இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கோழி முட்டையிட்டு
கேள்விப்பட்டிருப்போம்... அட... பறவைகள் கூட முட்டையிடும் என்று
கேள்விப்பட்டிருப்போம். ஆனால், குன்று முட்டையிடும் என்று நீங்கள்
கேள்விப்பட்டதுண்டா?
ஆமாங்க... குன்று கூட
முட்டையிடுதாம்... நம்பமுடியலையா? படிச்சு தெரிஞ்சுக்கோங்க...
சீனாவின் கைசொவ் மாகாணத்தில்
அமைந்துள்ளது சான் டா யா குன்று. 9 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்ட இக்குன்று
கல் முட்டைகளை இடுவதாக அங்குள்ள கிராம மக்கள் கூறுகின்றனர்.
30 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த
குன்றிலிருந்து கல் முட்டைகள் வெளிவருவதாகவும், இதன் முட்டைகள் சுண்ணாம்பு
பாறைகளால் ஆனவை எனவும் சொல்கின்றனர்.
இந்த குன்றை முட்டையிடும் மலை என்றும்
அங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள். இந்த குன்றில் கல் முட்டைகள் வௌ;வேறு வடிவில்
உருவாகிறது.
விசித்திரமான இம்முட்டைகளை கடவுள்
முட்டைகள் என்றும், அதிர்ஷ்டம் தரும் முட்டைகள் என்றும் நம்புகின்றனர் அப்பகுதி
மக்கள்.
அதுமட்டுமின்றி இந்த கிராமத்தில்
வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஒரு கல் முட்டையாவது இருக்கிறது.
அங்குள்ள மக்கள் முட்டையிடும் குன்றை
கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். இக்குன்றிலுள்ள ஒவ்வொரு முட்டைகளும் ஒவ்வொரு
பாறையினால் ஆனவை.
இந்த குன்றில் எப்படி முட்டைகள்
வடிவில் பாறை மாறுகிறது என்ற மர்மம் இன்றும் கண்டறியப்படவில்லை. இதைப் பற்றிய
ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.
மர்மம் நிறைந்த இந்த மலைக்குன்றுக்கு
பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து இந்த அதிசய கல் முட்டையை பார்த்து
செல்கின்றனர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக