Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 ஜூலை, 2019

ஆங்கில பாடப் பயிற்சி - 10 (Simple Past Tense)


Image result for Simple Past Tense) 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




Grammar Patterns 1 றின் மூன்று மற்றும் நான்காவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். நான் ஏற்கெனவே, எமது ஆங்கிலம் கிரமர் பெட்டன் 1இன், ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கமைய இன்று 3 மற்றும் 4 ஆவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை விரிவாகக் கற்கப் போகின்றோம்.


3. I did a job
4. I didn’t do a job.

இவை இரண்டும் இறந்தக்கால வாக்கியங்களாகும். இவற்றை தமிழில் கடந்தக்கால வாக்கியங்கள் என்றும் கூறுவர். ஆங்கிலத்தில் "Simple Past Tense" அல்லது "Past Simple Tense" என்றழைப்பர்.

இந்த "Simple Past Tense" சாதாரண இறந்தக்கால சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதை முதலில் பார்ப்போம்.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb +
I
/He/She/It/You/We/They + __ + did a job.
இவற்றில் (Auxiliary verb) "துணை வினை" பயன்படாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb +
I/He/She/It/You/We/They + did + not + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb +
Did
+ I/he/she/it/you/we/they + do a job?
இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும், துணை வினை (Auxiliary verb வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால், ஆங்கிலத்தில் எளிதாக கேள்வி பதில் வாக்கியங்களை அமைக்கலாம்.

உதாரணம்:

Did you do a job?
நீ செய்தாயா ஒரு வேலை?
Yes, I did a job
ஆம், நான் செய்தேன் ஒரு வேலை.
No, I didn’t do a job. (did + not)
இல்லை, நான் செய்யவில்லை இரு வேலை.

Did you speak in English?
நீ பேசினாயா அங்கிலத்தில்?
Yes, I spoke in English.
ஆம், நான் பேசினேன் ஆங்கிலத்தில்
No, I didn’t speak in English. (did + not)
இல்லை, நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.

Did you go to school?
நீ போனாயா பாடசாலைக்கு?
Yes, I went to school.
ஆம், நான் போனேன் பாடசாலைக்கு.
No, I didn’t go to school. (did + not)
இல்லை, நான் போகவில்லை பாடசாலைக்கு.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

1. I answered the phone
நான் பதிலளித்தேன் தொலைப்பேசிக்கு

2. I studied English for ten years.
நான் படித்தேன் ஆங்கிலம் பத்து வருடங்களாக.

3. I applied for a vacancy.
நான் விண்ணப்பித்தேன் ஒரு தொழிலுக்காக.

4. I forgave him.
நான் மன்னித்தேன் அவனை.

5.traveled by MTR.
நான் பயணம் செய்தேன் MTR ல். (நவீன நிலத்தடித் தொடரூந்து வண்டி)

6. I came back last Friday.
நான் திரும்பி வந்தேன் கடந்த வெள்ளிக்கிழமை.

7. I asked for an increment.
நான் கேட்டேன் ஒரு (பதவி/சம்பல)உயர்வு.

8. I bought a car.
நான் வாங்கினேன் ஒரு மகிழூந்து.

9. I wrote an article.
நான் எழுதினேன் ஒரு கட்டுரை.

10. I borrowed money from Sarmilan.
நான் கடன் வாங்கினேன் காசு சர்மிலனிடமிருந்து.

11. I lent a book to Ravi.
நான் இரவல்/கடன் கொடுத்தேன் ஒரு புத்தகம் ரவிக்கு

12. I played the guitar.
நான் வாசித்தேன் கித்தார்.

13. I boiled water.
நான் கொதிக்கவைத்தேன் தண்ணீர்.

14. I got wet.
நான் நனைந்தேன்.

15. I gave priority to my works.
நான் முக்கியத்துவம் கொடுத்தேன் எனது வேலைகளுக்கு.

16. I published a post.
நான் பதிவிட்டேன் ஒரு பதிவு.

17. I got an appointment.
நான் பெற்றேன் ஒரு நியமனம்.

18. I got into the bus.
நான் ஏறினேன் பேரூந்துக்குள்.

19. I got a loan from the bank.
நான் பெற்றேன் ஒரு கடன் வங்கியிலிருந்து.

20. I read Thinakkural News paper.
நான் வாசித்தேன் தினக்குரல் செய்தித் தாள்.

21. I escaped from the danger.
நான் தப்பினேன் அபாயத்திலிருந்து.

22. I studied in Jaffna.
நான் படித்தேன் யாழ்ப்பாணத்தில்.

23. I ironed my clothes.
நான் அயன் செய்தேன் எனது உடைகளை.

24. I invited my friends.
நான் அழைப்புவிடுத்தேன் எனது நண்பர்களுக்கு.

25. I deposited money in the bank.
நான் வைப்பீடு செய்தேன் காசு வங்கியில்.

26. I did a special project in school.
நான் செய்தேன் ஒரு சிறப்பு திட்டம் பாடசாலையில்.

27. I played football.
நான் விளையாடினேன் உதைப்பந்தாட்டம்

28. I introduced her to my family.
நான் அறிமுகப்படுத்தினேன் அவளை எனது குடும்பத்தாருக்கு.

29. I inquired about this.
நான் விசாரித்தேன் இதைப் பற்றி.

30. I informed to police.
நான் தெரிவித்தேன் காவல் துறைக்கு.

31. I learned English through the medium of Tamil.
நான் கற்றேன் ஆங்கிலம் தமிழ்வழி ஊடாக.

32. I met Kavitha yesterday
நான் சந்தித்தேன் கவிதாவை நேற்று.

33. I married in 1995.
நான் மணம்முடித்தேன் 1995 இல்.

34. I played as a hero.
நான் நடித்தேன் ஒரு கதாநாயகனாக.

35. I visited Thailand last year.
நான் சென்றேன் தாய்லாந்து கடந்த வருடம்.

36. I opened a current account.
நான் திறந்தேன் ஒரு நடைமுறைக் கணக்கு.

37. I sent a message.
நான் அனுப்பினேன் ஒரு தகவல்.

38. I paid in installments.
நான் செலுத்தினேன் (பணம்) தவணைமுறையில்.

39. I taught English.
நான் படிப்பித்தேன் ஆங்கிலம்.

40. I went to the university.
நான் சென்றேன் பல்கலைக்கழகத்திற்கு.

41. I repaid the loan.
நான் திரும்ப செலுத்தினேன் கடன்.

42. I arrived ten minutes ago.
நான் வந்தேன் பத்து நிமிடங்களுக்கு முன்பு.

43. I lived in Bangkok for two years.
நான் வசித்தேன் பேங்கொக்கில் இரண்டு வருடங்களாக.

44. I worked very hard.
நான் வேலை செய்தேன் மிகவும் கடினமாக.

45. I left from home.
நான் வெளியேறினேன் வீட்டிலிருந்து.

46. I sang a song.
நான் பாடினேன் ஒரு பாடல்.

47. I practiced English last night.
நான் பயிற்சி செய்தேன் ஆங்கிலம் நேற்றிரவு.

48. I forgot my wallet.
நான் மறந்தேன் எனது பணப்பையை.

49. I decorated my house.
நான் அலங்கரித்தேன் எனது வீட்டை.

50. I wrote a letter to my mother.
நான் எழுதினேன் ஒரு கடிதம் என் தாயாருக்கு.

Homework:

பயிற்சி 1:
மேலே I (நான்) என்று எழுதிப் பயிற்சி செய்தோம். அவற்றை அதே ஒழுங்கில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தைப் பின்பற்றி You, He, She, It, We, They எனும் சொற்களுடன் வாக்கியங்களை அமையுங்கள்.

Subject + Main verb +
I spoke in English. -
நான் பேசினேன் ஆங்கிலத்தில்.
You spoke in English. -
நீ பேசினாய் ஆங்கிலத்தில்.
He spoke in English. -
அவன் பேசினான் ஆங்கிலத்தில்.
She spoke in English. -
அவள் பேசினாள் ஆங்கிலத்தில்.
It spoke in English. -
அது பேசியது ஆங்கிலத்தில்.
We spoke in English.
நாங்கள்/நாம் பேசினோம் ஆங்கிலத்தில்.
They spoke in English. -
அவர்கள் பேசினார்கள் ஆங்கிலத்தில்.

பயிற்சி 2:
ஏற்கெனவே ஆங்கில பாடப் பயிற்சி 4 ல் சாதாரண நிகழ்கால வாக்கியங்கள் 50 கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் இறந்தக்காலச் சொற்களாக மாற்றி பயிற்சி செய்யலாம். அதில் வினைச்சொல் அதாவது பிரதான "verb" கறுப்பு தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும், அந்த இடங்களில் Irregular verbs அட்டவணையப் பார்த்து இறந்தக் கால வினைச் சொற்களாக மாற்றி அமைக்க வேண்டியது தான் உங்கள் வேலை.

பயிற்சி 3:
இன்று 'நடந்து முடிந்த' அல்லது உங்கள் வாழ்க்கையில் 'நிகழ்ந்த/ முடிந்த' அனைத்து இறந்தக்கால விடயங்களையும் தமிழில் எழுதிக்கொள்ளுங்கள். பின் அவற்றை இன்று நாம் கற்றது போன்று ஆங்கிலத்தில் மாற்றி எழுதிப் பாருங்கள். அவ்வாறு உங்கள் பயிற்சிகளை தொடர்வீர்களானால், எமது இந்தப் பாடப் பயிற்சிகள் நிறைவுப் பெறும் போது உங்கள் வாழ்க்கை சுயசரிதையை நீங்களே எழுதியிருப்பீர்கள்.

குறிப்பு:
சாதாரண நிகழ்கால சொற்கள், இறந்தக்கால வினைச்சொற்களாக மாறும் போது ஏற்படும் மாற்றங்களை அவதானியுங்கள். இவற்றை இரண்டு விதமாக பிரித்து கற்கலாம்.

1. Regular verbs - with regular verbs + ed
2. Irregular verbs - The past form for irregular verbs is variable. You need to learn it by heart.

1. Regular verbs -
எல்லா இறந்தக்கால வினைச்சொற்களின் முடிவிலும் ஒரே ஒழுங்காகed இணைந்து வருபவைகள்.
எடுத்துக்காட்டு:

I played cricket
I visited Japan last year
I watched TV last night

Study
போன்று "y" எழுத்தில் முடிவடையும் சில சொற்களுடன் மட்டும் - ied இணைந்து வரும்.

I studied English.

Live, Love
போன்ற சொற்கள் " e" எழுத்தில் முடிவடைவதால், இவற்றின் இறந்தக்கால சொற்களின் போது - d யை மட்டும் இட்டால் போதும்.
உதாரணம்:

I lived in Australia for two years.

2. Irregular verbs -
இந்த இறந்தக்கால Irregular verbs கள் வெவ்வேறு விதமாக ஒரு ஒழுங்கு முறையற்று வரும். இதனால் இவற்றை Irregular verbs அட்டவணையை மனப்பாடம் செய்து தான் கற்றுக் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக கீழே உள்ள சொற்களைப் பாருங்கள்.

I fell off a horse yesterday.
I went to school
I taught English
I wrote a letter
I slept yesterday

இறந்தக்கால குறிச்சொற்கள் [Simple Past - Signal words]

yesterday
Last night/ week/ year/century
A month ago
In 2007
In the past


இறந்தக்காலம் என்பது செயல் அல்லது நிகழ்வு ஏற்கெனவே முடிந்து விட்டதைக் குறிக்கின்றது. இது இந்த நொடியில் முடிவுற்ற ஒரு விடயமாகவும் இருக்கலாம். பல மில்லியன் வருடங்களுக்கு முன்னதாகவே முடிவுற்ற ஒன்றாகவும் இருக்கலாம். வரைப்படத்தைப் பாருங்கள்.

உச்சரிப்பு (Pronunciation)
குறிப்பாக "regular verbs" களின் முடிவின் போதும்ed வரும். இருப்பினும் இவற்றின் உச்சரிப்பின் போது சிற்சில மாற்றங்கள் உள்ளன. அவற்றை அவதானித்து பேசிப் பழகுங்கள்.

Agreed -
எக்gரீட்d
Loved -
லவ்ட்d
Judged -
ஜட்ஜ்ட்d
Begged -
பெக்ட்d
Cleaned -
க்ளீண்ட்d
இவை சொற்களின் முடிவில் (ட்D) எனும் விதமாக ஒலிப்பவைகள்.

Stopped - /t/
Laughed - /t/
Washed - /t/
Watched - /t/
Talked - /t/
இவை முடிவில் (ட்t) போன்று ஒலிப்பவைகள்.

Needed -
நீdடட்d
Collected -
கலெக்டட்d
இவை முடிவில் (டட்d) போன்று ஒலிப்பவைகள்.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக