள்ளும்
கோழைகளின் தேசத்தில் நான்டோ பிரமிப்பூட்டும் ஒரு வரலாறு.
- ஜெஸிகா கோக்ஸ்
ஜெஸிகா
கோக்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். இரண்டு கைகளும் இல்லை.
ஆனால் மனதில் ஏகப்பட்ட இலட்சியங்கள். அவற்றில் ஒன்று விமானம் ஓட்ட வேண்டும்
என்பது. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா என்று கேட்பார்கள். ஆசைப்படலாமே,
அதில் என்ன தப்பு ? என கேள்வி கேட்டு சாதித்தி நிற்கிறார் ஜெஸிகா கோக்ஸ்.
கைகள்
இல்லாத முதல் பைலட் எனும் பெருமை இவருக்கு உண்டு. எது இல்லாவிட்டாலும்
சாதிக்கலாம், சாதிக்க வேண்டும் எனும் மனம் இருந்தால் போதும்.
பில்
கேட்ஸ்
பில்கேட்ஸ்
என்றதும் கோடீஸ்வர பிம்பம் தான் நமது மனதில் எழும். அவருடைய இன்றைய நிலை அப்படி.
ஆனால் அவர் ஒரு சாதாரண தொழியாளியாய் வாழ்க்கையைத் தொடங்கியவர். வாழ்க்கையின் சவால்களைத்
தாண்டி தான் இன்று சர்வதேச பிஸினஸ் ஜாம்பவானாக உருவெடுத்திருக்கிறார்.
பில்கேட்சின் வாழ்க்கை சாதிக்க நினைக்கும் மனிதர்களின் தன்னம்பிக்கை அகராதி.
அபரிமிதமான
பணத்தின் ஒரு பகுதியை பிறருக்காய் செலவழிக்கும் இவருடைய பண்பு மதிக்கத்தக்கது.
கலவைகளாலான அவருடைய வாழ்க்கை இளைஞர்களுக்கான பாடம். இவரைப் போலவே
ஸ்டீவ் ஜாப்ஸ், லக்ஷ்மி மிட்டல், வாலே டின்னுபு, வாரன் பப்ஃபெட் போன்ற பல்வேறு
தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறுகள் தன்னம்பிக்கையை வலுவாக்கும் பாடங்கள்.
5
அன்னை
தெரேசா
தன்னம்பிக்கை
மனிதர்களின் பட்டியலின் அன்னை தெரசாவின் பெயரா என ஆச்சரியப்படலாம். ஆனால் தேசம்
விட்டு தேசம் வந்து, பல்வேறு இன்னல்களைத் தாங்கி, ஆயிரக்கணக்கான எதிர்ப்புகளைத்
தாண்டி, ஏழைகளின் பணியாளனாய் நின்ற அவருடைய வாழ்க்கை பிரமிப்பூட்டுகிறது. இறை மீது
வைத்த நம்பிக்கையும், அந்த நம்பிக்கையை மனதில் ஏற்று தன்னம்பிக்கை வாதியாக
பரிமளித்த அவரது வாழ்க்கையும் சிலிர்ப்பூட்டுகிறது.
பிற
மதங்களல்ல, கிறிஸ்தவமே அவருடைய பணிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கவில்லை.
அனைத்தையும் அன்பினால் கடந்தார் அன்னை. தனது முடிவில் ஆழமாய் வேரூன்றி பணி
செய்வதன் மாபெரும் முன்னுதாரணமாய்த் திகழ்கிறார் புனித தெரேசா.
6
ஆரோன் ரால்ஸ்டன்
மலையேறுவதில்
பிரியம் கொண்ட ஆரோன் அமெரிக்காவிலுள்ள உத்தா மலைப்பகுதியில் மலையேறினார்.
எதிர்பாராத விதமாக வழுக்கி விழ பாறையிடுக்கில் அவரது கை சிக்கிக் கொண்டது. அந்தக்
காலநிலையில் யாரும் மலையேற வருவதும் இல்லை. உதவிக்கு மக்களை அழைத்துப் பார்த்தார்.
யாரும் இல்லை. ஒரு மணி நேரம், இருமணி நேரம் என ஓடிய மணித்துளிகள் ஒரு நாள், இரண்டு
நாள் என நீளத் தொடங்கியது. யாரும் வரவில்லை.
ஐந்து
நாட்கள் உதவிக்கு முயன்ற அவர் முன்னால் கடைசியில் இரண்டு வழிகள் தான் இருந்தன.
ஒன்று, உயிரை விடுவது. இரண்டு, பாறையில் மாட்டிக் கொண்ட கையை வெட்டி எறிவது. மனதை
இரும்பாக்கிக் கொண்டு முடிவெடுத்தார். கையில் இருந்ததோ மழுங்கிப் போன ஒரு கத்தி.
அதை வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்க் கையை வெட்டினார். வலி உயிர் போனது. கை
கொஞ்சம் கொஞ்சமாய் துண்டாகி விழ, உயிர் தப்பினார். இன்று அவரது வாழ்க்கை
தன்னம்பிக்கை தேடும் மனிதர்களுக்கான பாரம். மிரட்டும் தன்னம்பிக்கையும், மன
உறுதியும் இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.
- பீத்தோவான்
பீத்தோவான்
என்றாலே இசை மனதுக்குள் எழும். சர்வதேச இசை வரலாற்றில் முடிசூடா மன்னனாய்
இருப்பவர் அவர். அந்த இருக்கையும், அவரது வாழ்க்கையும் அவருக்கு இயல்பாய்
அமையவில்லை. பல்வேறு தோல்விகளின் முடிவில் தான் அவரது வெற்றி இருந்தது.
காதலித்துப்
பார்த்தார், அதில் தோல்வி, மனதை உற்சாகப்படுத்த நினைத்தால் அதிலும் தோல்வி,
வாழ்வின் முக்கியமான கட்டத்தில் தனது கேட்கும் திறனையும் இழந்து விட்டார்.
‘செவியில்லை இங்கொரு இசை எதற்கு ?” என அவர் பாடவில்லை. செவியில்லா நிலையிலும்,
சிம்பொனிகளை அமைத்து உலகைப் பிரமிக்க வைத்தார். ஒன்றில் இரு ஒன்றித்திரு எனும்
பாடம் அவருடைய வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கிறது.
- ஆபிரகாம் லிங்கன்
உலகத்
தலைவர்களைப் பற்றிப் பேசும் போது ஆபிரகாம் லிங்கனைப் பற்றி நாம் படிக்காமல்
இருப்பதில்லை. அமெரிக்க அதிபராய் இருந்தவர். கருப்பின அடிமைத்தளையை அகற்ற
பாடுபட்டவர். மிகச்சிறந்த பேச்சாளர், அற்புதமான நிர்வாகி என இவருக்கு பல பருமைகள்.
ஆனால் இவருடைய வாழ்க்கை துவக்கம் முதல் இனிமையாக இருக்கவில்லை.
செருப்பு
தைக்கும் தொழிலாளியின் மகனாய்ப் பிறந்தார். படிப்பில் ரொம்ப சுமாரான பையன் தான்.
வீட்டில் வசதிகளும் இல்லை. ஆனாலும் அவருக்குள் ஒரு கனல் இருந்தது. வெள்ளை மாளிகையில்
அமரவேண்டும் எனும் தாகம் இருந்தது. அதை நோக்கிய பயணம் அவரை வெற்றியாளராய்
உயர்த்தியது. ஆபிரகாம் லிங்கனைப் போன்ற பல்வேறு தலைவர்கள் தன்னம்பிக்கை மனிதர்களாக
நிலைக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் வலுவூட்டும் வழிகாட்டிகள்.
- பென் அன்டர்வுட்
இரண்டு
வயதில் கேன்சர் நோய் வந்தது, மூன்றாவது வயதில் கண்களை இழந்தான். உலகம் சிறு
வயதிலேயே அவனுக்கு இருண்டு போனது. ஐந்தாவது வயதில் குரலை வைத்து பொருட்களை
அடையாளம் காணும் கலையை கற்றுக் கொண்டான். அதை எதிரொலி நுட்பம் என்பார்கள். குரல்
எழுப்பி, அந்த குரல் பொருளில் பட்டு எதிரொலித்து வருவதைக் கொண்டு பொருட்கள்
இருப்பதையும் அவற்றின் அசைவையும் கண்டுபிடிப்பது தான் இந்த நுட்பம்.
இந்த
நுட்பத்தை வைத்துக் கொண்டு அவன் பிரமிப்பூட்டும் செயல்கள் செய்தான். நடந்தான்,
ஓடினான், ஸ்கேட்டிங் செய்தான், சைக்கிள் ஓட்டினான், நீச்சலடித்தான் ! சாலை கடக்கவே
தடுமாறும் நிலையிலிருந்து, கண்கள் இருப்பவர்களைப் போலவே நடமாடத் தொடங்கினான் இவன்.
19 ஆவது வயதில் உலகிலேயே இந்தக் கலையில் இவன் தான் சூப்பர் எனும் நிலையை
அடைந்தான். இவருடைய வாழ்க்கை எந்த சூழலையும் வெற்றிகரமாய் மாற்ற முடியும் என்பதன்
உதாரணம்.
- ஜே.கே.ரௌலிங்
ஜே.கே
ரௌலிங் பெயரைக் கேட்டதும் ஹாரிபாட்டர் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.
அவருடைய நாவலுக்காக பல இலட்சம் முன்பதிவுகள் நடப்பதும், நாவல் வெளியாகும் நாளில்
அதிகாலையிலேயே கடைகளில் கிலோமீட்டர் கணக்கில் வரிசை நீள்வதும் பிரமிப்பாய்ப்
பேசப்பட்ட விஷயங்கள். அந்த நாவல்களெல்லாம் பின்னர் சினிமாவாக மாறி பில்லியன்களை
அள்ளியது. இவர் உட்கார்ந்து கதையெழுதிய ஹோட்டல் அறை அருங்காட்சியகமாய்
மாற்றியமைக்கப்பட்டது. உலகெங்கும் இவருக்கு கோடிக்கணக்கான தீவிர ரசிகர்கள் உண்டு.
ஆனால்,
அவருடைய ஆரம்பகால வாழ்க்கை இனிமையாய் இருக்கவில்லை. மனதில் எழுகின்ற சிந்தனைகளை
எழுதி வைக்க அவரிடம் பேப்பர் கூட சில நேரம் இருக்காது. பஸ் டிக்கெட்டின்
பின்பக்கமெல்லாம் குறிப்புகளை எழுதி வைப்பார். குளிர்காலத்தில் உட்கார்ந்து எழுத
இடம் தேடி காபி கடைகளில் செல்வார். ஒரு காபி வாங்கி வைத்துக் கொண்டு நாள் முழுவதும்
உட்கார்ந்து எழுதுவார். நாவல் எழுதி முடித்ததும் பிரசுரமானதா என்றால், அதுவும் இல்லை.
தனது முதல் நாவலை வெளியிட ஐந்து ஆண்டுகள் படாத பாடு பட்டிருக்கிறார்.
அத்தனை
சோதனைகளையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டதால் தான் இன்று அவர் அழியாப் புகழ்
பெற்றிருக்கிறார். இவருடைய தன்னம்பிக்கைப் பயணம் சிலிர்ப்பூட்டுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக