Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 18 ஜூலை, 2019

ஆங்கில பாடப் பயிற்சி 15 (was/were going to)



Image result for was/were going to


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இன்று நாம் Grammar Patterns -1 றின் பதினான்காவதாக அமைந்திருக்கும் வாக்கியத்தை விரிவாகக் கற்போம்.

இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு நீங்கள் புதிய வருகையாளர் என்றால், உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து தொடர்வதே பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனனம் செய்துக்கொள்ளுங்கள்.

சரி இன்றைய பாடத்திற்குச் செல்வோம்.

நாம் கடந்தப் பாடத்தில் “am/is/are going to” எனும் வாக்கிய அமைப்புகள் பற்றி கற்றோம். அவை எதிர்காலப் பயன்பாடுகளுக்கு உரியவை.

இன்று நாம் “was/were going to” என்பதன் பயன்பாட்டை விரிவாகப் பார்ப்போம்.

14. I was going to do a job.
நான் செய்யப்போனேன் ஒரு வேலை.

இவ்வாக்கிய அமைப்புகளின் பயன்பாடானது நாம் ஏதாவது ஒரு செயலை செய்ய திட்டமிட்டிருப்போம் (கடந்தக் காலத்தில்) ஆனால் அத்திட்டம் நிறைவேறாமல் அல்லது செயல்படுத்த முடியாமல் போயிருக்கும். இவ்வாறான வாக்கிய அமைப்புக்களை “The Future in the Past” என்கின்றனர்.

உதாரணம்:

I was going to visit to Tamil Nadu, but I couldn't get a visa.
நான் (பார்க்க) போகப்போனேன் தமிழ்நாட்டிற்கு ஆனால் எனக்கு கிடைக்கவில்லை வீசா.

I was going to watch a movie, but there wasn't enough time.
நான் பார்க்கப்போனேன் ஒரு திரைப்படம், ஆனால் நேரம் போதுமானதாக இருக்கவில்லை.

நான் (பார்க்க) போகப்போனேன் தமிழ்நாட்டிற்கு. இதில் “போகப்போனேன்” எனும் சொல், போகத் திட்டமிட்டிருந்தேன் எனும் பொருளிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + going to + Main verb
1. I/ He/ She/ It + was + going to + do a job.
2. You/ We/ They + were + going to + do a job.

Negative
Subject
+ Auxiliary verb + not + going to + Main verb
1. I/ He/ She/ It + was + not + going to + do a job.
2. You/ We/ They + were + not + going to + do a job.

Question (Interrogative)
Auxiliary verb + Subject + going to + Main verb
1. Was + I/ he/ she/ it + going to + do a job?
2. Were + you/ we/ they + going to + do a job? இவற்றில் "Auxiliary verb "துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலும் “Subject” ற்கு பின்னால் "going to" வந்துள்ளதையும் அவதானியுங்கள்.

இன்றையப் பாடத்தில் “First Person Singular and Third person Singular”, “Second Person Singular and Plural” போன்றவற்றின் போது ஏற்படும் வேறுப்பாடுகளைக் கீழே காட்டப்பட்டுள்ளது.

ஒலிவடிவிலும் பயிற்சி செய்யலாம் (Listening Practice)

Future in the Past...


பகுதி 1

Was I going to do a job?
நான் செய்யப்போனேனா ஒரு வேலை?
Yes, I was going to do a job.
ஆம், நான் செய்யப்போனேன் ஒரு வேலை.
No, I was not going to do a job. (wasn’t)
இல்லை, நான் செய்யப்போகவில்லை ஒரு வேலை.

Was he going to go to school?
அவன் போகப்போனானா பாடசாலைக்கு?
Yes, he was going to go to school.
ஆம், அவன் போகப்போனான் பாடசாலைக்கு.
No, he wasn’t going to go to school. (was + not)
இல்லை, அவன் போகப்போகவில்லை பாடசாலைக்கு.

Was she going to learn English?
அவள் கற்கப்போனாளா ஆங்கிலம்?
Yes, she was going to learn English.
ஆம், அவள் கற்கப்போனாள் ஆங்கிலம்.
No, she wasn’t going to learn English. (was + not)
இல்லை, அவள் கற்கப்போகவில்லை ஆங்கிலம்.

பகுதி 2

Were you going to do a job?
நீ செய்யப் போனாயா ஒரு வேலை?
Yes, you were going to do a job.
ஆம், நீ செய்யப்போனாய் ஒரு வேலை.
No, you weren’t going to do a job. (were + not)
இல்லை, நீ செய்யப்போகவில்லை ஒரு வேலை.

Were we going to speak in English?
நாங்கள் பேசப்போனோமா ஆங்கிலத்தில்?
Yes, we were going to speak in English.
ஆம், நாங்கள் பேசப்போனோம் ஆங்கிலத்தில்.
No, we weren’t going to speak in English. (were + not)
இல்லை, நாங்கள் பேசப்போகவில்லை ஆங்கிலத்தில்.

Were they going to learn English grammar?
அவர்கள் படிக்கப்போனார்களா ஆங்கில இலக்கணம்?
Yes, they were going to learn English grammar.
ஆம், அவர்கள் படிக்கப்போனார்கள் ஆங்கில இலக்கணம்.
No, they weren’t going to learn English grammar. (were + not)
இல்லை, அவர்கள் படிக்கப்போகவில்லை ஆங்கில இலக்கணம்.

இப்பொழுது கீழே இருபத்தைந்து “Affirmative Sentences” வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயிற்சி செய்வோம்.

1. I was going to join the military.
நான் சேரப்போனேன் இராணுவத்தில்.

2. I was going to tell a lie.
நான் சொல்லப்போனேன் ஒரு பொய்.

3. I was going to die in the accident.
நான் சாகப்போனேன் விபத்தில்.

4. I was going to fly to Canada
நான் பறக்கப்போனேன் கனடாவிற்கு.

5. I was going to go on vacation.
நான் போகப்போனேன் விடுமுறையில்

6. I was going to say my love.
நான் சொல்லப்போனேன் எனது காதலை.

7. I was going to send a SMS.
நான் அனுப்பப்போனேன் ஒரு குறுந்தகவல்.

8. I was going to go to university.
நான் போகப்போனேன் பல்கலைக் கழகத்திற்கு.

9. I was going to buy a BMW car.
நான் வாங்கப்போனேன் ஒரு BMW மகிழூந்து.

10. I was going to wash the dishes.
நான் கழுவப்போனேன் தட்டுகளை.

11. I was going to write my autobiography.
நான் எழுதப்போனேன் எனது சுயசரிதையை.

12. I was going to go swim in the sea.
நான் நீந்தப்போனேன் கடலில்.

13. I was going to play in the playground
நான் விளையாடப்போனேன் விளையாட்டு மைதானத்தில்

14. I was going to buy a motorcycle.
நான் வாங்கப்போனேன் ஒரு உந்துருளி.

15. I was going to miss the bus.
நான் தவறவிடப்போனேன் பேரூந்தை.

16. I was going to fight with them.
நான் சண்டையிடப்போனேன் அவர்களுடன்.

17. I was going to waste my time.
நான் வீணடிக்கப்போனேன் எனது நேரத்தை.

18. I was going to seek political asylum in Thailand.
நான் அரசியல் புகலிடம் கோரப்போனேன் தாய்லாந்தில்.

19. I was going to watch a movie
நான் பார்க்கப்போனேன் ஒரு திரைப்படம்.

20. I was going to go to the party
நான் போகப்போனேன் விருந்துபச்சார நிகழ்விற்கு

21. I was going to join the gym.
நான் சேரப்போனேன் தேகப் பயிற்சிச் சாலையில்.

22. I was going to die in Sri Lankan air raid
நான் சாகப்போனேன் சிறி லங்கா விமானத் தாக்குதலில்.

23. I was going to kill him
நான் கொல்லப்போனேன் அவனை.

24. I was going to take some photos
நான் எடுக்கப்போனேன் சில புகைப்படங்கள்.

25. I was going to travel around the world.
நான் பிரயானம் செய்யப்போனேன் உலகம் சுற்றிலும். (முழுவதும்)

Homework:

1. மேலே நாம் கற்ற 25 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

2. மேலும் He, She, It, You, They, We போன்றச் சொற்களை இணைத்து வாக்கியங்கள் அமைத்து பயிற்சிப் பெறுங்கள்.

3. உங்கள் வாழ்க்கையில் (அதைச் செய்யப்போனேன், இதைச் செய்யப்போனேன் என) நீங்கள் வகுத்த எத்தனையோ எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், எதிர்ப்பார்ப்புக்கள் இருந்திருக்கும், அவற்றில் நிறைவேறாமல் போனவைகளைப் பட்டியல் இட்டுக்கொள்ளுங்கள். பின் அவற்றை இன்று நாம் கற்றதுப் போன்று ஆங்கிலத்தில் எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

4. கீழுள்ளவாறு நீண்ட சொற்தொடர்களாகவும் எழுதி பயிற்சி செய்யலாம்.

I was going to visit my uncle in Point Pedro last year, but I couldn't get the pass.
நான் பார்க்கப் போகப்போனேன் என் மாமாவை பருத்தித்துறைக்கு, ஆனால் எனக்கு கிடைக்கவில்லை பயன அனுமதி. (எனவே மாமாவை பார்க்கும் திட்டம் நிறைவேறவில்லை)

I was going to wash the dishes, but there wasn't enough time.
நான் கழுவப்போனேன் தட்டுகளை, ஆனால் நேரம் (போதுமானதாக) இருக்கவில்லை.

I was going to rent a motorbike but I rented a car instead.
நான் வாடகைக்கு எடுக்கப்போனேன் ஒரு உந்துருளி ஆனால் (அதற்குப்) பதிலாக வாடகைக்கு எடுத்தேன் ஒரு மகிழூந்து.

I was going to take some photos but I forgot my camera.
நான் எடுக்கப்போனேன் சில புகைப்படங்கள் ஆனால் நான் மறந்துவிட்டேன் (எடுத்துச்செல்ல) புகைப்படக் கருவியை.

I was going to go to Kowloon park but I had homework to do at home.
நான் போகப்போனேன் கவ்லூன் பூங்காவிற்கு ஆனால் எனக்கு இருந்தது வீட்டுப் பாடங்கள் செய்வதற்கு வீட்டில்.

கவனிக்கவும்:

இன்றைய வாக்கிய அமைப்புகளில் (Forms) பயன்படுத்தப்பட்டிருக்கும், செய்யப்போனேன், போகப்போனேன், எடுக்கப்போனேன், பார்க்கப்போனேன் போன்ற சொற்தொடர்கள் ஒரு செயலை செய்ய எத்தனித்தேன், தயாரானேன் அல்லது முயற்சித்தேன் போன்ற அர்த்தங்களிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

went - போனேன்

“போனேன்” எனும் இறந்தக்கால வினைச் சொல்லாக இங்கே பயன்படவில்லை என்பதை நினைவில் கொள்க.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இன்றையப் பாடம் தொடர்பான சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் வழமைப்போல் பின்னூட்டம் இட்டோ மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக