Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 ஜூன், 2019

ஆங்கில பாடப் பயிற்சி - 4


Image result for (Simple Present Tense) 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com



நாம் Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3 என மூன்று பாடங்களிலும் ஒரு வார்த்தையை எப்படி 73 விதமாக மாற்றி பயிற்சி செய்யலாம் என்பதனைப் பார்த்தோம். அந்த 73 வார்த்தைகளில் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன்.

அதன்படி Grammar Patterns 1 றின் முதலாவது வாக்கியமான "I do a job" எனும் வாக்கியத்தை விரிவாகவும், அதன் இலக்கண விதிமுறைகளையும் இன்று பார்க்கப் போகின்றோம்.

1. I do a job
நான் செய்கிறேன் ஒரு வேலை.

இந்த "I do a job" எனும் வாக்கியம் ஒரு சாதாரண நிகழ்கால வாக்கியமாகும். இதை ஆங்கிலத்தில் Simple Present Tense அல்லது Present Simple Tense என்று அழைப்பர்.

இந்த "Simple Present Tense"" சாதாரண நிகழ்காலச் சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதை முதலில் பார்ப்போம்.

Subject + Auxiliary verb + Main verb +
1. I/ You/ We/ They + __ + do a job.
2. He/ She/ It + __ + does a job.

இவ்வாக்கிய அமைப்புகளில் "Auxiliary verb" "அதாவது துணைவினை பயன்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Auxiliary verb + Subject + Main verb +
1. Do + I/ you/ we/ they + do a job?
2. Does + he/ she/ it + do a job.

இவற்றில் "Auxiliary verb" பயன்படும். அதாவது சாதாரண நிகழ்காலக் கேள்வி வாக்கியங்களின் போது Do/ Does போன்ற துணைவினைகள் முன்பாகவும் "Subject" அதன் பின்னாலும் பயன்படும். இதனை சற்று விளங்கிக்கொண்டோமானால் எந்த ஒரு வாக்கியத்தையும் மிக இலகுவாக கேள்வி பதிலாக மாற்றி அமைத்துவிடலாம்.

இப்பாடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து கற்போம்.


பகுதி 1

Do you do a job?
நீ செய்கிறாயா ஒரு வேலை?
Yes, I do a job
ஆம், நான் செய்கிறேன் ஒரு வேலை.
No, I don’t do a job. (do + not)
இல்லை, நான் செய்கிறேனில்லை ஒரு வேலை.

Do you speak in English?
நீ பேசுகிறாயா அங்கிலத்தில்?
Yes, I speak in English.
ஆம், நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில்
No, I don’t speak in English. (do + not)
இல்லை, நான் பேசுகிறேனில்லை ஆங்கிலத்தில்.

Do you go to school?
நீ போகிறாயா பாடசாலைக்கு?
Yes, I go to school.
ஆம், நான் போகிறேன் பாடசாலைக்கு.
No, I don’t go to school. (do + not)
இல்லை, நான் போகிறேனில்லை பாடசாலைக்கு.

Do you love me?
நீ காதலிக்கிறாயா என்னை?
Yes, I love you.
ஆம், நான் காதலிக்கிறேன் உன்னை.
No, I don’t
 love you. (do + not)
இல்லை, நான் காதலிக்கவில்லை உன்னை.

மேலே I (நான்) என்று பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களிற்கு "You, We, They - நீ/ நீங்கள்/ நாங்கள்/ நாம்/ அவர்கள்/அவைகள்" என மாற்றி எழுதி பயிற்சி செய்துப் பாருங்கள்.

கீழே 50 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றையும் பயிற்சி செய்யுங்கள். அதன் பின்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களை பின்பற்றி கேள்வி பதில் வாக்கியங்களாக நீங்களாகவே அமைத்து பயிற்சி செய்யுங்கள்.

1. I get up early every day.
நான் எழுகிறேன் அதிகாலையில் ஒவ்வொரு நாளும்.

2. I brush my teeth twice a day.
நான் துலக்குகிறேன் என் பற்களை ஒரு நாளைக்கு இரண்டு தடவை.

3. I have a bath.
நான் குளிக்கிறேன்.

4. I have breakfast.
நான் உண்கிறேன் காலை உணவு.

5. I travel by bus.
நான் பயணம் செய்கிறேன் பேருந்தில்.

6. I go to school.
நான் போகிறேன் பாடசாலைக்கு.

7. I go to Kowloon Park every Sunday.
நான் போகிறேன் கவுலூன் பூங்காவிற்கு ஒவ்வொரு ஞாயிறும்.

8. I read a book.
நான் வாசிக்கிறேன் ஒரு புத்தகம்.

9. I write an article.
நான் எழுதுகிறேன் ஒரு கட்டுரை.

10. I like chocolate ice-cream.
நான் விரும்புகிறேன் கொக்கோப்பழக் குளிர்களி.

11. I pay the loan.
நான் செலுத்துகிறேன் கடன்.

12. I borrow some books from my friend.
நான் இரவல் வாங்குகிறேன் சில புத்தகங்கள் எனது நண்பனிடமிருந்து.

13. I leave from class.
நான் வெளியேறுகிறேன் வகுப்பிலிருந்து.

14. I try to go.
நான் முயற்சி செய்கிறேன் போவதற்கு.

15. I have a rest.
நான் எடுக்கிறேன் ஓய்வு.

16. I answer the phone.
நான் பதிலளிக்கிறேன் தொலைப்பேசிக்கு.

17. I watch a movie.
நான் பார்க்கிறேன் ஒரு திரைப்படம்.

18. I worry about that.
நான் கவலைப்படுகிறேன் அதைப் பற்றி.

19. I drive a car.
நான் ஓட்டுகிறேன் ஒரு மகிழுந்து.

20. I read the news paper.
நான் வாசிக்கிறேன் செய்தித் தாள்.

21. I play football.
நான் விளையாடுகிறேன் உதைப்பந்தாட்டம்.

22. I boil water.
நான் கொதிக்கவைக்கிறேன் தண்ணீர்.

23. I have some tea.
நான் அருந்துகிறேன் கொஞ்சம் தேனீர்.

24. I do my homework.
நான் செய்கிறேன் எனது வீட்டுப்பாடம்.

25. I deposit money in the bank.
நான் வைப்பீடு செய்கிறேன் காசை வங்கியில்.

26. I wait for you.
நான் காத்திருக்கிறேன் உனக்காக.

27. I operate the computer.
நான் இயக்குகிறேன் கணனி(யை)

28. I follow a computer course.
நான் பின்தொடர்கிறேன் ஒரு கணனிப் பாடப்பயிற்சி.

29. I practice my religion.
நான் பின்பற்றுகிறேன் என் மதத்தை.

30. I listen to news.
நான் செவிமடுக்கிறேன் செய்திகளுக்கு.

31. I speak in English.
நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில்.

32. I prepare tea.
நான் தயாரிக்கிறேன் தேனீர்.

33. I help my mother.
நான் உதவுகிறேன் எனது தாயாருக்கு.

34. I celebrate my birthday.
நான் கொண்டாடுகிறேன் எனது பிறந்த நாளை.

35. I enjoy Tamil songs.
நான் இரசிக்கிறேன் தமிழ் பாடல்களை.

36. I negotiate my salary.
நான் பேரம்பேசுகிறேன் எனது சம்பளத்தை.

37. I change my clothes.
நான் மாற்றுகிறேன் எனது உடைகளை.

38. I go to market.
நான் போகிறேன் சந்தைக்கு.

39. I choose a nice shirt.
நான் தெரிவுசெய்கிறேன் ஒரு அழகான மேற்சட்டை.

40. I buy a trouser.
நான் வாங்குகிறேன் ஒரு காற்சட்டை.

41. I love Tamil.
நான் நேசிக்கிறேன் தமிழை.

42. I remember this place.
நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன் இந்த இடத்தை.

43. I take a transfer.
நான் எடுக்(பெறு)கிறேன் ஒரு இடமாற்றம்.

44. I renovate the house.
நான் புதுபிக்கிறேன் வீட்டை.

45. I give up this habit.
நான் விட்டுவிடுகிறேன் இந்த (தீய)பழக்கத்தை.

46. I fly to America.
நான் பறக்கிறேன் (விமானத்தில்) அமெரிக்காவிற்கு.

47. I solve my problems.
நான் தீர்க்கிறேன் எனது பிரச்சினைகளை.

48. I improve my English knowledge.
நான் விருத்திச்செய்கிறேன் எனது ஆங்கில அறிவை.

49. I practice English at night.
நான் பயிற்சி செய்கிறேன் ஆங்கிலம் இரவில்.

50. I dream about my bright future.
நான் கனவு காண்கிறேன் எனது பிரகாசமான எதிர்காலத்தை (பற்றி).

பகுதி 2

மேலே "பகுதி 1" ல் உள்ள 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யும் படி கூறியிருந்தேன். இப்பொழுது அதே 50 வாக்கியங்களையும் He / She / It போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்துப்பாருங்கள்.

கவனிக்கவும்:
சாதாரண நிகழ்காலத்தில் He/ She/ It போன்ற மூன்றாம் நபர் ஒருமை "Third Person Singular" வாக்கியங்களின் போது எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் s, es
 போன்ற எழுத்துக்கள் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள். மேலும் He/ She/ It Infinitive + e, es அட்டவணையை ஒருமுறை பார்த்துக்கொள்ளவும்.

Grammar Patterns 2 ல் முதலாவது வார்த்தை எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை பார்த்தும் அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் சில உதாரணங்கள்:

He does a job. - அவன் செய்கிறான் ஒரு வேலை.
She does a job. - அவள் செய்கிறாள் ஒரு வேலை.
It does a job. - அது செய்கிறது ஒரு வேலை.

He speaks in English - அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.
She speaks in English. - அவள் பேசுகிறாள் ஆங்கிலத்தில்.
It speaks in English. - அது பேசுகிறது ஆங்கிலத்தில்.

இப்பொழுது "Third Person Singular" வாக்கியங்களை எவ்வாறு கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதைப் பார்ப்போம்.

Auxiliary verb + Subject + Main verb +?
2. Does + he/ she/ it + do a job?

கேள்வி வாக்கியங்களின் போது "Auxiliary verb" அதாவது துணைவினை 'Does' வாக்கியத்தின் ஆரம்பத்திலும் "Subject" அதன் பின்னாலும் அமையும் என்பதை நினைவில் வையுங்கள்.

Does he do a job?
அவன் செய்கிறானா ஒரு வேலை?
Yes, he does a job
ஆம், அவன் செய்கிறான் ஒரு வேலை.
No, he doesn’t do a job. (does + not)
இல்லை, அவன் செய்கிறானில்லை இரு வேலை.

Does he speak in English?
அவன் பேசுகிறானா அங்கிலத்தில்?
Yes, he speaks in English.
ஆம், அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்
No, he doesn’t speak in English. (does + not)
இல்லை, அவன் பேசுகிறானில்லை ஆங்கிலத்தில்.

Does she go to school?
அவள் போகிறாளா பாடசாலைக்கு?
Yes, she goes to school.
ஆம், அவள் போகிறாள் பாடசாலைக்கு.
No, she doesn’t go to school. (does + not)
இல்லை, அவள் போகிறாளில்லை பாடசாலைக்கு.

குறிப்பு:

He - அவன்
'அவன்' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக ஆண்களின் பெயர்களை பயன்படுத்தலாம்.

She - அவள்
'அவள்' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பெண்களின் பெயர்களை பயன்படுத்தலாம்.

It - அது
'அது' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பிற பொதுவான எந்த பெயர்களையும் பயன்படுத்தலாம்.

உதாரணம்:

He/ She/ It - makes a coffee - (make)
He/ She/ It - thinks about that (think)
He/ She/ It - loves ice-cream. (love)

Suvethine makes a coffee. - சுவேதினி தயாரிக்கிறாள் ஒரு கோப்பி.
Sarmilan loves his motherland. - சர்மிலன் நேசிக்கின்றான் அவனது தாயகத்தை.

விதிமுறைகள்:

வினைச் சொற்களின் கடைசி எழுத்து “y” ல் முடிவடைந்திருந்தால் அதனுடன் “ies” இணைத்துக்கொள்ள வேண்டும். (விதி விலக்கானவைகளும் உண்டு)

உதாரணம்:

try - tries
worry - worries

அதேப்போன்று “s”, x”, z”, ch”, sh”, o" போன்ற எழுத்துக்கள் வினைச் சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணம்:

do - does
go - goes
have - has

('have' என்பது 'has' என முழுச்சொல்லே மாறி பயன்படும்.)

குறிச்சொற்கள் (Signal Words)

நிகழ்கால வினைச் சொற்களுடன் பயன்படும் குறிச்சொற்கள்:

always
often
usually
sometimes
seldom
never
every day
every week
every year
on Monday
after school


உதாரணமாக ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களிடம் " நீ எங்கே வசிக்கிறாய்?" என்று கேட்டால், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை கவனியுங்கள்.

Where do you live?
எங்கே நீ வசிகிறாய்?

I live in Hong Kong.
நான் வசிக்கிறேன் ஹொங்கொங்கில்.

இப்பதிலை சற்று கவனியுங்கள்,
 "நான் வசிக்கிறேன் ஹொங்கொங்கில்" என்று நீங்கள் சாதாரண நிகழ்காலத்தில் பதிலளித்துள்ளீர்கள். இப் பதில் ஒரு வரையரைக்குள் உட்படாமல் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். அதாவது நேற்றும் ஹொங்கொங்கில் வசித்துள்ளீர்கள். இன்றும் ஹொங்கொங்கில் வசிக்கின்றீர்கள். நாளையும், ஹொங்கொங்கில் வசிக்கலாம். எனவே உங்கள் பதில் பொதுப்படையானதாகவே அமைகின்றது என்பதை கருத்தில் கொள்க.

இதுப்போன்ற சந்தர்பங்களில் "செயல்" முக்காலத்தையும் குறிக்கும் பொது நிகழ்வாகவே பயன்படும். கீழேயுள்ள விளக்கப்படங்களை கவனியுங்கள்.

விளக்கப்படங்கள் (diagrams)
விளக்கப்படம் 1

விளக்கப்படம் - 2 ல் காட்டப்பட்டுள்ளவாறு, ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் நிகழும் நிகழ்காலத்தை குறிக்கும் விதமாகவும் சில வாக்கியங்கள் பயன்படும்.

விளக்கப்படம் 2


சரி! இனி உங்கள் பயிற்சிகளை தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக