Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஜூன், 2019

ஹுவாய் மீது மீண்டும் சமுட்டி அடியாக வர்த்தக தடை விதிப்பு.! அமெரிக்காவின் அட்டகாசம்.!


 ஹூவாய் நிறுவனம் ஒப்புதல்:


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com




ஹூவாய் நிறுவனத்தின் மீது மீண்டும் சமுட்டியால் அடிப்பதை போல அமெரிக்கா வர்த்த தடையை அறிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் வர்த்த போரால் வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹுவாய் மீது மீண்டும் சமுட்டி அடியாக வர்த்தக தடை விதித்த அமெரிக்கா.!

யார் பெரியவர் என்று முனைப்பு காட்டும் வேலையில் சீனா மீதும் ஹூவாய் நிறுவனத்தின் மீதும் அடுத்தது நடவடிக்கையில் அமெரிக்கா அரசு ஈடுபட்டுள்ளது.

வர்த்தக போர்:
வர்த்தக போர்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகின்றது. இதனால் சீனாவின் உற்பத்தி பொருட்களுக்கும், அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களுகம் இரு நாடுகளும் மாறிமாறி வரியை அதிகரிப்பு செய்து கொண்டன. இதை தொடர்ந்து அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கு 25 % வரிவதிப்பை அதிகரிப்பு செய்தது.

உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு :
உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு : ஹூவாய் நிறுவனம் தங்கள் நாட்டு ராணுவ ரகசியங்களை செல்போன் கருவிகள், செல்போன்கள் மூலம் உளவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி சீனா தொலை தொடர்பு நிறுவனங்கள் மீது அவசர நிலை பிரகடம் செய்தார் அதிபர் டிரம்ப். இதனால் சுமார் ஹூவாய் நிறுவனத்தை சார்ந்த 79 நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவு வேண்டும்:
அரசின் உத்தரவு வேண்டும்: இந்த நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்ற அமெரிக்கா அரசின் சிறப்பு அனுமதியை பெற வேண்டும் என்று அமெரிக்கர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் சீனா இருநாட்டிலும் வர்த்தகத்தில் பெரும் தேக்கநிலை நிலவுகின்றது. இதனால் மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த முடிவு:
சீன நிறுவனமான ஹூவாய்யின் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் அமெரிக்காவை சீனா உளவு பார்ப்பதாக கூறி அந்நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு வர்த்தக தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து ஹூவாய் நிறுவனம் அமெரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்தது.

ஹூவாய் நிறுவனம் ஒப்புதல்:
இந்நிலையில், உளவு பார்க்கமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் அமெரிக்க அரசு வருங்காலத்திலும் தங்களுடனான வர்த்தகத்தை தொடங்க தயாராக இல்லாத நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு வாய்புள்ளதா என்பது தெரியவில்லை என்றும் ஹுவாய் தெரிவித்துள்ளது.




என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக