
இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
Contact us : oorkodangi@gmail.com
கா லையில்
எழுந்தது முதல் இரவு தூங்கும்
வரை அனைவரும் பயன்படுத்தும் ஒன்று செல்போன். வீட்டிலிருக்கும்
சிறுவர் முதல் பெரியவர் வரை
ஒவ்வொருவருக்கும் தனித் தனி செல்போன்,
பள்ளிக் குழந்தைக்கு டேப்லட் எனத் தொழில்நுட்ப
உலகில் வாழ்ந்து வருகிறோம். குழந்தைகளைச் சாப்பிடவைப்பது முதல் தூங்கவைப்பது வரை
அனைத்திற்கும் செல்போனைத்தான்
செல்லுலார்
டெலிகம்யூனிகேஷன்ஸ் அண்ட் இன்டர்நெட் அசோசியேஷன் (Cellular Telecommunications and
Internet Association – CTIA) ஆய்வின்படி, உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின்
எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் காலஅளவும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே
இருக்கிறது.
சமீபத்தில்,
ஜெர்மன் கதிர்வீச்சு பாதுகாப்பு அலுவலகம் (The German Federal Office for
Radiation Protection) பல நிறுவனங்களின் செல்போன்களில் வெளியாகும்
கதிர்வீச்சுகளைப் பரிசோதித்தது. இந்த ஆய்வில், டாப் 15 செல்போன் மாடல்களில்
ஷியோமியின் 4 மாடல்களும் மற்றும் ஒன்ப்ளஸின் 4 மாடல்களும் அதிக கதிர்வீச்சுகளை
வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில், ஹெச்டிசி, கூகுள், ஐபோன்,
சோனி ஆகிய நிறுவனங்களின் மொபைல்கள் உள்ளன. இதில் முதலிடத்தில் இருப்பது ஷியோமியின்
Mi A1 செல்போன்தான். இதில் அதிகளவு கதிர்வீச்சுகள் வெளியாகின்றன. அதாவது சுமார்
1.75 வாட்ஸ் கதிர்வீச்சுகள் வெளியாகின்றன.
இரண்டாவது
இடத்தில் ஒன்ப்ளஸ் 5T மாடல் உள்ளது. இது 1.68 வாட்ஸ் கதிர்வீச்சுகளை வெளியிடுகிறது.
இதையடுத்து மீண்டும் ஷியோமி Mi Max 3 மாடல் 1.58 வாட்ஸ் கதிர்வீச்சுகளை வெளியிட்டு
மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதிக கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து தப்பிக்க
என்ன செய்யலாம்?
செல்போன்
பயன்படுத்துபவர்கள் தங்களின் செல்போனை பாக்கெட்டிகளில் வைத்திருக்கக் கூடாது.
நீண்ட நேரமாக போன் பேச காதுகளில் வைத்திருக்கக்கூடாது. தூங்கும்போது செல்போனை
படுக்கையில் வைத்துக் கொண்டே தூங்குவது மிகவும் ஆபத்தானது. வெறும் 2 புள்ளிகளோ
அதற்கும் குறைவாகவோ சிக்னல் இருந்தால் செல்போன்களை பயன்படுத்துவதை முடிந்தளவு
குறைத்துக் கொள்ளவேண்டும். அதிவேகத்தில் செல்லும்போது சிக்னலை தொடர்ந்து
தக்கவைத்துக் கொள்வதற்காக செல்போன்கள் அதிக கதிர்வீச்சை வெளியிடுவதால்,
பயணங்களின்போது செல்போன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளவேண்டும். நம்முடைய
செல்போனில் கதிர்வீச்சைப் பற்றி தெரிந்துகொள்ள *#07# என்ற எண்ணை டயல் செய்து தெரிந்துகொள்ளலாம்.
இதில்
சில மொபைல்களின் கதிர்வீச்சு அளவு ஆபத்தானதாக தெரிந்தாலும்கூட, இதனால் இந்திய
மொபைல்களுக்கு பிரச்னையில்லை. காரணம், இந்த கணக்கெடுப்பு முழுக்க முழுக்க
ஜெர்மனியில் இருக்கும் மொபைல் மாடல்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டது என்பதால்
இது அப்படியே இந்திய மாடல்களுக்குப் பொருந்தாது. ஜெர்மனியில் அதிகபட்ச கதிர்வீச்சு
அளவு 2W/kg வரை இருக்கலாம். ஆனால், இந்தியாவில் இந்த SAR மதிப்பு 1.6
W/kg-க்குள்தான் இருக்கவேண்டும். எனவே இங்கு இந்த அளவிற்குள் கதிர்வீச்சு
இருக்கும்படிதான் மொபைல்கள் தயாரிக்கப்படும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக