Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஜூன், 2019

ஆன்லைன் பணப்பரிமாற்றத்துக்கு சேவைக் கட்டணம் ரத்தாகிறது: ரிசர்வ் வங்கி அதிரடி.!


 2 மாதத்தில் நடைமுறைக்கு வரும்:


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com

வங்கியில் அனைத்து பணப்பரிமாற்ற வேலைகளையும் செய்து வந்தோம். நிறுவனம் மற்றும் சொந்த பயன்பாடு காரணமாக வங்கியில் பணப்பரிமாற்ற சேவைகளை பயன்படுத்தி வந்தோம். தற்போது, வங்கி அலுவலக நேரங்கள் பணப்பரிமாற்றத்திற்கு சரியான நேரமாக அமையவில்லை.

ஆன்லைன் பணப்பரிமாற்றத்துக்கு சேவைக் கட்டணம் ரத்தாகிறது-ரிசர்வ் வங்கி!
இதனால் வங்கியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆன்லைன் பணப்பரிமாற்ற வசதிகளை பயன்படுத்த வந்தோம். ஆனால் தற்போது, அதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது

 இந்நிலையில், ஆன்னலையில் செய்யுப்படும் பணப்பரிவர்த்தணை சேவை கட்டணங்களை ரத்து செய்யப்படுதவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி செயல்:
 ரிசர்வ் வங்கி செயல்: இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது.

ஆன்லைன் பணப்பரிமாற்றம்:
இணைய வழிப் பணப்பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை நீக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 2 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பணத்தை வங்கி அலுவல் நேரங்களில் இணையதளம் மூலம் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றுவதற்கு RTGS முறை பயன்படுத்தப்படுகிறது.

 ரிசர்ங் வங்கி அறிவுறுத்தல்:
 ரிசர்ங் வங்கி அறிவுறுத்தல்: முன்னதாக வங்கி வேலை நாடகளில் மாலை 4.30 மணி வரை ஆர்டிஜிஎஸ் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாலை ஆறு மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், RTGS, NEFT ஆகிய இணையவழி பணப்பரிமாற்ற சேவைக் கட்டணங்களை நீக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ஏடிஎம் கட்டணம் வரைமுறைப்படுத்தல்:
இதன் பலனை வங்கிகள் கடைநிலை நுகர்வோருக்கு சேர்க்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

 இதனிடையே, ஏடிஎம் கட்டணத்தையும் வரைமுறைப்படுத்தவுள்ள ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் சங்கத்தில் உள்ள வங்கிகளின் தலைமைச் செயலதிகாரிகளைக் கொண்டு குழு அமைக்க முடிவெடுத்துள்ளது.

 2 மாதத்தில் நடைமுறைக்கு வரும்:
அடுத்த இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இக்குழு அளிக்கும் அறிக்கையைப் பொறுத்து ஏ.டி.எம் கட்டணங்களையும் ரிசர்வ் வங்கி வரைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக