இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மியான்மர்
நாட்டில் பச்சை மாணிக்கம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில்
சிக்கிய 13 பேர் உயிரிழந்தனர்.மியான்மர் நாட்டின் வடக்கு பகுதியில் தங்கம் மற்றும்
விலையுயர்ந்த கனிமங்கள் ஏராளமாக பூமிக்குள் புதைந்துள்ளன.
இவற்றை வெட்டி எடுக்கும் பணியில் பல்வேறு வகையான சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. அவ்வகையில், அந்நாட்டின் கச்சின் மாநிலத்துக்குட்பட்ட பாகன்ட் பகுதியில் உள்ள பச்சை மாணிக்கம் வெட்டி எடுக்கும் ஒரு சுரங்கத்துக்குள் இன்று அதிகாலை தொழிலாளர்கள் உறங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த சுரங்கத்தின் ஒருபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அந்த சுரங்கத்தின் மேல் பகுதி இடிந்து சுமார் 700 அடி ஆழத்தில் உள்ளே உறங்கியவர்களின் மீது விழுந்து மூடியது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிருக்கு போராடிய இருவரை காயங்களுடன் மீட்டனர். மேலும், உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக