>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 7 ஜூன், 2019

    சிரசாசனம்







    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    Follow Us:



    Contact us : oorkodangi@gmail.com





    சிரசாசனம் என்றால் ஒருவர் தலைகீழாக நின்று செய்யப்படும் ஆசனமாகும். சிரசு என்றால் தலை என்று பொருள்.

    செய்முறை :-

    1. விரிப்பின் மீது கால் முட்டிகளை அகட்டி வைத்து மண்டியிட்டு உட்காரவும்.

    2. கை விரல்களை கோர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மீது கைகளை வைக்கவும்.

    3. உச்சந்தலையை விரிப்பின்மீது வைத்து கைகளால் தலையை பற்றி பிடித்துக் கொள்ளவும்.

    4. தலை கை முட்டி, கால் விரல்கள் ஆகியவற்றை விரிப்பின் மீது அழுத்தி கால்முட்டிகளை உயர்த்தவும். அதே நேரத்தில் முதுகுத் தண்டு நேராக வரும்படி கால்களை முன்னால் நகர்த்தி கொண்டு வரவும்.

    5. இது அர்த்த சிரசாசன நிலை. இதை ஆரம்ப நிலையினர் 1 மாதம் பழகி வரவும். குறைந்தது 50 எண்ணிக்கையும் அதிகபட்சம் ஆரம்ப நிலையினர் 1 மாதம் பழகி வரவும் 100 எண்ணிக்கை இருந்தால் போதும்.

    6. சுவர் ஓரமாக இந்நிலையிலிருந்து கால்கள் இரண்டையும் உயரே மெதுவாக தூக்கி குதிகால்கள் சுவற்றின்மீது படும்படி வைத்து உடம்பை நேராக்கி கண்களை மூடி 100 எண்ணிக்கை செய்யவும்.

    7. மூன்று மாத பயிற்சிக்கு பிறகு சுவரை விட்டு விலகி அல்லது தனியாக செய்யலாம்.

    8. 100 எண்ணிக்கை முடிந்ததும் மெதுவாக கால்களை மடித்து தரையை நோக்கி வந்து கால் பாதங்களை கை முட்டியை அழுத்தி தலையை உயர்த்தி எழுந்து மண்டியிட்டு உட்காரவும்.

    9. பிறகு சவாசனத்தில் படுத்து உடலை தளர்த்தி ஓய்வு எடுக்கவும்.

    எச்சரிக்கைகள்:-

    1. இந்த யோகாவிற்கு நீங்கள் புதிது என்றால் முதலில் சுவரின் துணையுடன் பயிற்சி செய்யவும். மேலும் தகுதி பெற்ற ஆசான் ஒருவரிடம் இந்த ஆசனத்தை கற்றுத்தேர்வதும் நல்லது.

    2. அடிவயிறு மற்றும் முதுகெலும்பு வலி இருப்பவர்கள் இந்த யோகாசனத்தை செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பலன்கள் :

    1. மூளை, கண், காது, மூக்கு, வாய் போன்ற மிக முக்கியமான உறுப்புகளுக்கு தேவையான உயர் சத்துக்கள் தடையின்றி இரத்த ஓட்டத்தின் மூலம் பெறப்படுவதால் சீராகவும், சிறப்பாகவும் இயங்குகிறது. அதனால் அதை சார்ந்த நோய்களும் குணமடைகிறது. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான நல்லதொரு சாதனமாக இந்த ஆசனம் உதவுகிறது. மூளை செயல்களிலுள்ள மூளை நரம்புகளில் தங்கியுள்ள நச்சுக்களை துரிதமாக வெளியேற்றுகிறது. நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் சீர்படுகிறது.

    2. மூக்கில் வாசனையை உணரும் சக்தி மரத்துவிட்டவர்களுக்கு வாசனை உணரும் சக்தியை மீட்டு தருகிறது.

    3. தொடர்ந்து செய்து வந்தால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். இரத்தம் சுத்தமடைகிறது.

    4. ஞாபக சக்தி மன ஒருமைப்பாடு ஆகியவை அதிகரிக்கிறது.

    5. முகப்பொலிவு, நல்ல குரல் வளம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.



    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
    மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
    உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக