Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 18 ஜூன், 2019

செட்டிநாடு கோழி ரசம்

Image result for செட்டிநாடு கோழி ரசம்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com 



அதிக புரதச் சத்தை தரும் செட்டிநாடு கோழி ரசம்

தேவையான பொருள்கள்:
  • சிக்கன் அரை கிலோ
  • பட்டை
  • புளி 2 நெல்லிக்காய் அளவு
  • தனியாத் தூள் அரை தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் அரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  • வெந்தயம் அரை தேக்கரண்டி
  • மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய்
  • இலவங்கம்
  • ஏலக்காய்
  • இஞ்சி, பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  • வெங்காய விழுது 200 கிராம்
  • தக்காளி 100 கிராம்
  • கருவேப்பிலை தேவையான அளவு 
  • உப்பு தேவையான அளவு 
  • எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை:
சிக்கனை முதலில் நன்கு சுத்தம் செய்யவும்.
இப்போது சுத்தம் செய்த சிக்கனை துண்டுகள் ஆக்கவும்.
மறுபுறம் புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, லவங்கம் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு தாளிக்கவும்.
பின்னர் கீறிய பச்சை மிளகாய், அரைத்த வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி, தேவையான அளவு கருவேப்பில்லை ஆகிய இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக நன்கு வதக்கவும்.
இப்போது தனியாத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகிய இவற்றுடன் சிக்கனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
சிக்கன் நன்கு வதங்கிய மாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக விடவும்.
சிக்கன் வெந்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில் புளியைக் கரைத்து மண் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளவும்.
சிக்கன் வெந்ததும் புளித் தண்ணீரை அதில் ஊற்றி சிறிது நேரம் அப்படியே அடுப்பில் வைக்கவும்.
பின்னர் சிக்கனை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து விடவும்.
நீங்கள் பரிமாறும் சமயத்தில் சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கி ரசத்தில் போட்டுப் பரிமாறவும்.
இதோ சுவையான செட்டிநாடு கோழி ரசம் தயார்.

சிக்கனில் செலீனியம் என்னும் சத்து நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடும் போது, அதில் உள்ள செலீனியம், பிற்காலத்தில் மூட்டுகளில் வலி ஏற்படுவதை தடுத்துவிடும்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!