Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 16 ஜூலை, 2019

டிக்... டிக்...

 Image result for டிக்... டிக்... yaarathu thirudan

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கிராமத்தில் உள்ள குழந்தைகள் விளையாடும் இந்த விளையாட்டுக்களை பற்றி நவீன கால குழந்தைகளிடம் கேட்டால், இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறதா? என்று கேட்பார்கள்.

என்னதான் மொபைல்போன் மற்றும் கணினியில் விளையாடினாலும் கிராமங்களில் விளையாடுகின்ற விளையாட்டுகளுக்கு அவை இணையாவதில்லை.

கிராமப்புறங்களில் விளையாடப்படும் மிக சுவாரஸ்மான விளையாட்டுகளில் ஒன்றுதான் டிக்... டிக்... யாரது?

எத்தனை பேர் விளையாடலாம்?

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர்.

எப்படி விளையாடுவது?

முதலில் திருடனாக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்விளையாட்டு கேள்வி பதில் முறையில் விளையாடப்படும். கேள்வி பதில் பாடல் போல் இருக்கும்.

திருடனாக இருக்கும் நபர் முதலில் டிக் டிக் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.

திருடன் : டிக்... டிக்...

மற்றவர்கள் : யாரது?

திருடன் : திருடன்

மற்றவர்கள் : என்ன வேண்டும்?

திருடன் : நகை வேண்டும்.

மற்றவர்கள் : என்ன நகை?

திருடன் : கலர் நகை.

மற்றவர்கள் : என்ன கலர்?

திருடன் : பச்ச கலர் (சுற்றுபுறத்தில் என்னென்ன கலர் இருக்கிறதோ அந்த வண்ணங்களில் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும்.)
அவ்வாறு கலர் சொல்லியவுடன் அனைவரும் ஓடிப்போய் அந்த கலர் உள்ள பொருளைத் தொட வேண்டும்.

கலரை தொடுவதற்கு முன்னால் பிடிப்பவர் யாரை துரத்தி பிடிக்கிறாரோ அவர் ஆட்டமிழந்தவர். அவர் மீண்டும் விளையாட்டை ஆரம்பித்து மற்றவர்களை பிடிக்க வேண்டும்.

திருடனாக இருப்பவர் எந்த கலரை வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனால், இரண்டு வண்ணங்கள் அதாவது கலவை வண்ணங்களை சொல்லக்கூடாது.

விளையாட்டின் பயன்கள் :

வண்ணங்களை தெரிந்து கொள்ளலாம்.

நினைவுத்திறனை அதிகரிக்கிறது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!