Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 14 ஜூன், 2019

ஒரே நாள், ஒரே பகுதி: போலீஸிடம் சிக்கிய 90ஆயிரம் பேர்... அதிர்ச்சி தகவல்...!

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!  

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com



ஒரே நாளில், சென்னையின் ஒரே பகுதியில் மட்டும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்மீது போக்குவரத்து விதிமுறை மீறியதாக, போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பிற்கும், விசாலமான சாலைகளுக்கும் பெயர்போன பகுதிதான் சென்னை அண்ணாநகர். இந்த பகுதியில் ஒரு சிறிய வீடாவது கிடைத்துவிடாத, என பெரும் பணக்காரர்கள்கூட ஏங்கும் வகையில், புகழ்வாய்ந்த பகுதியாக இது இருக்கின்றது. சென்னை போலீஸிடம்

அதற்கேற்ப, வணிக நிறுவனங்கள், நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் என பல அப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னையின் முக்கிய பகுதிகளும் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.

இதுபோன்ற சில காரணங்களால் மக்கள் அதிகம் புழங்கும் பகுதியாக இது உள்ளது. ஆகையால், இந்த பகுதியில் நிகழும் குற்றச் சம்பவங்களையும், போக்குவரத்து விதிமீறல்களையும் தவிர்க்கும் விதமாக, சென்னை நகர போலீஸார் அப்பகுதி முழுவதிலும் ஆங்காங்கே சிசிடிவி கேமிராக்களைப் பொருத்தியுள்ளனர்.

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

அந்த வகையில், அண்ணா நகரின் திருமங்களம், சாந்தி காலனி, ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 64 கேமிராக்களைப் பொருத்தியுள்ளனர். இவையனைத்தும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்தந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன.

 சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!
இவையனைத்தும், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின்மூலம் ரூ. 3.5 கோடி செலவில் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. சென்னையின் முதல் போக்குவரத்து ஒழுங்குமுறை கொண்ட மண்டலமாக, அப்பகுதியை மாற்றும்நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக, நவீன தொழிற்நுட்பங்களையும் ஹூண்டாய் நிறுவனம், அண்ணா நகர் போக்குவரத்து போலீஸுக்கு வழங்கியுள்ளது. அந்தவகையில், வாகனங்களின் நம்பர் பிளேட்டை தானாக அடையாளம் காணல் மற்றும் சிக்னலை மீறும் வாகனங்களை தானாக கண்டறிதல் உள்ளிட்ட ஆட்டோ இன்டலிஜென்ஸ் திறன் கொண்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!
இவையனைத்தும் பொருத்தப்பட்டு, சில நாட்களே ஆன நிலையில், அவை தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும், இதன் கன்ட்ரோல்கள் அண்ணாநகர் ரவுண்டனா அருகில் உள்ள போக்குவரத்து கண்கானிப்பு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரத்தின் ஒரே நாளில் மட்டும், அதாவது, வெறும் 24 மணி நேரத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறி, சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளின் மீது, அண்ணாநகர் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்யதுள்ளனர்.

அதில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியது, அதி வேகம், சிக்னலை மீறியது, வெள்ளை கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்தியது, தவறான பாதையில் சென்றது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும், சென்னையின் ஓர் சிறு பகுதியான அண்ணா நகரில் மட்டும் ஒரே நாளில் அரங்கேறியவையாகும்.

போக்குவரத்து போலீஸாரின் இந்த புதிய சிஸ்டம், தேசிய தகவல் மையத்துடன் இணைந்து செயல்படுவதால், விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு -செல்லாண் அவரவர்களின் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதில், முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் 24 மணி நேரங்களில் அபராதத் தொகையைச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 மேலும், இதில் மிகப்பெரிய குற்றங்களாக கருதப்படுபவர்கள், நீதிமன்றத்திற்கு சென்று, குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றை மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், சில செயல்பாட்டில் உள்ளன. பல கேமிராக்கள் பெயருக்காக பொருத்தப்பட்டதைப் போன்று வேலை செய்யாமல் இருக்கின்றன.

 ஆகையால், இவையனைத்தையும் ஒழுங்குபடுத்தி, அண்ணாநகர் பகுதியில் மேற்கொண்டதைப் போன்று கடும் நடவடிக்கை மேற்கொண்டால் பல லட்சம் விதிமீறல் வாகன ஓட்டிகள் சிக்குவதுடன், போக்குவரத்து விதிமீறல்களை தவிர்க்க வழிவகை செய்யும் என தெரிகிறது. ஆகையால், இதுபோன்ற கடும் நடவடிக்கை சென்னை முழுவதும் கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக