Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 27 ஜூலை, 2019

அன்ரிசர்வுடு பெட்டிகளில் இனி ஈஸியா சீட் பிடிக்கலாம்! புதிய பயோமெட்ரிக் முறை அறிமுகம்!



தற்பொழுது நடைமுறையில்  

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com





முன்பதிவு செய்யாத பயணிகள் ரயிலில் பயணம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு விஷயமாக இருந்து வந்தது, இதற்குத் தீர்வாக தற்பொழுது, இந்திய ரயில்வே துறை முதல் முறையாக இந்தியாவில் பயோமெட்ரிக் அடையாள முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அனைவருக்கும் சீட்
 
பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய ரயில்வே முதல் முறையாகப் பயணிகளுக்கு உதவும் விதத்தில், இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க இந்த பயோமெட்ரிக் முறையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

 பயோமெட்ரிக் அடையாள முறை

மேற்கு ரயில்வே பிரிவின் மும்பை மத்திய ரயில் நிலையம் மற்றும் பாந்த்ரா டெர்மினஸில் இந்த புதிய பயோமெட்ரிக் திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கு இடங்களை உத்தரவாதம் செய்வதற்காகவே இந்த பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக விரோதிகள் பயணத்தை கண்காணிக்க

முன்பதிவு செய்யாத பெட்டிகளில் எப்பொழுதும் பயணிகளிடையே பெரிய அளவில் நெரிசலும், பிரச்சனைகளும் நிகழ்கிறது. இந்நிலையைச் சமாளிப்பதற்கும் சமூக விரோதிகள் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதை கண்காணிக்கவும், இந்த பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கை ரேகையை வைத்துப் பதிவு டோக்கன்

 இம்முற்றைப்படி பயணிகள் பயோமெட்ரிக் இயந்திரத்தில் அவர்களின் கை ரேகையை வைத்துப் பதிவு செய்தவுடன் டோக்கன் வழங்கப்படும். ரயில்வே காவல்துறை உதவியுடன், டோக்கன் இல் உள்ள பதிவ எண் படி பயணிகள் வரிசையில் நிறுத்தப்படுவர். 

இதனால் நெரிசல் இல்லாமல், குழப்பம் இல்லாமல் அனைவருக்கும் இடங்கள் முறையாய் வழங்கப்படும். 

திருடர்களை அடையாளம் காண உதவும் பயோமெட்ரிக் 

ரயில்வே காவல்துறையினர் டோக்கன்களை சோதித்த பிறகு பயணிகள் முன்பதிவில்லா பெட்டிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முன்னாள் வந்து டோக்கன் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டும். 

அதுமட்டுமில்லாமல் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) உதவியுடன் கைரேகை பதிவுகள் மூலம் சாத்தியமான திருடர்களை அடையாளம் காண இந்த பயோமெட்ரிக் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. 

தற்பொழுது நடைமுறையில் தற்பொழுது நடைமுறையில் மும்பை மத்திய ரயில் நிலையம் மற்றும் பாந்த்ரா டெர்மினஸ் நிலையத்திற்கு தலா 2 பயோமெட்ரிக் இயந்திரம் என மொத்தம் 4 இயந்திரங்களை இந்திய ரயில்வே முதல் கட்ட நடவடிக்கையாக நிறுவியுள்ளது.

அமராவதி எக்ஸ்பிரஸ், ஜெய்ப்பூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கர்னாவதி எக்ஸ்பிரஸ், குஜராத் மெயில், கோல்டன் டெம்பிள் மெயில் போன்ற ரயில்களில் இந்த பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக