இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்..
இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆறு மேலகிரி வழியாக பாயும் இடத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கும் மலைப்பாறைகள் மத்தியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி பகுதிதான் ஒகேனக்கல்.
வரிசையாக அருவிகள் விழும் இந்த பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி 'இந்தியாவின் நயாகரா" என்றும் அழைக்கப்படுகிறது.
இது தர்மபுரியில் இருந்து ஏறத்தாழ 48 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 343 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
இந்த நீர்வீழ்ச்சிப் பகுதியில் காணப்படும் பாறைகள் தெற்காசியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிக பழமையானதாகவும் கருதப்படுகின்றன.
கோடைக்காலத்தில் ஆற்றின் வேகம் குறையும்போது இந்த பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் பரிசல் சவாரி செய்வது ஒரு வித்தியாசமான அனுபவமாக பயணிகளால் ரசிக்கப்படுகிறது.
நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு அருகிலேயே அப்போதே நீரில் பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக பயணிகளுக்கு பொரித்து தரப்படுவது மற்றொரு சுவாரஸ்யம்.
அச்சுறுத்தும் மலைப்பாறை அமைப்புகளும், நீரின் அழகும் ஒகேனக்கல் பகுதியில் காணப்படுவதை போன்று வேறெங்கும் இல்லை எனும் அளவுக்கு வித்தியாசமான இயற்கை அமைப்புடன் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி காட்சியளிக்கிறது.
பரிசல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். எண்ணெய் குளியல் இங்கு பிரபலம்.
மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி என விழுந்து எழுகிறது காவிரி. அருவிகளின் அழகை கண்டு ரசிக்க காவிரி ஆற்றின் குறுக்கே தொங்குப் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தை தாண்டி கர்நாடகம், ஆந்திரம், கேரள மாநிலங்களில் இருந்தும் படையெடுக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க புரியாகவும் இந்த ஒகேனக்கல் அருவி அமைந்துள்ளது.
மனக்கவலைகள் யாவும் மறைந்து சாந்தத்தை அளிக்கும் சக்தி படைத்த இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டில் அனைவரும் ஒரு முறை விஜயம் செய்தே ஆக வேண்டிய இயற்கை எழில் மிகுந்த ஒரு இடமாகும்.
எப்படி செல்வது?
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் தர்மபுரிக்கு பேருந்து வசதி உள்ளது.
தர்மபுரியிலிருந்தும் ஒகேனக்கலுக்கு பேருந்து வசதி உள்ளது.
விமானம் வழியாக :
சேலம் விமான நிலையம்.
ரயில் வழியாக :
தர்மபுரி ரயில் நிலையம்.
சேலம் ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
மழைக்காலங்களில் சென்றால் அருவிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழலாம்.
எங்கு தங்குவது?
தர்மபுரியில் பல்வேறு கட்டணங்களுடன் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
முதலை பண்ணை.
மேலகிரி மலை.
அதியமான் கோட்டம், அதியமான் கட்டி பெருமாள் கோவில்.
காலபைரவர் கோவில்.
கோட்டை கோவில்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
சுப்பிரமணிய சிவா நினைவிடம்.
தீர்த்தமலை கோவில்.
அனுமந்த தீர்த்தம்
சென்றாய பெருமாள் கோவில்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக