இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
வங்கி ஏடிஎம்களில் பணம் நிறப்பும் ஊழியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக
பணத்தை அபேஸ் செய்துள்ளனர். இதுவரை ஊழியர்கள் இருவரும் ரூ.13 லட்ச ரூபாய்
திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கியி அதிகாரிகள்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரூ.13லட்சம் ஏடிஎம்களில் திருடி ஆன்லைனில் ரம்மி
விளையாடிய ஊழியர்கள்.!
மேலும், அந்த பணத்தை பெருக்க நினைத்து ஆன்லைனில் வைத்து ரம்மி
விளையாடி மொத்த பணத்தையும் இழந்தாக அவர்கள் கூயிருப்பது பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
தனியார்
ஏஜென்சி நிறுவனம்:
சேலம் ஐந்து ரோடு பகுதியில், செக்யூர் வேல்யூ ஏஜென்சி என்ற
தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனமானது ஒப்பந்த அடிப்படையில் பாரத ஸ்டேட்
ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வேலையை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தனியார்
நிறுவனத்தில் சேலம் வீராணத்தை சேர்ந்த மணிவேல் மற்றும் ஜாரீர் ரெட்டிப்பட்டியை
சேர்ந்த தியாகராஜனும் வேலை பார்த்து வந்தனர்.
ஏடிஎம்
மையம் ஒதுக்கப்பட்டது:
நெஞ்கிய நண்பர்களான இவர்கள் இருவருக்கும், ஆட்டையாம்பட்டியில்
உள்ள ஏடிஎம் மையம் ஒதுக்கப்பட்டது. அந்த மையத்தில் பணம் வைக்கச் செல்லும்
போதெல்லாம் குறிப்பிட்ட தொகையை இருவரும் திருடி வந்ததாகக் கூறப்படுகிறது.
வேலை
பறிக்கப்பட்டது:
இதேபோல் தொடர்ந்து செய்து கொண்டிருக்கயைல் தான் நடத்தை
சரியில்லை என்று கூறி தியாகராஜனின் வேலை பறிக்கப்பட்டது. இருப்பினும் மணிவேல்
தொடர்ந்து பணியில் இருந்தால், சிக்கல் இல்லாமல் அவர்கள் தங்களது பணியை
தொடர்ந்தனர்.
ரூ.13 லட்சம் கணக்கு குறைந்தது:
இந்நிலையில் கடந்த மார்ச் மாத கணக்கு தணிக்கையின் போது,
ஆட்டையாம்பட்டி ஏடிஎம்மில் கடந்த ஓராண்டில் ரூ.13 லட்ச ரூபாய் குறைந்து இருப்பதை
வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இரண்டு
பேர் கைது:
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது, தீவிர
விசாரணையில், மணிவேல் மீது சந்தேகம் எழுந்தது. அவனை பிடித்து போலீசார்
விசாரித்தனர்.
அப்போது, விசாரணையில், பணத்தை திருடியதை மணிவேல் ஒப்புக்
கொண்டார். பிறகு, தியாகராஜன் கைது செய்யப்பட்டார். பணம் தொடர்பாக விசாரித்த போது,
திடுக்கிடும் தகவல் வெளியானது.
ஆன்லைன்
ரம்மி விளையாட்டு :
சிறுக சிறுக திருடிய பணத்தை இவரும், பணத்தை பெருக்க நினைத்து
ஆன்லைன் ரம்மி விளையாடியதாகவும், அதில் பணம் முழுவதையும் இழந்து விட்டதாகவும்
கூறியதை போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரையும் போலீசார் கைது செய்து
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் குறித்து மேலும், மோசடி
ஈடுபட்டுள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக