இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உலகின்
மிகப்பெரிய காலர் ஐடி செயலியான ட்ரூகாலர்-ல் சீட்டா மொபைல் நிறுவனத்தை சேர்ந்த
பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தனியுரிமை குறைபாட்டை கண்டறிந்துள்ளனர். இந்த
குறைபாட்டின் காரணமாக நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களின் தனிப்பட்ட
தகவல்கள் ஆபத்தில் உள்ளன.
சீட்டா மொபைல்
நிறுவனம் அதன் அறிக்கையில் இதுகுறித்து கூறுகையில், ட்ரூகாலர் அதன் பயனர்களுக்கு
அடையாளங்களை ஒதுக்குவதற்கு அவர்களது சாதனத்தின் IMEI எண்ணை பயன்படுத்துகிறது.
அதாவது ஒரு மொபைல் சாதனத்தின் IMEI எண்ணை அணுக முடிகின்ற எவரும் வெளிப்படையான
ஒப்புதல் இல்லாமல் உங்கள் தனிப்பட்ட தகவல்களுடன் மோசடி செய்ய முடியும்.
இந்த
பாதுகாப்பு குறைபாட்டை தவறாக பயன்படுத்துவதன் மூலம் "கணக்கு பெயர், பாலினம்,
மின்னஞ்சல், சுயவிவரப் படம், வீட்டு முகவரி" போன்ற விவரங்களைத் திருடவோ
அல்லது மாற்றியமைக்கவோ முடியும். மேலும் ஹேக்கர்களால் பயன்பாட்டு அமைப்புகளை மாற்ற
இயலும், ஸ்பேம் பிளாக்கர்களை முடக்க முடியும் மற்றும் பயனர்கள் கருப்புபட்டியலை
மாற்ற அல்லது நீக்க முடியும்.
ட்ரூகாலர்
செயலி விரைவாக இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து ஆராய்ந்து பிழையை சரி
செய்துள்ளது. ஆனாலும் பயனர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்காக கடந்த 22 அன்று வெளியிடப்பட்ட செயலின் சமீபத்திய பதிப்பை
அப்டேட் செய்ய வேண்டும்.
ட்ரூகாலர்
நிறுவனத்தின் அறிக்கையின் படி, இந்த பாதிப்பின் விளைவாக இதுவரை "எந்தவொரு
பயனர் தகவல்களும் சமரசம் செய்யப்படவில்லை" என கண்காணிப்பு பகுப்பாய்வு
குறிப்பிடுகிறது என தெரிவித்துள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக