Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 ஜூன், 2019

வானமாதேவி அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில், கடலூர்

வானமாதேவி அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில், கடலூர் T_500_1612
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com



Description: வானமாதேவி அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில், கடலூர் Empty

மூலவர் : கோலவிழி அம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : வானமாதேவி
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை

தல சிறப்பு:

6 அடி உயரத்திற்கு மேல், சங்கு சக்கராயுதங்களோடு எட்டு திருக்கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாக கோலவிழி அம்மன் அருள்பாலிப்பதும், காளி கோயிலில் பைரவர் சன்னதி அமைந்துள்ளதும் சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில் வானமாதேவி,கடலூர்.

போன்:

+91 94421 75842, 94433 75843

பொது தகவல்:

காளி கோவிலில் பைரவர் சன்னதி தனியாக உள்ளது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்தக் கோயிலின் முன்பு எண்கோண வடிவில் ஒரு கருங்கல் யந்திரமும், வேப்பமரமும் நட்டு அதனடியில் ஒரு சித்தர் தவம் செய்து வந்ததாக இந்த ஊரைச் சார்ந்த பெரியோர்கள் கூறுகின்றனர். அந்த வேப்பமரம் காலங்காலமாக வளர்ந்து, தன் அருகேயிருந்த கருங்கல்லால் ஆன யந்திரத்தை தன் வேரால் முழுவதும் மறைத்து நிற்கின்ற காட்சியை இன்றும் காணலாம்.


பிரார்த்தனை

செய்வினை, கர்ம வினையால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர, குழந்தைச் செல்வம் உண்டாக, தீராத நோய்கள் தீர, நல்ல கல்வியறிவு மற்றும் செல்வம் வளம் கிடைக்க இங்குள்ள கோலவிழி அம்மனை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

அம்மனுக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:


இந்த ஊரிலே, எங்குமே காண முடியாத அளவுக்கு 6 அடி உயரத்திற்கு மேல், சங்கு சக்கராயுதங்களோடு எட்டு திருக்கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாக கோலவிழி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள். திருவக்கரையில் கோயில் கொண்ட வக்ரகாளி அம்மனை விடவும், தில்லையில் கோயில் கொண்டுள்ள தில்லை எல்லை காளியைவிடவும் உயரத்திலும் உருவத்திலும் பெரியவள் இந்த கோலவிழி அம்மன். வானமாதேவி என்கிற இந்த ஊரின் முந்தைய பெயர் திருமலைராயன்பேட்டை என்பதாகும். தமிழகத்திலே சமணர்கள் அதிகமாக வாழ்ந்த காலத்தில், இராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவி அவர்கள் சமணர்களுக்கு தானமாக (இறையீலி நிலமாக) இந்த ஊருக்கு அருகில் இருந்த நிலப் பகுதியைக் கொடுத்ததால், அந்தப் பகுதியின் பெயர் அவர்களின் பெயராலேயே வானவன்மாதேவி என்று அழைக்கப்பட்டு, இன்று வானமாதேவியாக மருவி நிற்கிறது. சமணர்கள் இந்த ஊரில் வாழ்ந்ததற்குச் சான்றாக, தியான நிலையில் அமர்ந்த ஒரு பெரிய மகாவீரருடைய அழகுவாய்ந்த கற்சிலை 1998 ஆம் ஆண்டு வரை இங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்தப் பகுதியை ஆண்ட சந்திரசேகர நயினார் என்ற ஒரு சமணர், பல சமூகங்களையும், சைவ சமயத்தையும் சார்ந்த பொது மக்களை எல்லாம், இந்த ஊரில் உள்ள விளை நிலங்களில் எல்லாம் ஓர் இரவுக்குள் நடவு நட்டு மறுநாள் பொழுதுக்குள் அறுவடை செய்து தானியங்களைக் கொடுக்கா விட்டால், அனைவரும் சமண சமயத்தைத் தழுவ வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை எப்படி நிறைவேற்றுவது என்று திகைத்த பொது மக்கள் அனைவரும் கோலவிழி அம்மனிடம் சென்று மனமுருகி தங்களைக் காப்பாற்ற வேண்டுமென வேண்டினர். அவர்களின் வேண்டுதலை செவிமடுத்த கோலவிழி அம்மன், செல்லியம்மன் மற்றும் பூஞ்சோலையம்மன் என்ற இரு தேவதைகளைப் பார்த்துக் கட்டளையிட்டதன்பேரில், மேற்படி இரு தேவதைகளும் ஓர் இரவுக்குள் அத்துணை விளைநிலங்களிலும் நடவு நட்டு கோலவிழி அம்மன் அருளால் மறுநாள் பொழுதுக்குள் விளைவித்து அறுவடை செய்து கொடுத்தனர். இதைக் கேள்வியுற்ற சந்திரசேகர நயினார், கோலவிழி அம்மனின் சக்தியை முழுதாகப் புரிந்துகொண்டு, மனந்திருந்தி, பொதுமக்கள் அனைவரையும் அவரவர்கள் சமயத்திலே இருக்க அனுமதித்து, கோலவிழி அம்மனை வணங்கி நின்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இதற்குச் சான்றாக இப்பொழுதும் இந்தத் திருக்கோவிலையட்டி சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அந்த நிலப்பரப்பின் முடிவில் அமைந்துள்ள அடுத்த கிராமமான திருமாணிக்குழியில் செல்லியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் நடைபெறும் தெருக்கூத்துகளிலும் இந்த வரலாறு செல்லியம்மன் நாடகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஊரைச் சார்ந்த சமணர்கள் புலம்பெயர்ந்து விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்தக் காளி குலதெய்வமாக விளங்குகிறாள்.


அண்மைக் காலத்தில் 140 ஆண்டுகாலம் வாழ்ந்து மறைந்த சித்தர் ஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள் இந்தக் காளியின் பெருமையை பலமுறை சொன்னதோடு மட்டுமல்லாமல், இந்தக் கோயிலிலேயே 30 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஆண்டுகள் தங்கி தவமிருந்தார். தனக்குப் பெரும் சக்தியை இந்தக் காளி அருளியதாக இந்த ஊரில் வாழ்ந்த வேங்கடசாமி என்ற நிலகிழாரிடம் அவர் கூறியிருக்கிறார். அதன் பிறகு அவர் கடலூர், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் வசித்து சேலத்திலே சித்தியானார். அவருக்கும்முன்னே இந்தக் கோயிலின் முன்பு எண்கோண வடிவில் ஒரு கருங்கல் யந்திரமும், வேப்பமரமும் நட்டு அதனடியில் ஒரு சித்தர் தவம் செய்து வந்ததாக இந்த ஊரைச் சார்ந்த பெரியோர்கள் கூறுகின்றனர். அந்த வேப்பமரம் காலங்காலமாக வளர்ந்து, தன் அருகேயிருந்த கருங்கல்லால் ஆன யந்திரத்தை தன் வேரால் முழுவதும் மறைத்து நிற்கின்ற காட்சியை இன்றும் அந்த ஊரிலே காணலாம்.




தல வரலாறு:

வானமாதேவி என்ற இத்திருத்தலம் சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளால் கூற்றாயினவாறு என்ற பதிகம் பாடி இறையருளால் சூலைநோய் தவிர்த்து சமணத்திலிருந்து சைவ சமயத்தைத் தழுவிய வரலாறு நடைபெற்ற திருவதிகை வீரட்டத்திற்குக் கிழக்கேயும், திருமங்கையாழ்வாரால் மங்களாஸாசனம் செய்யப் பெற்றதும் வேதாந்த தேசிகரால் பாடப்பெற்றதுமான 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவந்திபுரத்திற்கும், திருஞானசம்பந்தராலும், அருணகிரிநாதராலும் பாடப்பெற்ற திருமாணிகுழி சிவதலத்திற்கு மேற்கேயும் அவுஷதகிரி தொடர்ச்சிக்கு வடக்கேயும் கங்கையில் சிறந்த கெடில நதியின் (கருடநதி) தெற்கேயும் மற்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழநாட்டின் பொற்காலம் எனப்போற்றுமாறு ஆட்சி செய்தவனும் திருமுறை கண்ட சோழனும், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவனுமாகிய இராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவியின் (வானமாதேவி) பெயரால் அமைந்த திருத்தலமாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: எங்குமே காண முடியாத அளவுக்கு 6 அடி உயரத்திற்கு மேல், சங்கு சக்கராயுதங்களோடு எட்டு திருக்கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாக கோலவிழி அம்மன் அருள்பாலிப்பதும், பைரவர் சன்னதி அமைந்துள்ளதும் சிறப்பு.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...





 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக