Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 18 ஜூன், 2019

எல்லோரா கைலாசநாதர் திருக்கோவில்.


Image result for வியக்க வைக்கும் எல்லோரா கைலாசநாதர் திருக்கோயில்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com

ஒற்றைக்கல்லில் ஒரு சிலையை வடித்து கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், ஒற்றைபாறையில் ஒரு கோவிலையே வடித்துள்ளார்கள் என்றால்.... இது ஆச்சர்யம் மட்டுமல்ல வியப்பிற்குரிய ஒரு விஷயமாகும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா, குகை சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லோரா மலையில், குடைந்து கட்டப்பட்டிருக்கும் கோவில்தான் எல்லோரா கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த கோவிலின் அடி முதல் நுனி வரை மலையை குடைந்தே வடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலானது பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள கோவில் போல் காட்சி அளிக்கிறது.

ஆச்சர்யத்தை அள்ளும் கோவிலின் சிறப்பு :

இக்கோவில் மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி செங்குத்தாக செதுக்கப்பட்டிருக்கிறது. மலையைக் குடைந்து, அதிலிருந்து பெரும் பாறையைத் தனியாக வெட்டி எடுத்து, மீதமுள்ள பாறைகளை சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து, தனித் தனிச் சன்னிதிகளாகவும், யானைகளாகவும் உருவாக்கியிருக்கிறார்கள்.

இக்கோவிலை கட்ட வெளியிலிருந்து சிறு கல்லைக்கூட எடுத்து வரவில்லை என்பது தான் விசேஷமே.

இந்த ஆலயத்தின் கோபுரம் இரட்டை அடுக்கு கொண்டு அமைந்திருக்கிறது. மேலும், ஆலய விமானம் 3 அடுக்கு கொண்டது.

இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் கைலாசநாதர் மேற்குதிசை பார்த்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சிவபெருமானின் கைலாய மலையை போலவே இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றாக சேர்க்கும் அளவுக்கு எல்லோர கைலாசநாதர் கோவில், உயர்ந்த கலையம்சத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!