இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
பிறப்பு என்று ஒன்று இருக்கும் வரை
இறப்பு என்று ஒன்று இருக்கத்தான் செய்யும். இறப்பு சந்தோஷம் தரும் நிகழ்வு அல்ல.
எனினும் இறப்பை யாரும் வெல்ல முடியாது.
இறப்பால் கவலையில் வாடும் மனங்களை
தேற்றுவதற்கும், இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைவதற்கும் செய்யும் நோக்கில் நம்
முன்னவர்கள் சில கடை பிடி முறைகளை சொல்லி வைத்து உள்ளார்கள். அவற்றை இளம் தலை
முறையினர் அறிந்து இருப்பது மிக மிக அவசியம்.
உடல்
- சூல உடல்
- சூக்கும உடல்
- காரண உடல்
என்று மூன்று வகையாக செயல் படுவது. இதில்
சூல உடல்
சூல உடல் எனும் கண்ணுக்கு தெரியும்
உடல் அழியும் தன்மையது.
சூக்கும உடல்
சூக்கும உடல், கண்ணுக்கு தெரியாத நிழல் உடம்பு. இறப்பில்,
உயிருடன் இருந்த போது கொண்டிருந்த உணவு, உடை போன்ற வேட்கைகள் அனைத்தும் சுமந்து
கொண்டு சூல உடலை விட்டு வெளி ஏறுகிறது. பேய் உடம்பு என்பதும், ஆவி என்பதும் அதுவே.
காரண
உடல்
இறந்த பின், இறந்தவரின் சூக்கும உடல்
ஆவி உருவில் சூல உடலை சுற்றி சுற்றி வருகிறது. இடுகாட்டுக்கு செல்லும்போது அதுவும்
சூல உடலை பின் தொடர்கிறது. சூல உடல் வெந்து சாம்பல் ஆவதை கண்டு பதை பதைக்கிறது.
பின்னர் நெருப்பில் 5 நாட்களும், ஆகாயத்தில் 5 நாட்களும், நீரில் 5 நாட்களும்,
இருக்கிறது. அந்த காலம் முடிந்த பிறகு தீர்ப்பிற்கு அழைத்து செல்லப் படுகிறது.
அகால மரணம் அடைந்தவர்கள் ஆவி, விதி
முடியும் வரை தீர்ப்பிற்கு அழைத்து செல்லப் படுவது இல்லை.
இறந்தவர் உடலை அவரவர் குல
சம்பிரதாயப்படி, எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
உயிர் போன உடலை எரிப்பது என்பதும், புதைப்பது என்பதும், அதனால் ஏற்பட இருக்கும்
தூய்மை கேட்டை தவிர்ப்பதற்காக செய்யப்படும் புண்ணிய செயல் ஆகும் என்பது மட்டும்
அல்ல, அமைதி இன்றி அலைபாயும் சூக்கும உடலை சாந்தப் படுத்துவதற்காகவும் செய்யப்
படுகிறது.
இறந்தவரின் உடல் சுடு காட்டுக்கு
எடுத்து சென்றதும், அந்த உடலை வைத்து இருந்த வீடு நீரால் கழுவி சுத்தம்
செய்யப்படவேண்டும். உடலை தொட்டவர்கள், ஈமசடங்கில் கலந்து கொண்டவர்கள் மற்றும்
துக்கம் அனுசரிக்கும் ஆண், பெண் என்ற இரு பாலாரும், தாங்கள் கட்டி இருந்த உடைகளை துவைத்து,
குளித்த பின்னரே, வீட்டினுள் பிரவேசிக்க வேண்டும். நீர் நிலைகளில் குளிக்க
முடியாதவர்கள், தங்கள் உடலிலும், உடையிலும் சிறிது மஞ்சள் கலந்த நீரை தெளித்து
விட்டு வீட்டினுள் குளிக்கலாம்.
ஆவி உடலுக்கு உணவு, உடை போன்ற
வேட்கைகள் அனைத்தும் உண்டு. எனவே இறந்தவர்களுக்கு சிரார்த்த காரியம் முடியும்
வரையும், தினம் தினம் படையல் செய்து வழிபட வேண்டும்.
சிரார்த்த காரியம், ஆவி உடல் நீரில்
இருக்கும் கால கட்டத்தில் எதாவது ஒரு நாளில் செய்ய வேண்டும். அதாவது 10 ல் இருந்து
15 ம் நாள் வரை. சிலர் 16 ம் நாள் செய்வதும் உண்டு.
சூக்கும உடல் நீரில் இருக்கும்போது
சிரார்த்தம் ஏன் செய்ய வேண்டும்?
காரணம், நாம் உபயோகப்படுத்தும் கை பேசிக்கும்
டவருக்கும் உள்ளதை போன்ற ஒரு தொடர்பு, நீருக்கும் யம லோகத்துக்கும் உள்ளது என்று
கூறப் படுகிறது.
ஈம சடங்குகள் சரிவர செய்யப்படவில்லை
என்றால், சூக்கும உடலானது, இவ்உலகம் விட்டு பர உலகம் போகும் வகை அறியாது, பேயாக
அலையும் என்பதும், அவ்வாறு செய்ய தவறியவர்கள் மற்றும் அவர்தம் சந்ததியினர்க்கு
தோஷங்கள் வந்து சேரும் என்பதும், கருட புராண வாக்கியங்களாக உள்ளன. அதை பிரேத ஜன்ம
தோசம் என்று சொல்கிறார்கள்.
பிரேத ஜன்ம தோசத்தால், தனம், தானியம்,
புத்திர விருத்தி இல்லாமல் போகும். திருமண தடைகள் ஏற்படும். இனம் தெரியாத
காரணங்களால் தொழில் நட்டம் உண்டாகும். குடும்பத்தில் எல்லாம் இருந்தும் சந்தோஷம்
என்பது இல்லாமல் போகும்.
சிரார்த்த காரியம் மற்றும் தர்பணம்
செய்து, பிண்டம் நீரில் கரைத்த உடன் மூதாதையர்கள் இறந்தவர் ஆவியை மேலுலக
தீர்ப்புக்கு அழைத்து செல்வர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக