Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 29 ஜூலை, 2019

ருசியான மதுரை பன் பரோட்டாவும்.. நாட்டுக் கோழி கிரேவியும்.. அப்பத்தா கைப் பக்குவத்துடன்.. அசத்துதுல்ல



 வேறு என்ன ஸ்பெஷல்?
 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


மதுரை மாநகரில் பல தரப்பட்ட உணவகங்கள் உணவுகள் இருந்தாலும் இங்கு ரொம்ப பிரபலம் மதுரை பன் பரோட்டாவும் இதற்கு காம்பினேஷனாக கொடுக்கும் நாட்டுக் கோழி கிரேவியும் அடித்துக் கொள்ள முடியாது என்கிறார்கள் மதுரை மக்கள். 

ஆமாங்க.. இதை பார்த்த உடனே நா ஊறுகிறதல்லவா? இது தான் இந்த தொழிலின் வெற்றியே என்கிறார், மதுரை பன் பரோட்டா உரிமையாளர் அண்ணாச்சி கருப்பணன். நிஜமாதாங்க.. 

கடந்த 28 வருடங்களாக வெற்றிகராக நடத்திக் கொண்டிருப்பதற்கும் இந்த அபாராமான ருசியே காரணம் என்கிறார். 

அபாராமான சுவை? 

 எல்லா ஊர்களிலும் பரோட்டா கிடைக்கும். ஆனால் இந்த அளவுக்கு ருசி இருக்குமா என்றால் இருக்காது. அதை நீங்கள் வந்து சாப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே தெரியும் என்கிறார் அண்ணாச்சி. இதற்கு காரணம் மாவு பிசையும் விதமும் அதை செயல்படுத்தும் விதமுமே காரணம் என்கிறார். 

இங்கு என்ன பிரபலம்?

மதுரையை பொறுத்த வரை வித விதமான ருசி ருசியான கடைகள் பல இருந்தாலும், பல கடைகளின் பரோட்டா கிடைத்தாலும், இங்கு கிடைப்பது போல் எங்கும் கிடைக்காது என்கிறார்கள். 

இந்த புரோட்டா பன் போல நல்ல உப்பலாக மிருதுவாக, மேல்புறம் கிரிஸ்பியாக இருக்கும் இந்த பரோட்டாவை ஒரு முறை உண்டால், மீண்டும் தானாக தேடி வருவீர்கள் என்றும் சொல்கிறார் இந்த அண்ணாச்சி. 

இவ்வளவு ருசியான பரோட்டா எப்படி? 

இங்கு செய்யப்படும் இந்த பன் பரோட்டாவிற்கு 3 - 4 மணி நேரத்திற்கு முன்பே மாவு பிசைய ஆரம்பித்துவிடுவார்களாம். ஆமாங்க.. பால், முட்டை, கொஞ்சம் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து பிசைந்து 4 மணி நேரம் நன்கு பிசைந்து ஊற வைக்க வேண்டுமாம். 

இப்படி ஊற வைத்து, பிசைந்து, மாஸ்டரின் கைப்பக்குவத்தால் வருவதே இந்த பன் பரோட்டா என்றும் பெருமையாக கூறுகிறார் அண்ணாச்சி. 

பன் பரோட்டாவின் விலை எப்படி?

இந்த பன் பரோட்டாவின் விலை ஒன்றுக்கு 15 ரூபாயாம். இதற்காக நமக்கு எந்த வகையான குருமா வேண்டுமானலும் வாங்கிக் கொள்ளலாமாம். அதிலும் குறிப்பாக நாட்டுக் கோழி கிரேவி, மட்டன் கிரேவி, குடல் கிரேவி என மூன்று வகையாக அசத்துகிறார்களாம்.

அதிலும் இவர்களின் நாட்டுக் கோழி கிரேவியை அடித்துக் கொள்ள வேறு ஆளோ இல்லை என்கிறார்கள் இங்கு வரும் ரெகுலார் வாடிக்கையாளர்கள்.

வாடிக்கையாளர்கள்?

இங்கு வரும் உள்ளூர் வாடிக்கையாளர்கள் தான் இந்த பன் பரோட்டாவிற்கு அடிமை எனில், வெளி நாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இதற்கு அடிமையாம். ஆமாங்க.. அதிலும் பன் பரோட்டாவும் நாட்டுக் கோழி கிரேவியும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்களாம். இந்த ஊர் ஆட்டோகாரர்களும் டூரிஸ்டுகளும் கூட்டிக் கொண்டு வரம் கடை நம்ம அண்ணாச்சி கடைதானாம்.

எவ்வளவு விற்பனை? 

இது வியாபார ரகசியம் என்று சிரித்துக் கொண்டே சொல்லும் அண்ணாச்சி தற்போது மற்றொரு கடையை ஆரம்பித்துள்ளாராம். ஆமாங்க.. ஒன்றும் மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஆவின் பால் அருகில் உள்ளதாம், இது தான் அண்ணாச்சியின் 28 வருட பாரம்பரிய கடையாம். இதுவே மதுரை அண்ணா நகரில் தற்போது தான் ஆரம்பித்து இருக்கிறராம். ஒரு நாளைக்கு அண்ணா நகரில் 30 மாவு பிசைவார்களாம். இதுவே கே.கே நகர் கடையில் சாதரணமான நாட்களில் 100 மாவும், விடுமுறை நாட்களில் 120 மாவும் பிசைவார்களாம்.

எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? 

 கே.கே நகரில் உள்ள கடையில் தற்போதைக்கு 15 பேரும், இதே அண்ணா நகரில் உள்ள கடையில் 10 பேரும் வேலை செய்கிறார்களாம். இதன் மூலம் 25 குடும்பங்களுக்கு உதவி செய்ய முடிகிறது என்று கூறுகிறார் அண்ணாச்சி. ஆமாங்க, இவரின் கடையில் வேலை செய்பவர்கள் அனைவருமே வருடக் கணக்கில் வேலை செய்பவர்கள் தானாம்.

 சரி வருமானம் எப்படி?
 
கே. கே நகரில் உள்ள் கடை சொந்தக் கடையாக இருந்தாலும், அண்ணா நகரில் உள்ள கடை வாடகை கடை என்றும் கூறுகிறார். அதிலும், தற்போது ஆள் சம்பளம், பரோட்டா மாஸ்டர்களுக்கு தனி சம்பளம், மளிகை பொருட்களின் விலை கன்னாபின்னாவென்று ஏறிக் கிடக்கிறது என்கிறார். 1000 கிடைக்கிறது எனில் தற்போது 700 - 800 ரூபாய் மற்ற செலவினங்களுகே செலவாகி விடுகிறது.இதனால் வருமானம் குறைவு தான். இருப்பினும் நிம்மதியான வருமானம் என்றும் கூறுகிறார்.
 
 வேறு என்ன ஸ்பெஷல்? 

இங்கு பரோட்டா மட்டும் அல்ல மதுரையின் மிகப்பிரபலமான உணவான, கறிதோசையும் மிகப்பிரபலம் என்று கூறுகிறார். ஆமாங்க.. இது மட்டும் அல்லாது சிலோன் முட்டை பரோட்டா, முட்டை பரோட்டா, என்றும் இதற்கு சைடு டிஸ்ஸாக சிக்கன் கிரேவி, காடை கிரேவி, ஆட்டு ஈரல் கிரேவி, மட்டன் கிரேவி என அசத்துகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் விரும்பி உண்ணும் அளவுக்கு தான் காரம் என்பது மீடியாமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். 

எப்ப சார் கடையை திறப்பீங்க? 

இந்த பன் பரோட்டா கடை கே.கே நகரில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கூட இருக்கும். இதுவே அண்ணா நகரில் உள்ள கடையில் மாலை 3 மணிக்கெல்லாம் களை கட்டிவிடுமாம். இரவு 11மணி வரை இருக்குமாம். வாங்களேன் நாமும் ஒரு முறை அண்ணாச்சி கடைக்கு சென்று பார்த்து தான் வருவோம்,

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக