Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 17 ஜூன், 2019

நல்ல வீட்டு சாப்பாடு சமைச்சா இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு.! புதிய ஸ்விகி டெய்லி அறிமுகம்.!


 ஸ்விகி டெய்லி அறிமுகம்  


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com



வீட்டு சாப்பாடு இல்லாமல் வெளி ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு, குறைந்த செலவில் ருசியான வீட்டு சாப்பாட்டை வழங்க ஸ்விகி நிறுவனம் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்விகி டெய்லி:வீட்டு சாப்பாடு சமைச்சா இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு! வீட்டுச் சாப்பாட்டின் ருசியைச் சுவைப்பதற்காக ஒரு புதிய முயற்சியாய் "ஸ்விகி டெய்லி" என்ற புதிய செயலி ஒன்றை ஸ்விகி நிறுவனம் நேற்று மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துள்ளது.
 குறைந்த விலையில் ருசியான சாப்பாடு எவ்வளவு தெரியுமா?
ஸ்விகி டெய்லி அறிமுகம்
வீட்டுச் சாப்பாட்டை மிஸ் செய்பவர்களுக்கும், வீட்டுச் சாப்பாட்டின் ருசியை ட்ரை செய்ய நினைப்பவர்களுக்கும், இந்த ஸ்விகி டெய்லி ஆப் உதவும் என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்விகியின் இந்த புதிய சேவையை அந்நிறுவனம் ஹரியானாவில் உள்ள குருகிராம் நகரில் மட்டும் தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய முயற்சிக்கான காரணம் இதுதான்
இதனைத் தொடர்ந்து, இந்த மாதத்தின் இறுதிக்குள் பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டுச் சாப்பாட்டை ருசிக்க, ஸ்விகி பயனர்கள் ஆர்வம் காட்டுவதாகக் கிடைத்த தகவல் படி, ஸ்விகி நிறுவனம் இம்முயற்சியைக் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு
குறைந்த விலையில் ருசியான சாப்பாடு எவ்வளவு தெரியுமா?
இந்த ஸ்விகி டெய்லி சேவையின் மூலம் பயனர்களுக்கு மிகக் குறைந்த விலையில் அருமையான வீட்டு உணவை வழங்க முடியுமென்று ஸ்விகி தெரிவித்துள்ளது. ஒரு வேலை சாப்பாட்டிற்கான துவக்க விலையே வெறும் ரூ.50 என்பது தான் கூடுதல் சிறப்பு.

ஸ்விகி டெய்லி சேவையின் மூலம் தரமான உணவுகளை வெறும் ரூ.50 முதல் ரூ.100க்குள் பயனர்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருகிறது.

இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு
அதேபோல் ஸ்விகி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்விகி டெய்லி சேவையின் மூலம் பல சிறு வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென்றும் ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. உங்களுக்கு பிடித்தமான வீட்டுச் சாப்பாட்டு மெனுவை பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்துகொள்ளலாம்.
 மாதாந்திர சேவையும் உண்டு
மாதாந்திர சேவையும் உண்டு
 ஸ்விகி டெய்லி சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் "ஒரு வேலை" உணவிற்காக அல்லது "மூன்று வேலை" உணவிற்காக என அவர்களின் தேவைக்கு ஏற்றாற்போல் ஆர்டர் செய்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி உங்களுக்குப் பிடித்த உணவு தயாரிப்பாளரிடம் மாதாந்திர சேவைக்கும் ஸ்விகி டெய்லி ஆப் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக