இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன்
5) கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்த தினத்தில் சுற்றுச்சூழல் குறித்து
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் சூழலியல்
தொடர்பான கருப்பொருள்
அறிவிக்கப்படும். அந்த ஆண்டு
முழுவதும், அதுகுறித்த விழிப்புணர்வுகள், செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். அந்த
வகையில், இந்த ஆண்டு காற்று மாசுபாட்டிலிருந்து இந்த உலகத்தைக் காப்பாற்ற
வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
காற்று மாசுபாடு குறித்து
உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது, `என்விரான்மென்டல் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி’ (Environmental
Science and Technology) எனும் பத்திரிகை நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வின் முடிவு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ஆண்கள், தங்களது
சிந்தடிக் ஆடைகள், கான்டாக்ட் லென்ஸ்கள், கார் டயர்கள் போன்றவற்றிலிருந்து மட்டும்
ஒரு வருடத்தில் சுமார் 52 ஆயிரம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார்கள்
என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுமட்டுமன்றி,
சுவாசத்தின்மூலம் ஒருநாளைக்கு ஏறத்தாழ 320 துகள்களை ஒருவர் சுவாசிப்பதும்
தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைப்பது மட்டுமே
இத்தகைய ஆபத்துகளிலிருந்து தப்பிக்க ஒரே வழி எனவும் அறிவுறுத்துகிறார்கள்
ஆய்வாளர்கள். இந்த ஆய்வின் அடுத்தகட்டமாக, எவ்வளவு மைக்ரோ துகள்கள் நுரையீரலைச்
சென்றடைகிறது, வயிற்றுப் பகுதியில் அவை ஏற்படுத்தும் பாதிப்பின் வீரியம் என்ன,
அதனால் ஏற்படும் தீமைகள் என்ன, என்பது கண்டறியப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக