இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தற்போது உலகம்
முழுக்க இ-வாலெட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும், நாம் வாங்கும்
பொருட்களுக்கும், அல்லது வணிகம் தொடர்பானவைகளுக்கு நாம் பணத் நேரடியாக செலுத்தாமல்
டிஜிட்டல் வாயிலாக செலுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
தற்போது,
இந்தியாவிலும் கூகுள் பே, அமேசான்பே, பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு ஆப்கள்
இருக்கின்றன. வாட்ஸ் ஆப் நிறுவனம் இதை இந்தியாவில் செயல்படுத்த முனைப்பு காட்டி
வந்தது. மத்திய அரசுடன் நடந்த பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்போது
வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பும் வசதியும் வந்துள்ளது.
ஒரு சிலர்
குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று கூறுவதை போல கொண்டுள்ளனர்.
டிஜிட்டல் வாலெட்கள்:
இந்தியாவில்,
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, இ-வாலெட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில்
கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம், மொபிக் விக், ட்ரூ காலர் பே உள்ளிட்டவைகள்
மக்களிடம் புழகத்கதில் இருந்து வருகின்றது. இந்த மூலம் மக்கள் கடைகள், தாங்கள்
செல்லும் இடங்களிலும் பணத்தை எளிதாக இ- வாலெட்கள் மூலம் செலுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் ஆப் புழக்கம் :
உலகளவில்
இந்தியாவில் தான் வாட்ஸ் ஆப் புழகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. வாட்ஸ்
பயன்பாடானது இந்தியாவில் அதிமாக பயன்படுத்துவதால் முதலிடத்தில் இருக்கின்றது.
இதில் பல்வேறு அப்டேட்களும் இருந்து வருகின்றன.
இந்தியாவில் வாட்ஸ் ஆப் பே:
இந்தியாவில்
வாட்ஸ் ஆப் பே கொண்டு வர பல்வேறு முயற்சிகளை ஏற்கனவே நடத்தியது. இந்தியாவில் அதிக
பேர் பயன்படுத்தும் செயலியாக இருப்பதால், வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பும் வசதியை
செயல்படுத்த முனைப்பு காட்டியது. இதற்கு ரிசர்வ் வங்கி மற்றும் மத்தியரசு பல்வேறு
கட்டுப்பாடுகளையும் விதித்தன.
பேச்சு வார்த்தை தோல்வி:
இது குறித்து
வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் குழு மத்தியரசு மற்றும் ரிசர்வ்
வங்கி அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். இந்திய அரசு கூறிய
நிபந்தனைகளை நிறைவேற்றுமாறு வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு உத்தரவும் விளக்கமும்
அளிக்கப்பட்டது.
பணம் அனுப்பும்
நடவடிக்கைகளை இந்தியாவில் சர்வர் அமைத்து சேமிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து
கணக்கு விவரங்களை கேட்க கூடாது என்று கூறியது.
தோல்வியில் முடிந்த வாட்ஸ் ஆப் பேமெண்ட்:
ஏற்கனவே கடந்த
பிப்ரவரி மாதம் வாட்ஸ் அப் பீட்டா வெர்சனில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி சோதனை
முறையல் கொண்டுவரப்பட்டது. இதில் 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்தனர்.
பின்னர், ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வாட்ஸ்அப் பேமண்ட் தொடங்கப்பட்டது. ஆனால்,
அது தோல்வியில் முடிந்தது.
விரைவில் அறிமுகம் :
இந்த சூழலில்
தற்போது அதிகாரப்பூர்வமான வாட்ஸ்அப் பேமண்ட் வசதி கொண்டு வரப்படுகிறது.
இந்தியாவில் சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் பயன்படுத்தி
வருகின்றனர். வாட்ஸ்அப்பில் பேமண்ட் சேவை வரும் பட்சத்தில், பயனாளர்களின்
எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக