இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கோவில் என்றாலே அதில் ஒரு தனி சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு.
இன்று நாம் காண இருக்கும் கோவிலின் சிறப்பை அறிந்தால் நிச்சயம் ஆச்சர்யப்படுவீர்கள் என்றால் அது மிகையாகாது. ஆம், இன்று நாம் காண இருக்கும் கோவில் நேபாளத்தில் இருக்கும் ஒரு சிவாலயமாகும்.
நேபாளின் காசி என்று போற்றப்படும் பசுபதிநாத் கோவில், உலகிலுள்ள மிகப்பெரிய கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புகழ்பெற்ற கோவிலாகும்.
இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இக்கோவிலில் சிவபெருமான் நான்கு முக லிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
தென்னிந்திய ஆலயங்களில் உள்ளது போன்று, கர்ப்ப கிரகம் இங்கு இல்லை.
சிவனுக்கு எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்திசிலை அமைந்துள்ளது.
இக்கோவிலின் சிறப்பு :
இக்கோவில் சீனாவில் உள்ள பகோடா முறையின் அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. கனசதுர வடிவில் மரங்களைக் கொண்டும் தாமிர மேற்கூரையில் தங்க முலாம் பூசப்பட்டும் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் வாயில்கள் அனைத்துமே வெள்ளியால் செய்யப்பட்டவையாகும். கோவிலின் மேல் தங்கத்தால் ஆன கலசம் உள்ளது.
பசுபதிநாத் சிலையானது ஆறடி உயரத்தில் ஆறடி சுற்றளவில் கருங்கல்லால் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சிவனை வழிபடுகின்றனர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக