Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஜூன், 2019

திருச்சுனை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மதுரை

திருச்சுனை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மதுரை T_500_480 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com




மூலவர் : அகத்தீஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பாடகவள்ளி
தல விருட்சம் : -
தீர்த்தம் : சுனை
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : திருச்சுனை
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

சிவராத்திரி, திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

அகத்தியர் பாறையில் சுனை நீரை தெளித்து, பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறையையே சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார்.

திறக்கும் நேரம்:

காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில், திருச்சுனை, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.

போன்:

-

பொது தகவல்:


அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கியும், பாடகவள்ளி அம்பாள் சுவாமிக்கு இடதுபுறம் தனி சன்னதியில் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். பொதுவாக குன்றின் மீது முருகன்தான் காட்சி தருவார். ஆனால் இங்கு சிவன் காட்சி கொடுக்கிறார்.


சிவன், அகத்தியருக்கு பிரான்மலை என்னும் மலையில் திருமணக்காட்சி கொடுத்தார். இம்மலையிலும் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. கோஷ்டத்தில் சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.


பிரகாரத்தில் நால்வர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சன்னதிகள் இருக்கிறது.





பிரார்த்தனை

இங்கு வேண்டிக்கொள்ள மனக்குழப்பங்கள் நீங்கி, அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

தலபெருமை:

சிவன் சன்னதிக்கு பின்புறத்தில் சுனை தீர்த்தம் இருக்கிறது. மிகவும் விசேஷமான இந்த தீர்த்தம் எப்போதும் வற்றுவதில்லை என்பது கலியுக அதிசயம். சுனை தீர்த்தம் தெளித்து சிவலிங்கம் உண்டாக்கப்பட்டதால் இத்தலம் தீர்த்தத்தின் பெயராலேயே, "திருச்சுனை' என்று அழைக்கப்படுகிறது.

அகத்தியர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். பொதுவாக கோயில்களில் நுழைவு வாசலின் வலப்புறத்தில் சூரியன் தனியாகத்தான் இருப்பார். அரிதாக சில தலங்களில் நவக்கிரக மண்டபத்தில் மனைவியருடன் இருப்பார். ஆனால், இங்கு நுழைவு வாசல் அருகில் உஷாவுடன் சேர்ந்து காட்சியளிக்கிறார்.

உடன் பிரத்யூஷா இல்லை. இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சிவன், திருமணக்காட்சி தந்த தலமென்பதால் இக்கோயிலில் அதிகளவில் திருமணங்கள் நடத்தப்படுகிறது.


தல வரலாறு:

கைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் நடந்தபோது, தேவர்களும், மகரிஷிகளும் அங்கு சென்றனர். இதனால், வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. எனவே, சிவன் அகத்தியரை தெற்கே பொதிகை மலை நோக்கி அனுப்பினார்.

தென்திசைக்கு கிளம்பிய அகத்தியர் தான் மட்டும் சிவன் திருமணத்தை காணாமல் செல்வதை எண்ணி வருந்தினார். எனவே சிவன், அகத்தியர் செல்லும் வழியில் எவ்விடத்தில் திருமணக்காட்சி காண விரும்புகிறாரோ, அவ்விடங்களில் தான் மணக்கோலத்தில் காட்சி தரும்படியான வரம் கொடுத்தார்.

அதன்படி தென்திசை வந்த அகத்தியர் பல தலங்களில் சிவனின் திருமணக்காட்சியை தரிசித்தார். அவர் இத்தலம் வழியாக வந்தபோது, இந்த குன்றில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது அவர் சிவதிருமண தரிசனம் பெற வேண்டும் என எண்ணினார். சிவனை தரிசிக்கும் முன்பு நீராட விரும்பினார். அந்த நேரத்திலேயே, அதிசயமாக பாறையில் ஊற்று பெருகியது.

தீர்த்தத்தில் நீராடிய அகத்தியர், சிவனை வழிபட அருகில் லிங்கம் தேடினார். ஆனால், லிங்கம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, பாறையில் சுனை நீரை தெளித்தார்.

தீர்த்தம் தெளித்ததும், பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறையையே சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார் அகத்தியர். அப்போது இக்குன்றுக்கு எதிரேயுள்ள மற்றொரு மலையில் சிவன், பார்வதியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார். அகத்தியருக்கு காட்சி தந்தவர் என்பதால் சுவாமி, "அகத்தீஸ்வரர்' எனவும் பெயர் பெற்றார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: அகத்தியர் பாறையில் சுனை நீரை தெளித்து, பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறையையே சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக