இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
மூலவர்
: கைலாசநாதர்.
தல
விருட்சம் : வில்வ
மரம்
உள்ளது.
பழமை
: 500 வருடங்களுக்குள்.
ஊர்
: ராசிபுரம்.
மாவட்டம் : நாமக்கல்.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில் கொல்லிமலையை தலைநகராக கொண்டு
வல்வில் ஓரி
என்ற
மன்னன்
அப்பகுதியை ஆட்சி
செய்து
வந்தான். வில்
வித்தையில் வீரனான
இம்மன்னன் சிறந்த
சிவபக்தன். ஒருசமயம் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தான். வனத்தில் நீண்டநேரமாக தேடியும் ஒரு
மிருகம்கூட கண்ணுக்கு சிக்கவில்லை.
களைத்துப்போன ஓரி
மன்னன்,
ஓரிடத்தில் வென்பன்றியைக் கண்டான். உடனே
பன்றி
மீது
அம்பை
எய்தான். அம்பினால் தாக்கப்பட்ட பன்றி,
அங்கிருந்து ஓடியது.
மன்னன்
பின்
தொடர்ந்தான். நீண்டதூரம் ஓடிய
பன்றி,
ஒரு
புதருக்குள் மறைந்து கொண்டது.
மன்னன்
புதரை
விலக்கியபோது அவ்விடத்தில் சுயம்புலிங்கத்தைக் கண்டான். லிங்கத்தின் நெற்றியில் மன்னன்
எய்த
அம்பு
தாக்கியதில், ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது. கலங்கிய மன்னன்
சிவனை
வணங்கினான். சிவன்
அவனுக்கு சுயரூபம் காட்டி
தானே
பன்றியாக வந்ததை
உணர்த்தினார். அதன்பின் மன்னன்
இவ்விடத்தில் கோவில்
எழுப்பினான். இக்கோவிலே அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் ஆகும்.
தல பெருமை :
இத்தலத்தில் சிவன்
சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார் என்பது
இதன்
சிறப்பம்சமாகும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
இத்தலத்தில் இருக்கும் கைலாசநாதரிடம் வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது
நம்பிக்கை. அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, விசேஷ
அபிஷேகம் செய்து
நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
திருவிழா :
இத்தலத்தில் சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி
விசாகம், தைப்பூசம், மாசிமகம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை
மிகச்
சிறப்பாக நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை
6 மணி
முதல்
நண்பகல் 12 மணி
வரை
மற்றும் மாலை
4.30 மணி
முதல்
இரவு
8.30 மணி
வரை
நடை
திறந்திருக்கும்.
முகவரி
:
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்,
ராசிபுரம்-637 408,
நாமக்கல் மாவட்டம்,
போன்
: 91-4287-223 252, 91-94435 15036, 91-99943
79727
செல்லும் வழி :
நாமக்கல் மாவட்டத்திலிருந்து 30 கி.மீ., தொலைவிலும், சேலத்திலிருந்து 27 கி.மீ., தொலைவிலும் ராசிபுரம் உள்ளது.
பழைய
பேருந்து நிலையத்திலிருந்து நடந்து
செல்லும் தூரத்தில் இக்கோவில் இருக்கிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக