Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 ஜூன், 2019

பூமியை தாக்க வரும் விண்கல்! எகிப்திய கடவுள் பெயர் சூட்டல்..!



 அபோபிஸ்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:
Contact us : oorkodangi@gmail.com

இன்னும் பத்து ஆண்டுகளில் பூமியை தாக்கவிருக்கும் "காட் ஆப் சாயோஸ்" என்று எகிப்திய கடவுள் பெயரிடப்பட்டுள்ள மிகப்பெரிய விண்கல்லின் வருகையை எதிர்பார்த்து நாசா தற்போதே தயாராகி வருகிறது.

100000ல் 1 வாய்ப்பு மட்டுமே வானில் உள்ள நட்சத்திரங்களை போல பிரகாசமாக
2029 ஏப்ரல் 13 அன்று வானத்தை பார்க்கும் மக்கள் ஒரு ஒளிக்கீற்று வானத்தை கிழித்துக்கொண்டு வேகமாகவும் பிரகாசமாகவும் செல்வதை காணமுடியும். மிகவும் வேகமாக பயணிக்கும் அது நிலவின் அகலத்தை வெறும் ஒரு நிமிடத்தில் கடந்து செல்லும் மற்றும் வானில் உள்ள நட்சத்திரங்களை போல பிரகாசமாக இருக்கும்.

ஒளிரும் கீற்று
அந்த ஒளிரும் கீற்று நாசாவால் கண்காணிக்கப்பட்டு வரும் 340 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய விண்கல் ஆகும். அந்த விண்கல் பூமிக்கு பாதிப்பில்லாதது போல் 19,000 மைல் தொலைவில் பயணிக்கும் என நாசா கூறுகிறது. ஆனால் பூமியைச் சுற்றி பறக்கும் சில விண்கலங்களுக்கு வெகு அருகில் அந்த விண்கல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நெருக்கமாக உள்ளது
 ஆராய்ச்சியாளர்கள் அந்த விண்கல்லின் அனைத்து அம்சங்களையும் ஆராயும் வகையில் போதுமான அளவிற்கு நெருக்கமாக உள்ளது. அவர்கள் அதை புதிய வழிகளில் கவனிக்க அனுமதிப்பதுடன் கூர்மையான அம்சங்களை பார்க்க முடியும்.



நாசா
இந்த அளவு மிக நெருக்கமாக செல்லும் மிகப்பெரிய விண்கல் என்பது மிகவும் அரிதான ஒன்று. விஞ்ஞானிகள் நெருக்கமாக சிறிய விண்கற்களை மட்டுமே பார்த்திருக்கிறார்கள் ஆனால் இத்தகைய ஒரு மகத்தான அளவு விண்கல்லை பார்ப்பது மிககுறைவு என நாசா கூறியுள்ளது.

ராடார் விஞ்ஞானி மரினா ப்ரோசோவிக்
"2029ஆம் ஆண்டு இந்த அபோபிஸ் பூமிக்கு நெருக்கமாக வருவது அறிவியலாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. ஆப்டிகல் மற்றும் ரேடார் தொலைநோக்கிகள் மூலம் அந்த விண்கல்லை நாங்கள் ஆராய்வோம். ரோடார் மூலம் கண்காணிக்கும் போது அந்த விண்கல்லின் சில மீட்டர் அளவுள்ள மேற்பரப்பை பற்றிய தகவல்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும்" என்கிறார் கலிபோர்னியாவின் பசாடெனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ரோபல்சன் ஆய்வகத்தில் பூமியின் அருகாமை பொருள்களை கண்காணிக்கும் ராடார் விஞ்ஞானி மரினா ப்ரோசோவிக்.

தாக்கினால் ஏற்படும் விளைவுகள்
மேரிலாண்ட் காலேஜ் பார்க்-ல் 2019 ஆம் ஆண்டிற்கான கிரக பாதுகாப்பு மாநாட்டில் இந்த வாரம் சந்தித்த விஞ்ஞானிகள், பூமியை விண்கல் தாக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதை எவ்வாறு கண்காணிப்பது என்பது பற்றியும் விவாதித்தனர்.

அபோபிஸ் விண்கல்
பூமியை நெருங்கும் போது அமெரிக்காவிற்கு மாலை நேரமாக இருப்பதால் அதன் அணுகுமுறை அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும். அது ஒரு மணி நேரத்தில் கடலை கடந்து செல்லும் அளவிற்கு விரைவாக பயணிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த அபோபிஸ் விண்கல்லானது 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கிட்பீக் தேசிய கண்காணிப்பகத்தில் உள்ள வானியலாளர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை கண்டறிந்த பிறகு, வானிலை மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தடைபட்டன.

100000ல் 1 வாய்ப்பு மட்டுமே
 ஆனால் அந்த விண்கல் மீண்டும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளால் காணப்பட்டு, அவர்கள் அந்த விண்கல் 2029 ஆம் ஆண்டில் பூமியை கடந்து செல்லும் போது 2.7 சதவீதம் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என கணக்கிட்டனர்.அதற்பிறகு விண்கல் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பூமியை தாக்குவதற்கான சாத்தியம் நிராகரிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இப்போது மேலும் ஆய்வுகள் மற்றும் கணக்கீடுகள் செய்து 100000ல் 1 வாய்ப்பு மட்டுமே அந்த விண்கல் பூபியை தாக்கும் என்று கூறியுள்ளனர். ஆனால் எதிர்கால தாக்கங்கள் குறித்து நிரூபிக்க இன்னும் ஆய்வுகள் தேவைப்படும். 2029 ஆம் ஆண்டில் அது பூமியை நெருங்கும் வரை இந்த கண்காணிப்பு தொடரும். விஞ்ஞானிகள் இந்த விண்கல்லின் அளவு, வடிவம், கலவை மற்றும் அதன் உள்கட்டமைப்பு பற்றி மேலும் அறிய முடியும் என நம்புகின்றனர்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக